குழந்தைகளுக்கு உடற்பயிற்சி அவசியம்
குழந்தைப் பருவத்திலேயே உடல் பருமன் என்பது
தற்போது அதிகரித்து வரும் ஒரு பிரச்சினையாக உருவெடுத்துள்ளது.
இளம் வயதினரிடையே உடல் ரீதியான செயல்திறன் இல்லாமை (உடற்பயிற்சி) அவர்கள்
பள்ளிக்கூடங்களுக்குச் செல்லும் முன்பே ஏற்பட்டு விடுவதாக சமீபத்திய ஆய்வு
ஒன்று கூறுகிறது.
நியூசிலாந்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள், சுமார் 244 குழந்தைளிடம்
நடத்திய ஆய்வில் குழந்தைகளின் அன்றாட உடற்பயிற்சியானது 3 வயது முதல் 5
வயது வரையிலான காலத்தில் படிப்படியாக குறைந்து வருவதாக தெரிவித்துள்ளனர்.
ஆனால் தொலைக்காட்சி முன் அமர்தல் அல்லது அசையாமல் ஓரிடத்தில்
சுறுசுறுப்பின்றி அமர்ந்திருப்பது ஒரே அளவில் நீடிப்பதாக அந்த ஆய்வு
தெரிவிக்கிறது.
5 வயதுடைய ஆண் மற்றும் பெண் குழந்தைகளிடத்தில் உடற்பயிற்சி குறைந்து வரும்
நிலையில், நாளொன்றுக்கு 90 நிமிட நேரத்தை டி.வி அல்லது கம்ப்யூட்டர்
முன்பு அவர்கள் செலவிடுவதாகத் தெரிய வந்துள்ளது. மேலும் படித்தல், படம்
வரைதல் போன்ற அசையாமல் செலவிடும் நேரம் 90 நிமிடம் என்றும் அந்த ஆய்வு
கூறுகிறது.
இதன் காரணமாக 3 முதல் 5 வயதுடைய குழந்தைகளிடத்தில் உடல் பருமன் பிரச்சினை
சமீப ஆண்டுகளாக அதிகரித்து வருவது தெரிய வந்துள்ளது.
குழந்தைகள் மற்றும் இளம் வயதினர் நாளொன்றுக்கு குறைந்தது ஒரு மணி நேரமாவது
உடற்பயிற்சி செய்தல் அவசியம் என்று நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
தொலைக்காட்சி மற்றும் கணினியில் அவர்கள் செலவிடும் நேரத்தைக்
கட்டுப்படுத்தி, உடல் ரீதியில் சுறுசுறுப்பாக இருப்பதை பெற்றோர் உறுதி
செய்ய வேண்டும் என்றும் அவர்கள் கூறுகிறார்கள். |
Category: தாய் சேய் நலன் | Added by: linoj (2009-06-05)
|
Views: 1029
| Rating: 5.0/1 |