பெர்ஃப்யூமில் எத்தனை வகைகள்.. கலர் கலராய்
கவர்ந்திழிக்கும் அழகு பாட்டில்கள்.. அதன் பேக்கிங்கை பார்த்தவுடனே வாங்க
தூண்டும் அழகு. இதனையெல்லாம் பார்த்து மயங்கி பெர்ஃப்யூம் வாங்குபவரா
நீங்கள்.. கொஞ்சம் யோசியுங்கள்
மின்னுவதெல்லாம் பொன்னல்ல.. அழகாய் இருக்கும் பாட்டில் எல்லாம் நல்ல பெர்ஃப்யூமில்லை.
பெர்ஃப்யூம் பிரியரா நீங்கள்:சரி அப்ப எப்படி தான் பெர்ஃப்யூம் வாங்குவது என்று கேட்கிறிங்களா?
நல்ல தரமான கம்பெனி பெர்ஃப்யூமை மட்டுமே வாங்கவும்.
பேக்கிங்கை பார்த்து செலக்ட் செய்யாதிங்க.
அவங்க சொன்னாங்க இவங்க சொன்னாங்கனு கண்ட கண்ட பெர்ஃப்யூம் வாங்க வேண்டாம்.
எக்ஸ்பயரி டேட் பார்த்து வாங்கவும்.
கடைகளில் வாங்கும் பொழுது ஸ்மெல் எப்படியிருக்குனு பாட்டில் முடியில் அடித்து முகர்ந்து பார்க்கவும்.
எந்த வகை பெர்ஃப்யூமாக இருந்தாலும் உங்கள் கை மணிக்கட்டு பகுதியில்
அடித்து பின்பு தேர்வு செய்யுங்கள். அலர்ஜி இல்லை என்றால் வாங்கவும்இப்ப
பெர்ஃப்யூம் வாங்கியாச்சு அதனை எப்படி பயன்படுத்தனும் என்று பார்ப்போம்.
நல்ல தரமான பெர்ஃப்யூம் என்றால் உடைகளின் மீதும் அக்குள், முதுகு பகுதியிலும் போடலாம்.
ஆனால் பாடி ஸ்ப்ரே போல் நேரதியாக உடலில் படவேண்டாம்.
இது உடலில் பட்டால் நிச்சயம் அலர்ஜி ஏற்படும்..பட்டு புடவையின் ஜரிகையில்
மற்றும் விலை உயர்ந்த வெர்க் சேலையில் நேரடியாக பெர்ஃப்யூம் செய்ய
வேண்டாம்.
தங்க நகைகள் மீதும் படாமல் ஸ்ப்ரே பண்ணவும். பாட்டிலில் போட்டுயிருக்கும் பயன்படுத்தும் முறையினை படித்துவிட்டு பயன்படுத்துவது நலம். |