முட்டை அனைவருக்கும் ஏற்ற முழுமையான உணவு. ‘லெசிதின்’ முட்டைப் பவுடர்
வடிவில் தயாரிக்கப்படுகிறது. முட்டை கேசத்தைப் பொலிவோடு நல்ல தன்மையோடு
வைத்திருக்கக் கூடியது. சருமத்திற்கும் மென்மையளிக்கும். வெள்ளைக்கரு
சருமத்தை இறுக்கும் தன்மை கொண்டது. சருமத்தின் துவாரங்களையும் இறுக்கும்.
மேலும் சருமத்தையும், கேசத்தையும் சுத்தம் செய்யும் தன்மை கொண்டது.
கேசத்திற்கான கழுவிகள் தயாரிப்பில் பங்கு பெறுகிறது. புரதச் சத்து
மிகுந்திருப்பதால் கேசத்தை பலப்படுத்துகிறது. முட்டையின் வெள்ளைக்கரு
நிணநீரை வடித்துவிடும் தன்மை கொண்டது. மஞ்கள்கரு கேசத்திற்கு
ஊட்டமளிக்கிறது.
தேன்
பலவகை மலர்களிலிருந்தும் தேனீக்களால் சேகரிக்கப்படும் தேன் ஈரச்சத்து
மிகக் கொண்டது. மிகுந்த மருத்துவ குணம் கொண்ட சஞ்சீவினியாக
மருத்துவத்தில் மிகவும் முக்கியத்துவம் பெறுகிறது. சருமத்திற்கு
மிருதுத்தன்மை, ஈரப்பதம் கொடுக்கிறது. உலர்ந்த சருமத்தினருக்கு தேன் ஒரு
வரப்பிரசாதம்.
தேன் உள் மருந்தாகவும், வெளிப்பூச்சாகவும் பயன்படுகிறது.
தீப்புண்களையும் ஆற்றும் குணம் கொண்டது. சருமத்திற்கு ஈரப்பதம்
அளிக்கக்கூடிய மாய்ஸரைசர்கள் கலந்து சோப் மற்றும் கிரீம்களில் தேன்
உபயோகப்படுத்தப் படுகின்றது.
சிறிது தேன் கலந்த நீரில் குளிக்க மன உளைச்சல் நீங்கி நல்ல உறக்கம்
வரும்.
இயற்கையாக உருவான தேனை பன்னெடுங்காலமாக சித்த வைத்தியம் பயன்படுத்தி
வருகிறது. தேன் தேனீக்களின் பிரிவுக்கு ஏற்பவும், அது எடுக்கப்படும் மலர்
மற்றும் அது வளரும் இடத்திற்கு ஏற்பவும் குணத்தில் வித்தியாசப்படும்.
தேன் பல கடுமையான நோய்களுக்கு மருந்தாகவும் திகழ்கிறது. தேனில் உள்ள
குளுகோஸ், பற்களுக்கு எந்தவிதத் தீங்கும் விளைவிப்பதில்லை.
முகத்தைக் கழுவி ஈரமில்லாமல் துடைத்துவிட்டு தேனுடன் சிறிது பாதாம்
எண்ணெய் கலந்து நன்றாக முகத்தில் பூசி ஊறவைத்து அரைமணிக்குப்பின் அழுத்தித்
துடைக்கவும். வாரத்தில் இரண்டு முறை செய்து வர முகத்தில் நல்ல மெருகு
ஏற்படும்.
தேன் காற்றிலுள்ள ஈரத்தை எளிதில் உறிஞ்சிக் கொள்ளும் தன்மையுடையது.
அதனால் தேனை குளிர்சாதனப் பெட்டியில் வைக்காது காற்று படாது வறண்ட இடத்தில்
வைத்து பாதுகாத்தல் நலம்.
தேன் கெட்டாலும் குணம் கெடுவதில்லை. சுமார் மூன்று ஆண்டுகளான தேனையும்
உபயோகிக்கலாம். அசல் தேனின் சுவையே அலாதியானது. மலர்களிலிருந்து
எடுக்கப்படும் தேனில் சுவையும், மணமும் அதிகம் எனினும் தென்னம்
பாளையிலிருந்து எடுக்கப்படும் தேனில் சுவை மிக அதிகம்.
உணவுக்கு முன் தேன் 15 மில்லி அளவை 60 மில்லி காய்ச்சி ஆறிய நீரில்
கலந்து அத்துடன் அரை எலுமிச்சம் பழத்தைப் பிழிந்து இரண்டு முதல் மூன்று
வேளை உணவின் முன் உட்கொள்ள உடலுக்கு ஆயாசமின்றி உடல் எடை குறையும்.
ஒரு கப் இளம் சூடான நீரில் இரண்டு கரண்டி தேன் கலந்து, தூங்க ஒரு மணி
நேரத்திற்கு முன் அருந்தினால் நல்ல தூக்கம் வரும். இரைப்பைக்கு தேன் சிறந்த
நண்பன். ஒரு கப் இளஞ்சூடான பாலில் 4 கரண்டி தேன் கலந்து அருந்த ஜலதோஷம்
கட்டுப்படும். உணவிற்கு சற்றுமுன் அருந்தினால் ஜீரணசக்தி பெருகும். தேனில்
அடங்கியுள்ள மாவுச்சத்து இரத்தக் குழல்களை விரிவாக்கி, இரத்த ஓட்டத்தை
விரைவுபடுத்தும். மேலும் இரத்தத்தில் சிவப்பு அணுக்களையும் பெருக்கும்.
குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை தேன் தரும். அத்துடன் உடலுக்கு
ஊறுதரும் நோய்க்கிருமிகளையும் கொல்லும். பழங்கள், உணவுவகை, பலகாரங்கள்
எதனுடனும் தேன் பொருந்தி, தின்றால் நன்மை புரியும். தேன் முதியோருக்கு
இளமை நீடிக்கச் செய்து வலிமையுடனும் இருக்கத் துணைபுரியும். தேன் அபூர்வமாக
சிலருக்கு ஒவ்வாமல் போவதுண்டு. புதிதாக துவங்குபவர் ஆறுமாத தேனாகப்
பார்த்து உட்கொள்ளுதல் நல்லது. ஒரு நாளைக்கு 200 கிராமுக்கு மேல்
தொடர்ந்து அருந்துவது நல்லது அல்ல.
அழகுக்கூடும்… |