பாலூட்டும் பெண்களுக்கு அதிகமாக தாய்ப்பால் சுரக்க சில சத்தான உணவுகளை சாப்பிட வேண்டும்.
பயிறு, பருப்பு வகைகள், கீரை வகைகள், பப்பாளி, பூண்டு, இறைச்சி, பால், பாலாடைகட்டி, முட்டை போன்ற புரதமும், வைட்டமின்களும் உள்ள உணவுகளை குழந்தை பிறப்பதற்கு முன்னும், பிறந்த பின்னும் தாய் நன்றாக சாப்பிட வேண்டும். அப்பொழுது தான் தாய்க்கு பால் நன்றாக சுரக்கும்.
அப்பெண்கள் பத்தியமெல்லாம் இருக்க வேண்டாம். சத்தான உணவு வகைகளும், பால், கீரை, காய்கறி, பழம், சூப் இவைகளுடன் நிறைய தண்ணீரும் மற்றும் திரவ ஆகாரங்களை சாப்பிடுவதால் தாய்க்கு பால் தானாகவே சுரக்கும்.
குழந்தை பிறப்பதற்கு முன்பும் இதே முறையை கையாள வேண்டும். தாய்க்கு அமைதியும், மன நிம்மதியான சூழ்நிலையைக் கொடுக்க மற்றவர்கள் உதவியாக இருக்க வேண்டும்.
குழந்தைக்கு நீண்ட காலம் தாய்ப்பால் கொடுப்பதன் மூலம் நீண்ட கால பலனை பெற முடியும். அதாவது இருதய, சிறுநீரக நோய் மற்றும் அப்பண்டிசைட்டிஸ் போன்றவற்றை தவிர்க்க உதவுகிறது.
அதனால் இங்கு குறிப்பிட்டுள்ள உணவினை உட்கொண்டு தாய்பாலை அதிகரித்து கொண்டு குழந்தைக்கு அதிக காலம் பால் கொடுத்து தரமான நோய் வராத குடிமகனை நாட்டுக்கு கொடுங்கள். |