linoj.do.am

சேவைகள்
CATEGORIES
போட்டோஷாப்
எளிய தமிழில் SQL
எளிய தமிழில் PHP
எளிய தமிழில் JAVA
எளிய தமிழில் C++
கணினி
கவிதைகள்
பெண்கள் உலகம்
சிறுவர் பூங்கா
உடல்நலம்
தமிழ் சினிமா
ஆன்மீகம்
நகைச்சுவை(ங்க...)!
சர்தார்ஜி
குட்டீஸ்
மருத்துவம் & நீதிமன்றம்
பொது
அரசியல்
குடும்பம்
Email Subscribe

பதிவுகளை நீங்கள் உங்கள் ஈமெயில் மூலமாகவே பெறலாம். உங்கள் ஈமெயில் முகவரியை இங்கு பதிவு செய்து கொள்ளுங்கள்

Enter your email address:

Serch
Statistics
Online Users

Site Friend
linotech.info
ommuruga.fr
இணைப்பு கொடுக்க
linoj.do.am
Code :
இணையத் தமிழ் உலகம் - க்கு இணைப்பு கொடுக்க மேலே உள்ள 'code' -ஐ Copy செய்து உங்கள் தளம் / Blog-ல் Paste செய்யவும்.

linotechinfo.com
LinoTechinfo - க்கு இணைப்பு கொடுக்க மேலே உள்ள 'code' -ஐ Copy செய்து உங்கள் தளம் / Blog-ல் Paste செய்யவும்.

linotech.info
LinoTech.info - க்கு இணைப்பு கொடுக்க மேலே உள்ள 'code' -ஐ Copy செய்து உங்கள் தளம் / Blog-ல் Paste செய்யவும்.
Vote Plz..
Tamil Top Blogs

My Topsites List
கல்வி
கல்விச்சேவை
யாழ். சென்ஜோன்ஸ்
திருகோணமலை இந்து
சாவகச்சேரி இந்து
ஹாட்லி கல்லூரி
கொக்குவில் இந்து
தமிழ் செஸ்
Jaffna Central - Canada
Vembadi Girl's High School
University of Jaffna
cutsa
University of Moratuwa University of Kelaniya
University of Colombo
The Open Uni of SL
Uni of Sri
University of Peradeniya
Jayewardenepura
Main » Articles » மென்பொருள் கற்க » எளிய தமிழில் SQL [ Add new entry ]

எளிய தமிழில் SQL - பாகம் 9

எளிய தமிழில் SQL - பாகம் 9

ஒரு சிறிய Table ஒன்றை உருவாக்கிக்கொள்வோம். அதைக் கொண்டு SELECT ன் தன்மைகளை ஆராயலாம்.

Table ஒன்றை உருவாக்குவதற்காக, GUI (Graphical User Interface) வழியாக என்ன செய்வதென்று ஏற்கனவே பாகம்-5ல் பார்த்திருக்கிறோம்.

அதையேCUI எனப்படும் Character User Interface வாயிலாக T-SQL Editor ல்தட்டித்தட்டியே ஒரு Tableன் Structureஐ எப்படி உருவாக்குவது என்பதை இங்கேகாணலாம்.

T-SQL Editorல் எவ்வாறு நிரல் எழுதுவது? T-SQL Editorக்கு எந்த செயல்வழி மூலம் செல்வது? ஆகியவற்றைத்தெரிந்து கொள்ள - இங்கே சொடுக்கவும்.

ஒரு வழியாக T-SQL Editorக்கு வந்துவிட்டோம்.

Table ஒன்றை புதிதாக உருவாக்க உதவும் ஒரு எளிய pattern கீழே :

CREATE TABLE tableName
(

ColumnName1 datatype,

ColumnName2 datatype,

ColumnName3 datatype,....
)
இந்தpattern ஐ Syntax என்பார்கள். கணக்குப் பாடத்தில் ஒரு கணக்கைச் செய்வதற்குமுன் மாதிரி கணக்கைக் கொடுத்து - அதைப்போல மற்றொன்றைச் செய்யச்சொல்வார்கள். அந்த மாதிரி கணக்கு போலத்தான் இந்த Syntax.

இந்தSyntax ல் tableName என்கிற இடத்தில் ஒரு அட்டவணையின் பெயர் (MyList),ColumnName1 என்கிற இடத்தில் Person#, LastName, FirstName, Cityபோன்றவையும் ஒவ்வொரு DataTypeக்கு நேராக அதன் வகையையும்குறிப்பிட்டுவிட்டால் கீழ்க்கண்டமாதிரி Tableன் வடிவம் இருக்கும்.

CREATE TABLE MyList
(

Person# int,
[Name] varchar(50),

City varchar(50)

)


Nameஎன்பது SQL ல் உள்ளமைந்த ஒரு தனிப்பட்ட keyword. ஆகவே அதைப் பிரித்துக்காண்பிப்பதற்காக [Name] என ஒரு அடைப்புக்குள் (Square Bracket)குறிப்பிடுகிறோம். இந்த Pattern - Syntax ஐ நிரப்பிய பிறகு F5 keyஐவிசைப்பலகையில் அழுத்தி Table ஐ உருவாக்கலாம். ஏதேனும் பிழைச்செய்திவந்தால் அதைச் சரிசெய்தபிறகு Table உருவாகிவிடும்.

Table உருவாகிவிட்டதா என்பதை எப்படி அறிவது?

ஒரு சிறிய SELECT வடிவம் ஒன்று.

SELECT * FROM tableName ---> ஒரு Tableல் இருக்கும் அனைத்து rowsஐயும் திரையில் காண்பிப்பதற்காக.

SELECT * FROM MyList --> MyList என்பது நாம் சற்று முன்னர் உருவாக்கிய Tableன் பெயரே. இதை இயக்குவதற்கு F5 அழுத்தினால் கிடைக்கும் விடை கீழே :

இங்கே * என்பது அனைத்து rows ஐயும் குறிக்கிறது.

நாம் இப்போது உருவாக்கிய Persons என்கிற Tableல் எந்தவிதமான தகவலும் ஏற்றப்படவில்லை. வெறும் Structure மட்டுமே உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த MyList என்று சற்றுமுன்னர் உருவாக்கிய Tableல் ஒவ்வொரு rowவாக புதுப்புது தகவல்களை ஏற்றுவதற்கு என்ன செய்யவேண்டும்?

புதிய தகவல்களை ஏற்றுவதற்கு உரிய Syntax (Pattern)

INSERT INTO table_name
(
column1,
column2, ...
)
VALUES
(
'value1',
'value2', ...
)


நாம் நமது MyList அட்டவணைக்குத் தகுந்தாற்போல் மாற்றினால்

INSERT INTO MyList (Person#,[Name] ,City) VALUES (1, 'Jimsha', 'Chennai')
INSERT INTO MyList (Person#,[Name] ,City) VALUES (1, 'Valpaiyan', 'Erode')
INSERT INTO MyList (Person#,[Name] ,City) VALUES (1, 'Karthik', 'Erode')
INSERT INTO MyList (Person#,[Name] ,City) VALUES (1, 'Vizhiyan', 'Chennai')
INSERT INTO MyList (Person#,[Name] ,City) VALUES (1, 'PKP', 'USA')

என 5 rowக்களுக்கான தகவல்களை 5 வரிகளில் எழுதவேண்டும்.

இப்போது நாம் கொடுத்த தகவல்களை திரையில் காண்பதற்கு :
SELECT * FROM MyList
எனத்தட்டெழுதி F5 அழுத்தவும்.
விடை கீழே :


CREATE புதிய Tableன் Structureஐ உருவாக்க
SELECT ஏற்றப்பட்ட தகவல்களைப் பார்வையிட
INSERT புதிய தகவல்களை ஒன்றொன்றாகப் பதிந்திட

SELECT ல் Wild Card Character என்று குறிப்பிட்டிருந்தேன். அது என்ன Wild Card Character?



உதாரணமாக SELECT * FROM MyList எனக் கொடுத்தால் ஏற்றப்பட்ட 5 rowsஉம் உடனே கண்முன் வந்து நிற்கும்.

இதில்குறிப்பிட்ட rowsஐ மட்டும் பார்ப்பதற்கு என்ன செய்வது? வடிகட்டுதல்நுட்பத்திற்காக SELECT உடன் WHERE எனப்படும் கட்டுப்பாட்டை உடன்இணைக்கிறோம்..

இப்போது SELECT ன் Syntax இவ்வாறு இருக்கும்.
SELECT * FROM tableName WHERE Condition

Condition என்கிற இடத்தில் Relational மற்றும் Logical Operators ஐப் பயன்படுத்தி வடிகட்டுதல் வேட்டையைத் தொடரலாம்.

சில உதாரணங்கள்:
SELECT * from MyList WHERE Person# = 5

5வது நபரின் தகவல்களை மட்டும் திரையில் காண்பதற்கு
விடை :

SELECT * FROM MyList WHERE Person# >=2 AND Person# <= 4.
2 முதல் 4 வரை எண்களைக் கொண்ட நபர்களின் தகவல்களைக் காண SELECT * FROM MyList WHERE City = 'Erode'
ஈரோடு நகரில் வசிக்கும் நபர்களை மட்டும் பார்க்க

SELECT * from MyList WHERE City <> 'Erode'
ஈரோடு நகரை விடுத்து பிற நகரங்களில் வசிப்போர் யார் யார்?
இது வரை நாம் Wild Card ஐப் பயன்படுத்தவில்லை. இப்போது பயன்படுத்திப் பார்ப்போம். Wild Card என்றால் நிரப்பிகள் எனப்படும்.
Wild Card பயன்படுத்தும் Syntax வடிவம்

SELECT * FROM
tableName
WHERE
filedName
LIKE
'wild pattern'


LIKE 'C%'
எனக்கொடுத்தால் C என்கிற எழுத்தில் ஆரம்பிக்கக் கூடிய எல்லாமே
நகரத்தின் ஆரம்ப எழுத்து C.
SELECT * FROM MyList WHERE City LIKE 'C%'
LIKE '%i%'
எனக் கொடுத்தால் இரண்டாவது எழுத்து i
% என்பது எல்லாமே , _ என்பது ஒரு எழுத்தை மட்டும் குறிக்கிறது.

SELECT * FROM MyList WHERE [Name] LIKE '%i%'
பெயரின் ஏதோ ஒரு எழுத்து i ஆக இருப்பவர்கள் யார் யார்?


நன்றி தமிழ் நெஞ்சம்


Source: http://tamilsql.blogspot.com/2009/01/sql-9.html
Category: எளிய தமிழில் SQL | Added by: m_linoj (2009-06-27)
Views: 1389 | Rating: 0.0/0
Total comments: 0
Only registered users can add comments.
[ Sign Up | Login ]