ஒரு டீஸ்பூன் ஆரஞ்சு பழச்சாறை, ஒரு டீஸ்பூன்
குளிர்ந்த நீரில் கலந்து முகத்தில் தடவி அரைமணி நேரம் ஊறிய பிறகு துடைத்து
விடவும். சருமத்தில் உள்ள எண்ணெய் நீங்கி பருக்கள் வராமல்
பாதுகாக்கும்.பார்லர்களில் இதே சிகிச்சையை ஆரஞ்சு பீல் மாஸ்க் என்ற
பெயரில் செய்கின்றனர்.
* வேப்பிலை பொடி, துளசி பொடி, புதினா பொடி ஆகியவை தலா ஒரு டீஸ்பூனும்,
முல்தானி மட்டி இரண்டு ஸ்பூன்களும் எடுத்துக் கொள்ளவும். மிதமான
சுடுநீரில் அவற்றை கலந்து முகப்பருக்களில் தடவவும். இந்த கலவையை
கண்களுக்கு அடியில் தடவக்கூடாது. பதினைந்து நிமிடங்கள் கழித்து முகத்தை
கழுவிக் கொள்ளலாம்.
* இரண்டு ஸ்பூன்கள் ஓமவல்லி இலைச்சாறுடன், ஒரு ஸ்பூன் சிவப்பு
சந்தனத்தை கலந்து பருக்கள் உள்ள இடத்தில் தடவி வந்தால் விரைவில் பருக்கள்
தொல்லை நீங்கும்.
* சோற்றுக் கற்றாழை சருமத்தை மிருதுவாக்கும் தன்மையுடையது. அவற்றின்
நடுவில் இருக்கும் பசையை எடுத்து, அதில் சம அளவு நீரைக் கலந்து முகத்தில்
தடவினால் நல்ல பலன் கிடைக்கும்.
* ஒரு ஸ்பூன் அருகம்புல் பொடியும், குப்பமேனி இலைப் பொடியும் குளிர்ந்த நீரில் கலந்து பருக்களில் போடலாம்.
* பன்னீர் ரோஜா மொட்டுக்களை எடுத்து, அது நனையும் அளவு சூடான தண்ணீர்
விட்டு, ஒரு மணி நேரம் ஊற வைக்கவும். பின் அந்த நீரை வடிகட்டி முகத்தில்
பூசி அரைமணி நேரம் ஊறிய பின் துடைத்து எடுக்கவும்.
* சந்தனக் கட்டையை பன்னீர் விட்டு இழைத்து முகத்தில் தடவினால், பருக்களினால் ஏற்பட்ட வடுக்கள் மறையும்.
• தினமும் உடற்பயிற்சி செய்ய வேண்டும். அவ்வாறு செய்யும்போது வெளியேறும்
வியர்வையினால், துவாரங்களில் உள்ள அழுக்கு நீக்கி பருக்கள் வராமல்
தடுக்கலாம். |