முடி: முடி செழித்து வளர வாரம் ஒருமுறை வெண்ணையை தலைக்குத் தடவி ஒரு மணி நேரம் கழித்து அலசி வந்தால் முடி நன்றாக வளரும். கண்: கண்ணைச் சுற்றி உள்ள கருவளையம் நீங்க வெள்ளரிக்காய் ஜூஸை பஞ்சில் நனைத்து கண்கள் மீது தினமும் போட்டு வரவும். உதடு:
உதடு வசீகரமாக இருக்க முட்டையின் வெண்கரு, பாதாம் பவுடர், பால் இம்
மூன்றையும் கலந்து உதட்டில் தடவி அது காய்ந்ததும் சுடுநீரில் கழுவி எடுக்க
வேண்டும். முகம்: உருளைக்கிழங்கை இடித்துச் சாறு பிழிந்து, சமமாகத் தேன் கலந்து முகத்தில் தடவ, முகம் அழகு பெறும். முகச் சுருக்கம் நீங்க: முட்டையின் வெண்கருவைத் தடவுங்கள். சிறிது நேரம் கழித்து முகம் கழுவ முகத்திலுள்ள சுருக்கம் மறையும். கருமை நீங்க: கருமையடைந்த முகத்திற்கு, பாதாம் பருப்பை பாலில் அரைத்து இரவில் முகத்தில் தொடர்ந்து பூசி வர பொலிவு பெறும். முகத்தின் எண்ணைப் பசை நீங்க:
முட்டையின் வெண்கரு 7 ஸ்பூன், தேன் கால் ஸ்பூன், மாதுளை ஜூஸ் அரை ஸ்பூன்
மூன்றையும் கலந்து அரை மணி நேரம் பூசிவிட்டு முகம் கழுவினால், எண்ணைப் பசை
நீங்கிவிடும். முக வறட்சி நீங்க: பச்சை கொத்த மல்லி அல்லது புதினாவை நன்றாக அரைத்து முகத்தில் பூசி பிறகு சிறிது நேரம் கழித்து அலம்ப வேண்டும். கரும்புள்ளி மறைய:
முகப்பருவால் ஏற் படும் ஜாதிக்காயை அரைத்துப் போடவும். முகப்பரு நீங்க:
பூண்டு அல்லது கருந் துளசியை அரைத்துப் போட நாளடைவில் பருக்கள் மறையும். வாய் நாற்றம்: புதினா கீரையைக் காய வைத்து பொடி செய்து பல் துலக்குவதால் வாய் நாற்றமின்றிப் பல் பளிச்சென்றிருக்கும். வெண்மையான பல்: இரவு நேரத்தில் பச்சை கேரட்டை மென்று தின்றால் பல் உறுதியடைவதுடன், பல் வெண்மை பெறும். உதடு: உதட்டில் தேங்காய் எண்ணை தடவி வந்தால் ஷைனிங்காக இருக்கும். கை: பாத்திரம்
தேய்ப்பதால் ஏற்படும் கை வெடிப்புகளுக்கு உருளைக்கிழங்கை வேக வைத்து
பொடித்து கைகளில் தேய்த்து வந் தால் கை மிருதுவாக இருக்கும். நகம்: நகங்களில் சிதைவு ஏற்படாமலும், வெண்மையாகவும் இருக்க சூரியகாந்தி எண் ணையை கை, கால் நகங்களில் தடவ வேண்டும். மார்பகங்களைப் பாதுகாக்க:
வெள்ளைக் குன்றிமணி வேரை எலுமிச்சம் பழச்சாறு விட்டு நன்றாக அரைத்து
மார்பகங்களின் மீது பூசிவர, தளர்ந்த மார்பகம் சரியான வடிவம் பெறும். வியர்வை நாற்றம்:
ஆவாரம் பூவை நிழலில் உலர்த்தி, சமமான அளவு பயத்தம் மாவு கலந்து அரைத்து
தினமும் தேய்த்துக் குளித்து வந்தால் வியர்வை நாற்றம் அகலும். உடல் பருமன்: பப்பாளிக் காயை பொறியலோ, குழம்பு வைத்தோ வாரம் இரண்டு முறை சாப்பிட்டு வந்தால் உடல் பருமன் குறையும். பாதம்:
பாதத்தில் உள்ள வெடிப்பு நீங்க விளக்கெண்ணை ஒரு ஸ்பூன், பன்னீர் இரண்டு
ஸ்பூன், எலுமிச்சம் சாறு ஒரு ஸ்பூன் மூன்றையும் கலந்து வெந் நீரில் பத்து
நிமிடம் காலை ஊறவிட்டு, பின்பு இக்கலவையைப் பூசிவர வெடிப்பு நீங்கும்.
நன்றி : தமிழ்குடும்பம் |