எண்ணைய் வடியும் முகம் என்ற ஏக்கமா?
முகத்தை பாரு எண்ணைய் வடியுது என சிலர் கேலி செய்வதை பார்த்திருப்போம்.
ஏன் நம்மில் பலரும் இந்த பிரச்சனை அனுபவித்திருப்போம்.
இதற்கு என்ன செய்யலாம். இதோ எளிய வழி!
ஆரஞ்சு பழத் தோல் கிடைக்கும் இல்லையா? அதனை காயவைத்து வீட்டில் இருக்கும்
பயத்தம் மாவுடன் சேர்த்து அரைத்து கலவை செய்து வைத்துக் கொள்ளவேண்டும்.
இந்த கலவையை தினமும் குளிக்கும் போது சோப்புக்குப் பதிலாக தேய்த்து குளித்து வர வேண்டும்.
இப்படி தொடர்ந்து செய்து வந்தால் சில நாட்களில் உங்களது முகத்தில் எண்ணைய் வடிவது குறைந்து விடும். சருமமும் பொலிவு பெறும்.
என்ன இதை செய்ய நீங்களும் தயார் தானே! |
Category: அழகு குறிப்பு | Added by: m_linoj (2009-05-08)
|
Views: 1751
| Rating: 0.0/0 |