சேவைகள் |
CATEGORIES | |||||
|
கணினி |
கவிதைகள் |
பெண்கள் உலகம் |
சிறுவர் பூங்கா |
உடல்நலம் |
தமிழ் சினிமா |
ஆன்மீகம் |
நகைச்சுவை(ங்க...)! | ||||||
|
Email Subscribe |
Serch |
|
Statistics |
Online Users |
|
Site Friend |
|
இணைப்பு கொடுக்க |
Code : |
Vote Plz.. |
|
Main » Articles » மென்பொருள் கற்க » எளிய தமிழில் JAVA | [ Add new entry ] |
யாவா - இயல்பு
இலகுவானது(easy): சி++ என்னும் கணணி மொழிபோன்று யாவாவும் இலகுவானது. அதனைப்
போன்று என்பதைவிட, அதனைவிட இலகுவானது என்பது மிகப் பொருந்தும். சி++ மொழி கற்றவர்களுக்கு யாவா மொழி பயன்படுத்துவது எளிது. அதேபோல் யாவா மொழியினைப் பயன்படுத்துவதன் மூலம் சி++ மொழியின் அந்தரங்கங்களை அறிந்துகொள்ளக்கூடிய வசதியுண்டு. எளிமையானது(simple): சாதாரணமாகவே அனைத்தையும் விளங்கிக் கொண்டு பயன்படுத்தக்கூடிய வசதியுண்டு. அதுதவிர IBM, Symantec போன்ற நிறுவனங்கள் சில செயலிகளை உருவாக்கியுள்ளன. அவற்றின் மூலம் தேவைளான சில உருவங்களை எளிதாக இணைத்துக் கொள்ளலாம். இதனால் மற்றைய கணணிமொழிகளின் பலவீனங்களை திருத்தி தனக்குப் பலம் சேர்த்துள்ளது. நம் நாட்டில் முற்றத்தில் சாதாரணமாக சேலை உடுத்துக் கொண்டு குந்தியிருக்கும் பாட்டி போன்று எளிமையானதாய் இருக்கும். ஆனால், அதன் எளிமைக்குள்ளே அனைத்து இயக்கங்களும் சாதனைகளும் அடங்கிக் கிடக்கும். பொருளை மையப்படுத்தியது(object-oriented): பொருளை மையப்படுத்திய செய்நிரலாக்கத்தின் (programming) போது பொருள் உருவாக்கத்திலேயே முழுக்கவனமும் செலுத்தப்படுகிறது. இன்னமும் குறிப்பாகவும் விளக்கமாகவும் சொல்லப்போனால் ஒரு பொருளானது தரவுகளையும்(Data) செயற்பாடுகளையும்(function) அடிப்படையாகக் கொண்ட செயல்முறையால்(Methode) ஆனது. பகிர்ந்தளிக்கப்பட்டது(Distributed): யாவாவின் செயற்பாடுகள் எல்லாம் ஒரே இடத்தில் இருந்து இயங்கத்தேவையில்லை. அதாவது தூரத்தில் இருக்கின்ற ஒரு பொருளை (இங்கு நான் பொருள் என்று குறிப்பிடுவது தரவுகளையும், செயற்பாடுகளையும் அடிப்படையாகக் கொண்ட செயல்முறையைத்தான்) இணையத்தின் ஊடாகவே இயக்கமுடியும். இணைய உலாவிகளில் (Browser) அதற்கான சேவைகள் இணைக்கப்பட்டிருப்பதே இதற்குக் காரணம். விளக்கமுடையது (மொழிபெயர்ப்பு): மனிதனுக்கு விளங்கக்கூடிய யாவா மொழியானது JAVAC-Compiler(தொகுப்பி) மூலம் கணணி இயந்திரங்கள் விளங்கிக்கொள்ளக்கூடிய Bytecode (I O I O I O) முறையில் மாற்றப்பட்டு வழங்கப்படுகிறது. இதனை உணர்ந்துகொணடு கணணி இயந்திரங்கள் தமது சேவையை வழங்குகின்றன. இன்னொன்று குறிப்பிடவேண்டும் என்னவென்றால், இது Bytecode முறையில் அமைந்திருப்பதால் எந்தவித மாற்றங்களும் இன்றி யாவா மொழியை அங்கீகரித்த அனைத்து கணணி இயந்திரங்களிலும் செயலாற்றும். பலமானது(robust)& பாதுகாப்பானது: யாவா தனது தொகுப்பி(compiler) மூலமும், ஓடுநேர சூழல் மூலமும் தன்னை மேலும் பலப்படுத்துகிறது. அதாவது ஆரம்பத்தில் தொகுப்பி மூலம் பிழைகள் கண்டறியப்படுகின்றன. அதன்பின்னர் அது இயங்கும்போது "யாவா-ஓடுநேர-சூழல்" (Java-Runtime-Environment) பிழைகள் கண்டறியப்பட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. ஒரே நேரத்தில் பல்வித செய்பாடுடையது (Multithread): அதாவது ஒரே நேரத்தில் பலவித செயற்பாடுகள் ஒன்றோடு ஒன்று இணைந்து செயலாற்ற்றுவதன் மூலம் தனக்குரிய வேலையில் முழுக்கவனமும் செலுத்தப்படுகிறது. | |
Views: 1422 | |
Total comments: 0 | |