தரவிறக்கம் செய்த மென்பொருட்களை உரிய இடத்தில் உரிய முறையில் நிறுவிக் கொள்வோம். தரவிறக்கம்
செய்தவற்றை எங்கே பதிந்து/சேகரித்து வைத்துள்ளீர்கள் என்பது ஞாபகம் இருக்கிறது தானே? சரி... இனி...
முதலாவது: JDK (jdk-1_1_8_010-windows-i586.exe) மென்பொருளை நிறுவுவோம்.ஒரு செயலியை,
கோப்பினை, அல்லது உறையினைத் திறப்பதற்கு "வின்டோசைப்" பொறுத்த மட்டில் அந்த செயலியில்,
கோப்பில், அல்லது உறையில் இரண்டுமுறை எலியின் (Mouse) இடது புறத்தினால் சொடுக்கவேண்டும்.
சரி நாம் JDK செயலியை பின்வரும் முகவரியில் நிறுவுவோம்: C:/jdk1.1.8
இரண்டாவது: JRE (jre-1_1_8_010-windows-i586.exe) மென்பொருளினை C:/jdk1.1.8/jre என்னும்
உறையினுள் நிறுவுவோம்.
மூன்றாவது: JDK - Documentation ஐ அவிழ்த்து C:/jdk1.1.8/docs என்னும் உறையினுள் சேர்ப்போம்.
நான்காவது: Windows Help (tut-winhelp) என்பதை அவிழ்த்து C:/jdk1.1.8/tutorial என்னும் உறையினுள்
சேர்பபோம்.
ஐந்தாவது: Jikes-Compiler (jikes-1.18-windows) இனை அவிழ்த்து அதற்குள் உள்ள jikes.exe என்னும்
கோப்பினை மட்டும் தனியே எடுத்து C:/jdk1.1.8/bin என்னும் உறையினுள் சேர்க்கவும்.
ஆறாவது: இறுதியாக Java Editor ஐ எங்காவது ஓர் இடத்தில் வைத்து அவிழ்த்து, அதனுள் உள்ள setup.exe
என்பதை அழுத்துவதன் மூலம் C:/jdk1.1.8/javaeditor என்னும் உறையினுள் நிறுவவும்.
|