Main »
2009 » பங்குனி » 1 » எப்படிச் சொல்வது?
11:59 AM எப்படிச் சொல்வது? |
பெண்ணே!
என் காதலை உன்னிடம்
எப்படிச் சொல்வது?
காதலுடன் பேசக்
காட்டாற்று வெள்ளமாய்க்
கரைபுரண்டு வந்த கவிதைகள் உன்
கண்களைக் கண்டதும் கானலாகின.
சொல்ல நினைத்துத் துடித்தவை
சொப்பனத்தில் கண்டனவாய்க் கலைந்து விட்டன.
ஒத்திகை பார்த்து வந்த வசனங்களும் உன்
ஓரவிழிப் பார்வைக்கு முன்னே ஓடியே விடுகின்றன.
கண்டவுடன்
கதவுக்குப் பின் மறையும் உன்னைக்
காண மனது துடித்தாலும்
பண்பாடு தடுக்கிறது;
என் பாடு சொல்ல வழியில்லையே?
சொல் பெண்ணே!
என் காதலை உன்னிடம்
எப்படிச் சொலவது? |
Views: 1440 |
Added by: m_linoj
| Rating: 4.5/6 |
Total comments: 6 | |
0
எப்படிச் சொலவது? >> By Words, Expression etc
| |
|
|