சுருக்கமாகச் சொல்லின் எல்லாம் முடியும்.
உதாரணம்: அசைவூட்டம், இணையப்பக்கங்களில் இயங்கும் நாற்சந்திகள்(Chatroom),
கணிப்பி(Calculator), இணையப்பக்கம், இசை, எழுதிகள், சிறிய மிதக்கும் செய்நிரல்(Applet),
இணையப்பக்க நேரங்காட்டி, விளையாட்டு மென்பொருட்கள், மொழிபெயர்ப்புச் செயலிகள்,
கல்வி சார் செயலிகள், இன்னும் பலப்பல..
யாவாவைச் சுற்றி:
யாவா மிதக்கும் செய்நிரல் (Java Applet): இது இணையத்தின் மூலம் இன்னொரு
கணணியிலிருந்து (இணைய வழங்கி)உலாவி (Browser) மூலம் தரவிறக்கப்பட்டு உங்கள்
கணணியில் இயங்கும் ஒரு செயலி.
யாவா பயனுறுத்தம் (Java Application): இது உங்கள் கணணியிலிருந்தே இயங்கும்
செயலி வகை.
யாவா எழுத்துரு (Java Script): இதற்கும் யாவாவிற்கும் நேரடியாக எந்த சம்பந்தமும்
இல்லை. எனவே நீங்கள் யாவாவையும், யாவா எழுத்துருவையும் ஒன்றென எண்ணிக் குழம்பி
விடாதீர்கள். இரண்டுக்கும் ஒரே ஒரு ஒற்றுமை இருக்கின்றது. அது யாவா என்னும் பெயர்தான்.
மற்றும்படி யாவா எழுத்துரு இணையமொழியான HTML உடன் இணைத்து எழுதப்படும் எழுத்துரு
மட்டுமே. இது இணைய உலாவியான NETSCAPE இன் தயாரிப்பு. இது ஒரு செயலி என்று கூடச்
சொல்லமுடியாது. பெரிய செயலிகள் உருவாக்கத்திற்கும் இது பயன்படுத்தப்படுவதில்லை.
இது யாவா போன்று Bytecode வடிவில் தொகுக்கப்பட்டு (compile) தரப்படுவதில்லை. நேரடியாகவே
இயங்குவது. இன்னொன்று என்னவென்றால் யாவா மிதக்கும் செய்நிரலைவிட வேகம் குறைந்தது.
|