பழைய கொசுவலையில் கொஞ்சம் கற்பனை திறன் இருந்தால் பல வகையில் அதனை பயன்படுத்தலாம்..
பழைய வலையல்கள் 9 எடுத்துக்கொள்ளவும் அதில் இந்த கொசுவலை துணியினை சின்ன
சின்னதாக கட் பண்ணி வலையல் வைத்து கட்டி சுற்றி வரை கண்ணாடி வைத்து
அழகுபடுத்தி வலையல்கள் ஒன்று பக்கத்தில் ஒன்று வைத்து கட்டி 3,2,1 என்று
கீழும் மேலுமாக வைத்தால் அழகிய வால் ஹங்கிங் ரெடி..
கொசுவலையினை டிவி அளவுக்கு கட் செய்து அதில் சின்ன சின்ன எம்ப்ராய்டிங் செய்து கவராக போடலாம்।
பழைய 4,5 காட்டன் புடவைகளை ஒன்றாக தைத்து குழந்தைகளுக்கு மெத்தையாக போடலாம்.
புடவைகளை ஒரே அளவில் நீளவாக்கில் கட் பண்ணி பிண்ணல் பிண்ணி சுற்றி வரை தைத்து கால்மிதியடியாக போடலாம்।
காற்று போன ஏர்பில்லோவினை வாஷிங்மிஷீன் மேல் பகுதியில் போட்டு வைக்கலாம். இதன் மூலம் மூடியில் கீறல்கள் ஏற்படாது..
பில்லோவை நீளவாக்கில் அடி பகுதியில் நீட்டமாக வெட்டி தையல் மிஷீனுக்கு கவராக போடலாம்..
அடுப்படியில் சாமான்கள் வைக்கும் சேல்பில் பேப்பருக்கு பதிலாக போடலாம்।
பழைய பட்டு வேஷ்டி கிழிந்து விட்டால் அதன் பாடரை மட்டும் தனியாக எடுத்து
கொடிகட்டலாம்.. பார்க்க அழகாக இருக்கும். பட்டு துணியில் கைபைகள் தைக்கலாம்
முடிந்து போன சின்ன சின்ன விக்ஸ் டப்பாக்கலில் மெழுகுவர்த்தியை வைத்தால் தரை வீண்ணாகது।
குளிர் பானம் பிளாஸ்டிக் பாட்டிலில் பாதிக்கு மேல் பகுதியினை
நறுக்கிவிட்டு அடிபகுதியில் ஏதாவது துணிகள் வைத்தோ அல்லது பேப்ரிக் கலர்
வைத்தோ பெயிண்ட் செய்து அதனை பென்சில், பென், பெயிண்டிங், பிரெஷ் வைக்கும்
பாக்ஸ்சாகவோ அல்லது தூத் பிரெஷ், அல்லது கிச்சனில் கத்தி, ஸ்பூன்
வைக்கவும் பயன்படுத்தலாம்.
பிளாஸ்டிக் குடம், வாளி வீணாகிப் போனால் அதனை பாதிக்கு மேல் மேல் பகுதியினை வெட்டிவிட்டு அழகு செடிகள், கீரைகள், வளர்க்கலாம்
ஜீன்ஸ் பெண்ட் பெக்கட்டை தனியாக எடுத்து அதன் மீது சின்ன ஜிப் வைத்து தைத்து பர்ஸ்சாக பயன்படுத்தலாம்
ஜீன்ஸ் துணீகள் கிழிந்து விட்டால் அதனை உங்களின் கற்பனைக்கு தகுந்தது போல் போட்டோ பிரேம் செய்யலாம். |