சேவைகள் |
CATEGORIES | ||||||
|
கணினி |
கவிதைகள் |
பெண்கள் உலகம் |
சிறுவர் பூங்கா |
உடல்நலம் |
தமிழ் சினிமா |
ஆன்மீகம் |
நகைச்சுவை(ங்க...)! | ||||||
|
Email Subscribe |
Serch |
|
Statistics |
Online Users |
|
Site Friend |
|
இணைப்பு கொடுக்க |
Code : |
Vote Plz.. |
|
Main » Articles » நகைச்சுவை » பொது | [ Add new entry ] |
ஒரு அதிகாரி மேஜையில் வைத்திருந்த கடிதத்தையும், கவரையும் காணாது தவித்தார். காரணம் அந்தக் கடிதங்களில் முகவரி எழுதாமல் வைத்திருந்தார். பியூனைக் கூப்பிட்டு, "மேஜை மீது வைத்திருந்த கவரைப் பார்த்தாயா? என்று கேட்டார். "அதுவா...! அதைத் தபாலில் போட்டு விட்டேன்" என்றான் பியூன். "தபாலில் போட்டு விட்டாயா? அந்தக்கடிதக் கவரில் விலாசம் எழுதவில்லையே!" என்றார். அதற்கு பியூன், "எனக்குத் தெரியும் சார்! நேற்று நம் அலுவலகத்திற்கு ஒரு மொட்டைக் கடிதம் வந்ததே...அதற்குப் பதில் எழுதியிருப்பீர்கள் என்று நினைத்தேன். அவர்களுக்கும் அட்ரஸ் இல்லாமல் போகட்டும் என்று நினைத்துத் தபாலில் போட்டு விட்டேன்." என்றான் பியூன். உங்களுக்கு ஒண்ணுமே இல்லை ஒருவர் தன் தபால்கார நண்பரைச் சந்தித்தார். நீண்ட நாட்களுக்குப் பிறகு சந்தித்ததால், நண்பர் தபால்காரரைப் பார்த்து, "உங்களைப் போல் வேலை பார்க்க வேண்டும்" என்றார். தபால்காரர், "ஏன்? என் வேலையில் அப்படி எதைக் கண்டு விட்டாய்?" என்றார். அதற்கு நண்பர், "சாலையில் பார்க்கும் எல்லோரும் உன்னைப் பார்த்து, எனக்கு ஏதாவது இருக்கா? என்று கேட்கிறார்கள். நீயும் அவர்களைப் பார்த்து "உங்களுக்கு ஒன்றும் இல்லை" என்கிறாய். அதைக் கேட்டு அவர்களும் கோபப்படுவதில்லை. மேலும் நல்லாப் பார்த்துச் சொல்லுங்க, எனக்கு ஏதாவது இருக்கா? என்று கேட்கிறாங்க. நீயும் "நல்லாத்தான் பார்த்துச் சொல்கிறேன். உங்களுக்கு ஒண்ணுமே இல்லை" என்கிறாய். அவர்களும் பேசாமல் சென்று விடுகிறார்கள். நான் யாரையாவது பார்த்து உங்களுக்கு ஒண்ணுமே இல்லை என்று சொல்ல முடியுமா? அதனால்தான் அப்படிச் சொன்னேன்" என்றார். காணாமல் போன மனைவி ஒருவன் வேகமாக தபால் ஆபீஸ் நோக்கி வேகமாக ஓடி வந்தான். அங்கே இருந்த போஸ்ட் மாஸ்டரிடம், "என் மனைவி மீண்டும் காணாமல் போய் விட்டாள்." என்றான். போஸ்ட் மாஸ்டருக்குக் கோபம் வந்தது. "உன் மனைவி காணாமல் போய் விட்டால் போலீஸ் ஸ்டேசனில் போய் புகார் கொடு. இங்கே வந்து ஏன் சொல்கிறாய்? என்றார். அதற்கு அவன், "எனக்குத் தெரியும் சார்! போன தடவை காணாமல் போன போது அங்கேதான் புகார் கொடுத்தேன். அவர்கள் கண்டுபிடித்துக் கொண்டு வந்து விட்டார்கள்" என்றான். தபால்காரர் போயிட்டாரா...? ஒருவர் பல ஆண்டுகள் தபால்காரராகப் பணிபுரிந்து ஓய்வு பெற்று அமர்ந்திருந்தார். அவரைப் பார்க்க வந்திருந்த நண்பர், "உன்னைப் போல அரசாங்க வேலை பார்த்து ஓய்வு பெற கொடுத்து வைத்திருக்க வேண்டும்" என்றார். அதற்கு அந்த தபால்காரர், " ஆமாம் நீதான் மெச்சிக் கொள்ள வேண்டும். தபால்காரன் வேலை ஒரு வேலையா? காலையில் தபால் ஆபிஸ்க்கு வருகிறவர்கள் "தபால்காரர் போயிட்டாரா?" என்று விசாரிக்கிறார்கள். அதாவது பரவாயில்லை... மாலையில் தபால் ஆபிஸ் வருபவர்கள் "என்ன எடுத்தாச்சா?" என்று விசாரிக்கிறார்கள்." என்று எரிச்சலோடு சொன்னார். ரவி: நான் விமலாவுக்கு போன் பண்ணினப்ப அவங்க அம்மா எடுத்துட்டாங்க... ராமு: அட, அப்புறம் என்ன ஆச்சு? ரவி: ராங் மெம்பர்னு சொல்லி வெச்சுட்டேன் ******************************************************************************************* மகன்: அப்பா! நான் B.A பண்ணவா? M.A பண்ணவா? அப்பா: எதை வேணும்னாலும் பண்ணு என்னை தொந்தரவு பண்ணாதே... ******************************************************************************************* டாக்டர்: ஹலோ! ரவி சவுக்கியமா இருக்கீங்களா? ரவி: சவுக்கியமா இருந்தா ஏன் உங்களை பார்க்க வரேன்? ******************************************************************************************* ரவி: படிப்பை முடிச்சிட்டீங்க மேல என்ன பண்ணப் போறீங்க? ரகு: மேல ஒண்ணும் பண்ண முடியாது. பூமியிலேதான் எதாவது பண்ணனும். ******************************************************************************************* சோகமாக இருந்தார் சிங். ஏன் சோகமாக இருக்கிறாய்?-பல்சிங். பந்தயத்தில் 800 ரூபாய் தோற்றேன். என்ன பந்தயம்? நேற்று இந்தியா, இங்கிலாந்து கிரிக்கெட் போட்டி. இந்தியா ஜெயிக்கும் என்று 500 ரூபாய் பந்தயம் கட்டினேன். தோற்றுப் போனேன். 500 ரூபாய் தானே தோற்றாய். 800 ரூபாய் என்கிறாயே? ‘ஹைலைட்ஸ் காட்டினார்கள்’ அதிலும் பந்தயம் கட்டினேன். ******************************************************************************************* பாமா : பல் ஆஸ்பத்திரிக்கு எப்படிப் போகணும். ராமு : சொத்தையோட போகணும் -------------------------------------------------------------------------------- உமா : நான் புதுசா ஒரு பாட்டு எழுதினேன் பாமா : எதை வைத்து? உமா : பேனாவை வைத்து தான் எழுதினேன்! -------------------------------------------------------------------------------- விஜய் : கொக்கு ஏன் ஒத்தக்கால்லே நிக்குது? அஜய் : இன்னொரு காலைத் தூக்கினால் கீழே விழுந்துடுமே அதுதான். ------------------------------------------------------------------------------- ரேணு : அவங்க ரெண்டு பேருக்குள்ளே என்ன சண்டை. பானு : அவங்களுக்குள்ளே ஆயிரம் இருக்கும். ரேணு : அப்ப ஆளுக்கு ஐநூறா பிரிச்சுக்க வேண்டியதுதானே! -------------------------------------------------------------------------------- கரண் : கழுதைக்குப் பிடித்த ரொட்டி எது? கிரண் : தெரியலியே? கரண் : சுவரொட்டி - தான். கிரண் : ????????? -------------------------------------------------------------------------------- எனக்கு வராத எஸ்.எம்.எஸ் * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * என்ன... தேடறீங்க..? அதான் தலைப்பிலேயே போட்டிருக்கேனே... வராத எஸ்.எம்.எஸுன்னு... ஹி... ஹி... -------------------------------------------------------------------------------- ஒருவன்;" இந்த எறும்பு சாக்பீசை பார்த்தபிறகுதான் எனக்கு ஒரு விஷயம் புரியுது!" இரண்டாமவன்:"என்ன புரிஞ்சிடுச்சு?" முதலாமவன்:"எங்கயாவது ஆக்ஸிடெண்ட் நடந்தா போலீஸ் எதுக்கு சாக் மார்க் போடறாங்க?" இரண்டாமவன்:"எதுக்கு?" முதலாமவன்:"எறும்பு வராம இருக்கத்தான்" -------------------------------------------------------------------------------- சர்தார்ஜியிடம் அவரது நண்பர்: என்ன
இது? ஒரு காலில் பச்சைக் கலர் ஷாக்சும், மற்றொரு காலில் வெள்ளைக் கலர்
ஷாக்சும் அணிந்திருக்கிறாய். | |
Views: 2588 | Comments: 3 | |
Total comments: 3 | |
| |