சேவைகள் |
CATEGORIES | |||||
|
கணினி |
கவிதைகள் |
பெண்கள் உலகம் |
சிறுவர் பூங்கா |
உடல்நலம் |
தமிழ் சினிமா |
ஆன்மீகம் |
நகைச்சுவை(ங்க...)! | ||||||
|
Email Subscribe |
Serch |
|
Statistics |
Online Users |
|
Site Friend |
|
இணைப்பு கொடுக்க |
Code : |
Vote Plz.. |
|
Main » 2009 பங்குனி 2 » யோசனை.....
2:05 PM யோசனை..... | |
உனக்கு என்ன வர்ணம் பிடிக்கும் ? - கேட்டாய் நீ, உனது கண்ணின் கருவிழியில் தெரியும் மென்மையான கருப்பு; யோசிக்காமல் சொன்னேன் நான் !! உனக்கு என்ன பாடல் பிடிக்கும் ? - கேட்டாய் நீ, உனது பெயரை வரிக்கு,வரி சொல்லும் திரைப்பாடல்தான்; யோசிக்கவேயில்லை நான் !! உனக்கு எந்த மொழி பிடிக்கும் ? - கேட்டாய் நீ, அழகான தமிழ்,நீ பேசும்போது இன்னும் அழகு கூடுவதால்; யோசிக்க என்ன இருக்கிறது இதில் ?! உனக்கு எந்த உணவு பிடிக்கும் - கேட்டாய் நீ, உன்னிடம் இருந்து கற்றுக்கொண்ட சைவ உணவு; சுவையைப்பற்றியும் யோசிக்கவில்லை !! உனக்கு எந்த கலைஞனை பிடிக்கும் - கேட்டாய் நீ, தனது தூரிகையில் அழகாய் உன்னை படைத்த பிரம்மன்னைதான்; யோசனை எதற்கு இப்பதில் சொல்ல ?! உனக்கு யாரைப் பிடிக்கும் - கேட்டாய் நீ, என்றென்றும் உன்னை மட்டும்தான்; யோசனைக்கே இடமில்லை இக்கேள்வியில் !! நான் கேட்டேன்..... என்னை உனக்கு பிடிக்குமா ?? எனது காதல் உனக்கு புரிகிறதா ?? என்னோடு காலமெல்லாம் வாழ்கிறாயா ?? யோசிக்கின்றாய் !! உனது கேள்விகளுக்கு யோசிக்காமல் பதில் தந்தேன் நான்; உன்னிடம்தான் எவ்வளவு நீண்ட யோசனை ?! யோசனையும் அழகு பெறுவது உன்னிடம்தான்; இதையும் யோசிக்காமல்தான் சொல்கிறேன் !! | |
|
Total comments: 1 | |
| |