வளர்ந்து வரும் இந்த BCI (brain computer interface)தொழிநுட்பம் மனிதமூளையை கணனியுடன் இணைக்கும் ஆராய்ச்சியை பலமாக மேற்கொண்டு வருகிறது.
இதன் மூலம் இயற்கையான மனிதமூளையானது செயற்கையாக கொடுக்கப்படும் தகவல்களை ஏற்று அதன் படி நடக்க வைக்கப்படுகிறது.
உடல் ஊனமுற்றோருக்கு இது ஒரு வரபிரசாதம் என்றே சொல்லலாம். இதற்கான முதல் ஆராய்ச்சியானது 1970ல் மேற்கொள்ளப்பட்டது. பின் இந்த தொழிநுட்பம் ஒரு படி மேல் சென்று குரங்கில் எலக்ரோட் வைத்து வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டது.
மேலும் இதற்கான ஆரம்பகால படிப்புகள் 1990ல் எலிகளில் மேற்க்கொள்ளப்பட்டு ஆராய்ச்சிகள் தொடங்கி சாதனை படைக்க ஆரமித்தன.
உதாரணமாக உங்கள் கையில் ஏற்பட்டிருக்கும் தசை சிதைவால் முளையில் இருந்து வரும் தகவலை பெற்று கை இயங்க முடியாமல் இருக்கும் போது அந்த கையில் பொறுத்தப்பட்டிருக்கும் எலக்ரோட் ஆனது மூளை இதைத் தான் சொல்கிறது என்று கைகளை மூளையின் தகவலை பெற வைக்கிறது.
ஆங்கிலப்படங்களிலும் இந்த தொழில்நுட்பத்தை பார்த்து வியந்திருப்போம். அத்தனையும் உண்மைதான் நீங்கள் நினைக்கும் ஒன்றை ஒரு கணனி செய்துவிட்டால் அப்பாடா வேளை மிச்சம் என்று தானே நினைக்கத் தோன்றும். அதைத் தான் இந்த தொழிநுட்பம் செய்கிறது.
மூளையில் பொறுத்தப்படும் இந்த சென்ஸ்சார்கள் நரம்பு மண்டலத்தின் அசைவுகளை புரிந்து வைத்திருக்கும். நீங்கள் என்ன நினைப்பீர்கள், எதை நினைப்பீர்கள் என அதற்கு தெரியும். அதற்கான கட்டுப்பாட்டினை சென்ஸ்சாரானது பெற்ற பிறகு அதற்கான வேளையை தொடங்கிவிடும்.
கைகள் இல்லாதவர் 100 கிலோ எடையை செயற்கை கை மூலம் தூக்குகிறார், கால் இல்லாத ஒருவர் போட்டியில் ஓடி தன் கால்களை கட்டுப்படுத்துகிறார், கண்களாலே பேசும் காதலர்களின் பேச்சுகளை ரெட்டினா மூலம் கணனி சொல்கிறது, போலியான விளையாட்டு உலகத்தில் மூளையின் செயல்பாட்டால் அனைத்தையும் கட்டுப்படுத்த முடிகிறது இன்னும் அடுக்கிக் கொண்டே போகலாம்.
இவை எல்லாம் எப்படி சாத்தியமாகிறது என்பதற்கு பின்னால் இந்த தொழிநுட்பம் ஒளிந்திருக்கிறது.
மிரட்டும் அருணால்ட் திரைப்படம் முதல் உலகைக் கலக்கிய அவதார் வரை இந்த தொழிநுட்பம் மறைந்திருக்கிறது என்பது மறுக்க முடியாத உண்மை. அதுமட்டுமல்லாது கூகுள் அறிமுகப்படுத்திருக்கும் கூகுள் கிலாஸ் கூட இந்த தொழில்நுட்பத்தின் பிரதிபலிப்பே என சொல்லலாம்.
மருத்துவத்துறை முதல் உலகை அடுத்த நிலைக்கு எடுத்துச் செல்லும் அறிவியல் துறை வரை இந்த தொழிநுட்பம் எதிர்காலத்தில் புது மாற்றத்தை கொண்டு வரும் என்பதை மறுக்க முடியாது.
Source: http://www.lankasritechnology.com/view.php?203609F220eZnBd34eaymOlH4cbdQ6AAcddcUoMQAdbc4JlOmae42dBnZ3e032F90603 |