பெற்றேhருக்கும், குழந்தைக்கும் இடையிலான உறவைப் பொறுத்தே, குறிப்பிட்ட
குழந்தையின் மன நலம் அமையும் என்பது உளவியலாளர்களின் கூற்று. ஆனால்
புதிதாக நடந்த ஆய்வு, இந்த விவகாரத்தில் மாறுபட்ட தகவலை தொpவித்துள்ளது. அப்பா - அம்மா இருவரும் ஒருவர் மீது ஒருவர் அன்பு காட்டி,
அன்னியோன்யமாக நடந்து கொண்டால், அவர்களின் குழந்தைகள் பாதுகாப்பான உணர்வை
பெறுகிறhர்கள். பிற்பாடு அவர்கள் சமுதாயத்துடன் இiண்ந்து பழகுவதற்கும், மன
நலத்துடன் இருப்பதற்கும் இதுதான் காரணமாக அமைகிறது என்கிறது அந்த ஆய்வு.
குழந்தைகள் மீது அன்பு காட்டுவதில் பெரும்பாலான பெற்றேhர் எந்த
குறையும் வைப்பதில்லை. ஆனால் தங்களுக்கிடையே ஏற்படு;ம் சின்ன சின்ன
மனஸ்தாபங்கள், கருத்து வேறுபாடுகளுக்காக ஆவேசமாக மோதிக் கொள்கிறhர்கள்.
குழந்தைகள் கண் எதிரில் இதுபோல நடந்து கொள்வதால், அவர்கள் மனதளவில்
வெகுவாக பாதிக்கப்படுவார்கள்;. சண்டை- சச்சரவுகளின் போது பெற்றோர்
பயன்படுத்தும் வார்த்தைகள் கூட அவர்களை காயப்படுத்தும். இத்தகைய
சூழ்நிலையை சந்திக்கும் குழந்தைகள் பெற்றேhர் மீதான மதிப்பை குறைத்துக்
கொள்ள ஆரம்பிப்பார்கள். இதனால் பெற்றேhர் சொல்லுக்கு கட்டுப்பட மறுத்து,
தங்கள் மனம் போன போக்கிலேயே நடக்கத் தொடங்குவர். தாங்கள் செய்வதுதான் சரி
என்ற எண்ணம் அவர்கள் மனதில் ஆழமாக வேரூன்ற ஆரம்பிக்கும். இது கெட்ட
சகவாசம், கெட்ட பழக்கங்களுக்கு அடி கோலும். தாய்- தந்தை இடையிலான
வெறுப்பு, முடிவுக்கு வராத கோப- தாபங்கள் ஆகியவை குழந்தைகளைத்தான்
பாதிக்கும்.
சண்டைக்கோழிகள் போல மல்லுக்கு நிற்கும் பெரும்பாலான பெற்றோர், தாங்கள்
சண்டை போட்டுக் கொண்டால், அது குழந்தைகளின் மென்மையான உள்ளத்தை
காயப்படுத்தும் என்பதை உணர மறுக்கிறhர்கள். குழந்தைகள் வளர்ந்த பிறகுதான்
எல்லாவற்றையும் தெரிந்து கொள்கிறார்கள் என்று பலரும் நினைக்கிறார்கள்.
ஆனால் இது மிகவும் தவறானது. அனைத்து வகையான உணர்வுகளும் குழந்தைப்
பருவத்திலேயே முளை விட தொடங்கி விடும். அம்மாவை அப்பா அடிக்கும் போதும்
அல்லது ஆவேசமாக திட்டும்போதும், கைக்குழந்தைகள் வீறிட்டு அழுவது
இதனால்தான். இந்நிலையில் அவர்கள் வளர வளர உணர்வுகளும் வளர்ந்து தௌpவடையும்
என்பதால், தாய்- தந்தை இடையிலான பிணக்கு, அவர்களை இன்னும் கடுமையாக
பாதிக்கும். ஒழுக்கமான நெறிகளில் இருந்து பல்வேறு குழந்தைகள் வழி தவறிச்
செல்வதற்கு இதுதான் காரணம்.
இதனால் பெற்றோர்களே* உங்களுக்கு இடையில் தகராறு- சண்டை சச்சரவு
இருந்தால் தாரளமாக வெளிப்படுத்த லாம். ஆனால் குழந்தைகள் அங்கே இல்லாமல்
பார்த்துக் கொள்ளுங்கள். அதுதான் ரொம்ப முக்கியம்.
நன்றி
: தினகரன்
|