உலகின் மிகச் சிறந்த பிரவுசர் என்ற உரையுடன் மொஸில்லா நிறுவனம் தன்
பயர்பாக்ஸ் தொகுப்பின் பதிப்பு 3.6 னை ஜனவரி 21ல் வெளியிட்டுள்ளது. இந்த
பிரவுசரின் முதல் சோதனைத் தொகுப்பு வெளியான ஐந்தாவது மாதத்தில் இது
வெளியாகியுள்ளது. எப்படியும் ஒரு நல்ல பிரவுசரைத் தந்துவிட வேண்டும் என்ற வேட்கையுடன் மொஸில்லா உழைத்தது, இந்த பிரவுசரின் இயக்கத்தில் தெரிகிறது.
விண்டோஸ், மேக் மற்றும் லினக்ஸ் இயக்கங்களுக்கான பிரவுசர்கள்
மொஸில்லாவின் தளத்தில் கிடைக்கின்றன. பன்னாட்டளவில் 65 மொழிகளில் இவை
உருவாக்கப்பட்டுள்ளன என்பது மொஸில்லாவின் உலகளாவிய பார்வையினைக்
காட்டுகிறது.
இந்த புதிய தொகுப்பினை என்ற
முகவரியில் உள்ள மொஸில்லா தளத்திலிருந்து பெற்றுக் கொள்ளலாம். ஏற்கனவே 3.5
பதிப்பு இயக்குபவர்கள், பைல் மெனு சென்று Check for Updates என்பதில்
கிளிக் செய்து அப்டேட் செய்து கொள்ளலாம்.
இந்த புதிய பிரவுசரில் ஜாவா ஸ்கிரிப்ட் இயங்குவது
துரிதப்படுத்தப்பட்டு, இணையதளங்கள் மிக வேகமாக இறங்குகின்றன. முந்தைய
பதிப்பினைக் (3.5) காட்டிலும் 12 சதவீதம் வேகம் இருப்பதாக இதனைச் சோதனை
செய்தவர்கள் கூறுகின்றனர். சோதித்துப் பார்த்ததில் 15 சதவீதம் கூடுதல்
வேகம் தெரியவந்தது.
ஆப்பரா பிரவுசரைக் காட்டிலும், பயர்பாக்ஸ் 3.6 மூன்று மடங்கு அதிக
வேகத்தில் இயங்குகிறது. இன்டர்நெட் எக்ஸ்புளோரருடன் ஒப்பிடுகையில், நான்கு
மடங்கு அதிக வேகம் எனலாம். குரோம் பிரவுசரைக் காட்டிலும் 40 சதவீதம் பின்
தங்கியே உள்ளது.
ஆனால் மெமரியைப் பயன்படுத்துவதில் குரோம் அதிக இடத்தை எடுத்துக் கொண்டு
பின் தங்கியே உள்ளது. பயர்பாக்ஸ் 100.3 எம்பி இடம் எடுக்கும் தளத்திற்கு
குரோம் 194.6 எம்பி எடுத்துக் கொள்கிறது.
இந்த பிரவுசரின் அடுத்த முக்கிய அம்சமாக பிளக் இன் சோதனையைக் கூறலாம்.
பிரவுசருக்கான ப்ளக் இன் புரோகிராம்களை பாதுகாப்பு அடிப்படையில்
முற்றிலுமாகச் சோதனை செய்த பின்னரே இந்த பிரவுசர் ஏற்றுக்கொள்கிறது.
இதனால் தேர்ட் பார்ட்டி புரோகிராம்களால், பிரவுசரில் கிராஷ் ஏற்படாது.
மேலும் ஏற்கனவே ஏதேனும் ப்ளக் இன் புரோகிராம் அமைக்கப்பட்டிருந்தால்
(பிளாஷ், குயிக்டைம் போன்ற) அதற்கான புதிய பதிப்பு ஏதேனும், அதன்
நிறுவனத்தால் வெளியிடப்பட்டுள்ளதா என்று பயர்பாக்ஸ் சோதனை செய்து
அறிவித்து, புதிய பதிப்பினை இன்ஸ்டால் செய்து பயன்படுத்துகிறது.
ஏனென்றால் ஹேக்கர்கள் பழைய பதிப்புகள் மூலமே தங்கள் நாசவேலையை
மேற்கொள்கின்றனர். புதிய பிரவுசர் வீடியோவினை முழுத் திரையில்
காட்டுகிறது.
இதனைச் சோதனை செய்து பார்க்க வேண்டும் என்றால் என்ற முகவரியில்
உள்ள தளம் சென்று இந்த பார்மட்டில் அமைந்துள்ள வீடியோ வினை டவுண்லோட்
செய்து இயக்கிப் பார்க்கவும். இயங்கும் போது அதன் மீது ரைட் கிளிக்
செய்து, முழுத்திரைக்கான பிரிவினைத் தேர்ந்தெடுக்கவும்.
இந்த பிரவுசரில் இணைய தளங்கள் வேகமாக இயங்குகின்றன. இந்த வேகம்
நன்றாகவே தெரிகிறது. அடுத்ததாக புதிய ஸ்கின்களை (பெர்சனாஸ்) இந்த பிரவுசர்
ஏற்றுக் கொண்டு அவற்றைச் சிறப்பாக வடிவமைக்கிறது.
பயர்பாக்ஸ் பிரவுசருக்கு ஏறத்தாழ 35,000 டிசைன்களில் பெர்சனாஸ் கிடைக்கிறது. இவற்றை என்ற முகவரியில் காணலாம். இந்த பிரவுசரில் இவற்றை நிறுவுவதும் எளிது. பெர்சனாஸ் இணைப்பது இப்போது எளிதாக்கப்பட்டுள்ளது.
பெர்சனாஸ் காலரி
சென்று, அதில் ஒரு பெர்சனாவின் மீது மவுஸின் கர்சரைக் கொண்டு சென்றால்,
அதற்கான ஸ்கின் அடிப்படையில், பயர்பாக்ஸ் தன் தோற்றத்தைத் தற்காலிகமாக
மாற்றும். அது உங்களுக்குப் பிடித்திருந்தால் உடனே கிளிக் செய்திடலாம்.
அல்லது மற்றவற்றைச் சோதனை செய்து பார்க்கலாம்.
ஒன்றுக்கு மேற்பட்ட பெர்சனாஸ் பதியப்பட்டால், அவை மெனுவாகக்
கிடைக்கின்றன. தேவைப் பட்டதனைத் தேர்ந்தெடுத்தால் அது உடனே
அமைக்கப்படுகிறது. பயர்பாக்ஸ் முதலில் அறிமுகமானபோது யு–ட்யூப் வீடியோ
தளம் இல்லை. குயிக் டைம், விண்டோஸ் மீடியா அல்லது ரியல் பிளேயரின் துணையை
நாட வேண்டியதிருந்தது.
யு–ட்யூப் வீடியோ தளம் வந்த பின்னர் அதனை ஒருங்கிணைக்கும் வகையில்
பிரவுசர்கள் மாற்றி அமைக்கப்பட்டன. மேலும் இதன் மூலம் இன்டர்நெட்
பார்க்கும் ரசிகர்களே தங்கள் விருப்பத்திற்கேற்ப தளங்களை எளிதாக
அமைக்கவும் மாற்றவும் முடிகிறது. பயர்பாக்ஸ் 3.6 பிரவுசரில் வீடியோ
தளங்களை நேர்த்தியாகக் கையாள முடிகிறது.
பயர்பாக்ஸ் பிரவுசரைப் பொறுத்தவரை, அதன் ஆட் ஆன் புரோகிராம்கள்
பிரசித்தி பெற்றவை. இதன் கட்டமைப்பு ஓப்பன் சோர்ஸ் என அனைவரும் அறியும்
வகையில் அமைந்திருப்பதால், திறமை கொண்ட பல புரோகிராமர்கள் இதற்கான ஆட் ஆன்
தொகுப்புகளை இலவசமாகத் தொடர்ந்து தந்து கொண்டிருக்கின்றனர். பயர்பாக்ஸ்
பயன்படுத்தும் அனைவரும் ஏதாவது ஒரு ஆட் ஆன் தொகுப்பினை இன்ஸ்டால் செய்து
பயன்படுத்தி வருகின்றனர்.
கடந்த ஐந்து ஆண்டுகளில் இன்டர்நெட் பிரவுசர்களின் கட்டமைப்பில் பெரிய
அளவில் மாற்றங்கள் இருப்பதனை உணரலாம். பயர்பாக்ஸ், சபாரி, குரோம், ஆப்பரா
மற்றும் முதல் இடத்தில் இயங்கும் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் என அனைத்துமே,
எதிர்காலத்தில் வெப் அப்ளிகேஷன்கள் எப்படி முன்னேற்றமடையும் என்பதைக்
கவனத்தில் கொண்டே, தங்களின் பிரவுசரை வடிவமைத்துள்ளன.
இணைய தளங்களை வடிவமைப் பவர்களுக்கு இந்த புதிய வகை பிரவுசர்கள் அதிகம்
துணை புரிகின்றன. சூப்பர் வேகத்தில் ஜாவா ஸ்கிரிப்டை இயக்குவது,புதிய
சி.எஸ்.எஸ்., எச்.டி.எம்.எல். 5 தொழில் நுட்பம், டவுண்லோட் செய்யக் கூடிய
எழுத்து வகைக்கு சப்போர்ட், ஆப் லைன் அப்ளிகேஷன் சப்போர்ட் நேடிவ் வீடியோ
எனப் பல புதிய தொழில் நுட்ப வசதிகளைத் தரத் தொடங்கியுள்ளன.
இவை இணையத்தைப் பயன்படுத்துவோருக்கும், இணைய தளங்களை வடிவமைப்போருக்கும் மிகவும் பயனுள்ளதாய் அமைந்துள்ளன. |