டெங்கு ஜுரம் - பயங்கரம் இது வைரஸ் கிருமிகளால்(DEN 1,2,3,4) ஏற்படும் ஒரு வியாதி. இந்த கிருமிகளை பகலில் கடிக்கும் கொசுகளான ஏடெஸ் மூலம் பரவும் . எடேஸ் கொசு: tiger mosquito என்ற பெயரும் இதற்க்கு உண்டு , ஏனெனில் இதன் உடலில் புலி போல கோடுகள் உண்டு . செயற்கையான நீரில் மட்டுமே இது வளரும் பகலில் மட்டும் இது அதிகமாக வரும் வீட்டின் உள்ளே இருட்டான இடத்தில தங்கி இருந்து கடிக்கும் தன்மை உடையது எடஸ் கொசுவானது நல்ல நீரில் மட்டுமே வளரும் ( அழுக்கு நீர் , சாக்கடை இதற்க்கு பிடிக்காது ) மழை விட்டவுடன் டயர் , பாட்டில் , டீ கப், தண்ணீர் தொட்டி ஆகியவற்றில் உள்ள நீரிலும் பிரிட்ஜ் இன் அடியில் உள்ள நீர் , flower vase இல் மாற்றபடாத நீர் ஆகியவற்றில் இது முட்டை இட்டு லார்வவாக வளரும் தன்மை கொண்டது . குழந்தைகளை பாதிக்கும் மிக முக்கியமான நோய் ஆகும் . ஏழை , பணக்காரன் வித்தியாசம் இதற்க்கு கிடையாது .( சென்ற வருடம் மண் மோகன் சிங்கின் இரு பேரக்குழந்தைகளும் பாதிக்கப்பட்டனர் - source from flowervase ) எனவே வரும் முன் காப்பதே சிறந்தது . டெங்கு வகைகள் : சாதாரண டெங்கு சுரம் டெங்கு ரத்தகசிவுறும் நிலை (dengue hemorrhagic fever) டெங்கு ஷாக் நிலை (dengue shock syndrome) அறிகுறிகள் : சுரம் உடல் வலி மூட்டு வலி கண்களின் பின்புறம் வலி வாந்தி ரத்த வாந்தி மூக்கில் ரத்த கசிவு ஈறுகளில் ரத்தக்கசிவு உடலில் சிறு சிறு ரத்த புள்ளிகள் கை கால் சிலிட்டு இருப்பது மலம் கருப்பாக போவது ஜுரம் குறைந்த பினும் குழந்தை சோர்வாக இருப்பது சுரம் கொசு கடித்த ஆறு முதல் பத்து நாட்களுக்குள் வரும் . சுரம் கடுமையாக இருக்கும் .அய்ந்து நாட்களுக்கு பின் ஜுரம் குறையும் ஆனால் இந்த நேரத்தில் தான் நாம் ஜாக்கிரதை ஆக இருக்க வேண்டும் . இந்த நிலையில் இருந்து குழந்தை நலம் ஆகலாம் ,அல்லது ரதகசிவுறு நிலை அல்லது ஷாக் நிலைக்கு போகலாம் . எனவே ஜுரம் குறைந்து விட்டதே என்று அலட்சியமாக இருக்ககூடாது . சிகிச்சை : ஒய்வு அவசியம் மருந்து மாத்திரைகளை சொந்தமாக உபயோகிக்க கூடாது . ஏனெனில் ஏற்கனவே டெங்குவினால் ரத்தம் உரையாத தன்மை ஏற்படும் , மேலும் நாம் சுரத்திற்கு உபயோகிக்கும் சில மருந்துகளும் சேர்ந்தால் ரத்தக்கசிவு அதிகரிக்கும் . ஆஸ்பிரின் மாத்திரையை கண்டிப்பாக கொடுக்ககூடாது ஜுரம் குறைய நேரமானால் வெதுவெதுப்பான நீரை வைத்து ஒத்தடம் தரலாம் தடுப்பு முறை : பகலில் வீட்டில் நுழைந்து கடிக்கும் கொசு இது எனவே இரவில் மட்டும் இல்லாது பகலிலும் நாம் விழிப்புடன் இருக்கவேண்டும் உடலில் தடவும் கொசுவிரடிகளை ( ஓடோமொஸ் ) கை ,கால்களில் தடவுவது நல்லது இரவில் முடிந்த வரை கொசுவலையினுள் தூங்குவது நல்லது வீட்டின் அருகயும் , வீட்டுக்கு உள்ளேயும் நீர் தேங்காமல் பார்த்துக்கொள்ளவேண்டும் .
Source: http://www.doctorrajmohan.blogspot.com |