டீன் ஏஜ் அழகு சிகிச்சைகளில் கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள்.
டீன் ஏஜான் ஆரம்பத்தில் இருப்பவர்கள் புருவங்களை ஷேப் செய்ய வேண்டாம். வயது கூடிய பிறகு செய்து கொள்ளலாம்.
* பிளீச்சிங் செய்வதைத் தவிர்ப்பது நல்லது.
* சருமத்தின் தேவையற்ற ரோமங்களை அகற்ற ரேசர், கிரீம் உபயோகிக்க வேண்டாம்.
* கூந்தலுக்கான மிகவும் ஸ்ட்ராங்கான சிகிச்சைகளைத் தவிர்க்கலாம்.
ஸ்ட்ரெயிட்டனிங், கலரிங் போன்றவற்றைக் கூடியவரையில் தள்ளிப் போடுவது
நல்லது.
* தினசரி கூந்தலுக்கு ஷாம்பூ உபயோகிப்பதைத் தவிர்க்கலாம்.
* அழகு, நாகரிகம் என்ற பெயரில் புருவங்களைத் துளையிட்டு நகை அணிவது,
தொப்புளைத் துளையிட்டு நகை அணிவது போன்றவற்றைச் செய்ய வேண்டாம்.
வரிசையாகக் காது மடல்களைக் குத்திக் கொண்டு நகை அணிவது கூட ஆபத்தாக
முடியலாம். நரம்புகளில் பட்டால் ஆபத்து.
* நீலம், பச்சை மாதிரி கன்னாபின்னா நிறங்களில் ஐ லைனர், ஐ பென்சில்
உபயோகிப்பது இன்றைய டீன் ஏஜ் பெண்கள் மத்தியில் ஃபேஷன். இவற்றிலுள்ள
கெமிக்கல்கள் கட்டாயம் கண் பார்வை பாதிக்கும்.
சருமத்துக்கும் ஆபத்து.
* டார்க் நிற, மேட் ஃபினிஷ் (ஈரப்பதமே இல்லாதது, நீண்ட நேரம் நீடிப்பது)
லிப்ஸ்டிக்குகளை உபயோகிப்பதை; தவிர்ப்பது நல்லது. உதடுகளை அழகாக,
பளபளப்பாகக் காட்ட லிப் பாம் உபயோகிக்கலாம்.
* நகங்களை நீளமாக வளர்க்காமல், குட்டையாக வெட்டி விடுவது ஆரோக்கியமானது.
* உடல் நாற்றத்தைத் தவிர்க்க மிதமான வாசனையில் பெர்ஃப்யூம் உபயோகிக்கலாம். இதை கைகளின் மணிக்கட்டுப் பகுதியில் தடவிக் கொள்ளலாம்.
* பெண்கள் தினமுமே பேன்ட்டி லைனர் அணியலாம். அந்தரங்க உறுப்பு சுத்தத்துக்கு இது உதவும்.
* தினம் இரவில் பல் தேய்த்து முடித்ததும், மவுத் வாஷ் உபயோகிக்கலாம். |
Category: அழகு குறிப்பு | Added by: m_linoj (2009-10-17)
|
Views: 2453
| Rating: 5.0/1 |