சில குழந்தைகளின் பற்களின் மேல் வரிசை
முழுவதுமே பல் சொத்தையினால் பாதிக்கப்பட்டிருக்கும். கருப்பாக இருக்கும்
அல்லது பற்கள் இருக்காது. 2,3 வயது வரை சொத்தைக்கு புட்டிப்பால் சொத்தை
என்று பெயர். இந்தப்பற்கள் குழந்தைப் பருவத்தில் விழுந்து முளைப்பது
என்றாலும் கூட அதைக் குணப்படுத்த சிகிச்சை பெறுவது அவசியம் என்கிறார்
டாக்டர் ரஞ்சனி. அவர் மேலும் கூறியதாவது:-
பல்நோயாளிகளில் பல் சொத்தையானவர்களே அதிகம். இதற்கு மிகமிக முக்கிய காரணம்
நம்முடைய உணவுப் பழக்கம்தான். அளவிற்கு அதிகமான அளவில் சுவீட் உண்பது.
குழந்தைகளில் பெரும்பாலானவர்கள் சாக்லெட், மிட்டாய் சர்க்கரை அதிகம்
சாப்பிடுபவர்களாக இருக்கிறார்கள். இரவில் பற்களைத் தேய்க்கும் பழக்கம் 90
சதவீதம் பேருக்கு இல்லாததும் ஒரு முக்கிய காரணம்.
இரவில் சர்க்கரை கலந்த பால் போன்றவற்றை உண்டு விட்டு வாய் கொப்பளிக்காமல்
படுத்துறங்கும் போது பற்களில் பாக்டீரியாக்கள் தங்கி பல் சொத்தையை
ஏற்படுத்திவிடும். பெரும்பாலான பல் சொத்தைக்காரர்களை பார்த்தீர்கள்
என்றால் பல்லில் வலி எடுத்தால்தான் பல் டாக்டரைத் தேடுவார்கள். சொத்தையை
பொறுத்து சிகிச்சைதேவைப்படும். பல் சொத்தைக்கு சொத்தையை அடைக்க வேண்டும்.
அல்லது பற்களை அகற்ற வேண்டியது வரும்.
அகற்றிய பல்லிற்கு பதிலாக புதிதாக நிரந்தரமான பல்லை அதே இடத்தில்
கட்டிக்கொள்ளலாம். ஆனால் பல்சொத்தை வந்த பலர் பல்லை அகற்றிய பின்னர் அதே
இடத்தில் புதிய பல்லைக் கட்டிக் கொள்வதில்லை. பொதுவாக பல்லை ஒரு உறுப்பு
மாதிரியே மக்கள் நினைப்பதில்லை. பல்தானே என்ற அலட்சிய மனப்பான்மைதான்
இதற்குக் காரணம்.
குழந்தை பிராயத்தில் அதுவும் பல் விழுந்து முளைக்கும் கால கட்டத்தில்
அதாவது ஆறு, ஏழு, புதிதாக பல் முளைக்கும். அப்போது விழுந்த பல்லைவிட
புதிதாக முளைத்த பல் பெரிதாக இருப்பதால் தப்பி முளைத்த பல்லாக அது
ஆகிவிடும். மருத்துவரைப் பார்த்து புது பல் நன்றாக முளைத்து இருக்கிறதா
என்று பார்ப்பது நல்லது.
பற்களுக்கு இடையே இருப்பது இடைவெளியா? அல்லது தெத்துப்பல்லா?
முன்பெல்லாம் தெத்துப்பல் இருந்தால் பற்களின் இடையே இடைவெளி இருந்தால்
அதனை எதுவும் செய்ய முடியாது என்ற நிலைதான் இருந்தது. இன்று விஞ்ஞானம்
வளர்ந்து விட்டது. எதையும் சரி செய்யலாம் என்கிற நிலைமை.
இருப்பினும் சில படித்த உயர்தர வாழ்க்கை படைத்தவர்களில் சிலர் மட்டும்
தெத்துப்பல், பற்களில் உள்ள இடைவெளியை சரி செய்து விடுகிறார்கள்.
பற்களுக்கு இடையே இடைவெளிக்குக் காரணம் பரம்பரைத் தன்மை பற்களின் அளவு
பெரிதாக இருப்பது போன்றவைதான். இதற்கு செராமிக் லேமிக்னேட்ஸ் என்ற
முறையில் இடைவெளியை அடைக்கலாம்.
கம்பாட் லேமினேட்ஸ் என்ற மற்றொரு முறையிலும் பற்களின் இடைவெளியை
அடைக்கலாம். இம்முறையில் பல்லின் இடைவெளியை சரி செய்த பின்னர் அழகு கூடுமே
தவிர அதற்காக கடினமான பொருட்களை கடித்து சாப்பிடலாம் என்பதில்லை. கவனமாக
இருக்க வேண்டும். தெத்துப் பற்களை கிளிப் போட்டு ஆர்த்தோடாண்டிக்ஸ் என்கிற
முறையில் ஒன்றரை ஆண்டுகளில் சரி பண்ணி விடலாம். எந்த வயதிலும் இதனை செய்து
கொள்ளலாம். |