சேவைகள் |
CATEGORIES | |||||
|
கணினி |
கவிதைகள் |
பெண்கள் உலகம் |
சிறுவர் பூங்கா |
உடல்நலம் |
தமிழ் சினிமா |
ஆன்மீகம் |
நகைச்சுவை(ங்க...)! | ||||||
|
Email Subscribe |
Serch |
|
Statistics |
Online Users |
|
Site Friend |
|
இணைப்பு கொடுக்க |
Code : |
Vote Plz.. |
|
Main » Articles » மென்பொருள் கற்க » எளிய தமிழில் SQL | [ Add new entry ] |
எளிய தமிழில் SQL - பாகம் 6
DQL: SELECT DML: DELETE, INSERT, UPDATE DDL: CREATE, DROP, TRUNCATE, ALTER TCL: COMMIT, ROLLBACK, SAVEPOINT DCL: GRANT, REVOKE மேலே சில கட்டளைகளை (Commands)கொடுத்துள்ளேன். இந்தக் கட்டளைகள் மூலம் Databaseஐ நாம் நமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரலாம். DQL என்பது Data Query Language.ஒரு Databaseன் Tableல் ஏற்கனவே நாம் பதிந்துவைத்துள்ள தகவல்களை தேடிஎடுப்பதற்கு. உதாரணமாக 1000 rows இருப்பதாகக் கொள்வோம். அதில் குறிப்பிட்டசில rows மட்டும் நமக்குத் தேவையெனில் அவற்றை மட்டும் தேடி எடுக்க DQL .இதற்காக SELECT என்கிற கட்டளை பயன்படும். DML என்பது Data Manipulation Language.ஏற்கனவே பதிந்துவைத்திருக்கும் தகவல்களில் மாற்றங்களை ஏற்படுத்த, அழிக்க,உருவாக்க. (தகவல்களைத் தான் மாற்றுகிறதே ஒழிய ஒரு Tableன் Structureல்எந்த மாற்றமும் நிகழாது). DDL என்பது Data Definition Language.புதிய Database (அ) Table போன்றவற்றை உருவாக்க. அதாவது Tableன் Structureஐ உருவாக்க, ஒட்டுமொத்த Table ஐயுமே அழிக்க, மாற்றங்கள் செய்ய. ஒருகுறிப்பிட்ட Column ன் Data Type ஐ மாற்ற.புதிய Column ஐ உருவாக்க,தேவையற்ற Column இருப்பின் அதை நீக்க. TCL என்றால் Transaction Control Language.ஒரு நிரலை இயக்கும்போது ஏதேனும் பிழைகள் ஏற்பட்டால், பிழை ஏற்படுவதற்குமுன்னர் வரை ஏதேனும் மாற்றங்கள் நிகழ்ந்திருந்தால் அவையனைத்தையும்நிராகரித்து முந்தைய நிலைக்குக் கொண்டு செல்வதற்கு. TCL பற்றி சிறிது விளக்கமாகப் பார்ப்போம். உதாரணமாகஒன்றுக்கு மேற்பட்ட Database அல்லது Tableகளில் நாம் ஒரு குறிப்பிட்டProgram ஐ இயக்குவதாகக் கொள்வோம். ஒரு Tableல் உள்ள ஒரு மதிப்பைக் கழித்து(முதலாவது செயல்), அடுத்த Tableல் உள்ள ஒரு குறிப்பிட்ட மதிப்புடன்கூட்டச் செய்ய(இரண்டாவது செயல்) முயற்சிக்கிறோம். முதல் செயல்நல்லபடியாக நிறைவுற்றுவிடுகிறது. ஆனால் இரண்டாவது செயல் நிறைவேறுவதற்குமுன்னர் ஏதேனும் தொழில்நுட்பக் கோளாறு நிகழ்ந்தால் என்ன ஆகும்? முதலாவதுTableல் அந்த மதிப்பு கழிக்கப்பட்டு இருக்கும். ஆனால் கோளாறு காரணமாகஇரண்டாவது Tableல் அந்த மதிப்பு கூட்டப்பட்டு இருக்காது. அப்படியெனில்இதை ஒரு சரியான நிகழ்வாக ஏற்றுக்கொள்ளக் கூடாது. முதலில் கழிக்கப்பட்டமதிப்பை reverse செய்து , தலைகீழாக மீண்டும் பழைய நிலைக்குக்கொண்டுவந்துவிட வேண்டும். அப்போதுதான் முறையான நிகழ்வு. நல்ல உதாரணம் ஒன்று: உங்களதுவங்கியின் ATM அட்டையை, ATM இயந்திரத்தில் செருகி பணம் எடுக்கமுயற்சிக்கிறீர்கள். எத்தனை ரூபாய் பணம் என்பதையும் தட்டிவிட்டீர்கள்.இயந்திரமானது பணத்தை எண்ணிக்கொண்டிருக்கும் சத்தம் கேட்கிறது. திடீரென்றுகோளாறு. Battery down - Power Cut. ஏதோ ஒரு கோளாறு. என்ன ஆகும்? பணம் உங்கள் கைக்கு வராது. உங்கள்வங்கிக்கணக்கிலிருந்து பணம் எடுக்கப்பட்டுக் கழிக்கப்பட்டு இருக்கும்.ஆனால் உங்கள் கைக்குப் பணம் வந்திருக்காது. இப்படியே விட்டுவிட்டால்முறையாகுமா? இந்த மாதிரி இக்கட்டான சமயத்தில் உதவுவதுதான் Transaction Control.TCL ன் பணி என்னவென்றால் ஏதேனும் பிழை ஏற்பட்டிருக்கும்போது அதைத்தலைகீழாக ஆக்கி, reverse செய்து (Undo) ஒட்டுமொத்த செயல்களையும் பழையநிலைக்கு ஆக்குவதே. TCL இருப்பதால் உங்கள் வங்கிக்கணக்கிலிருந்துகழிக்கப்பட்ட பணமானது, இயந்திரக்கோளாறு ஏற்பட்ட உடனேயே, தலைகீழ்இயக்கத்தால் திரும்ப உங்கள் accountல் சேர்க்கப்பட்டுவிடும். (இது எனக்கு இரண்டுமுறை நடந்து இருக்கிறது. கடந்த 3 ஆண்டுகளில் இரண்டுமுறை இந்த TCL இயக்கத்தால் பணம் பரிபோகாமல் தப்பித்தது.) 1) எந்தப் பிழையும் நிகழாமல் இருக்கும்போது ஒட்டுமொத்த நிரலும் நல்லபிள்ளையாக இயங்கி பரிவர்த்தனையை ஒழுங்காக நிறைவு செய்யும். 2)ஏதேனும் பிழை ஏற்பட்டால் உடனே நிரலானது தனது இயக்கத்தை நிறுத்திவிட்டு,அதுவரை செய்யப்பட்ட இயக்கத்தை reverse செய்து தகவல் இழப்பைத்தடுத்துவிடுகிறது. முந்தைய பாடத்தில் Authorization பற்றிப்பார்த்தோம். ஒரு குறிப்பிட்ட பயனாளருக்கு ஒரு Databaseஐப் பார்வையிடமட்டும் அனுமதிக்க DCL உதவும். DCL என்றால் Data Control Language.ஒரு குறிப்பிட்ட பயனர் உருவாக்கிய Database,Table களின் உரிமங்களை அடுத்தபயனாளருக்கு விட்டுத்தருவதற்கு. அல்லது அடுத்தவருக்கு விட்டுத்தந்தசலுகைகளை நிராகரிப்பதற்கு. GRANT என்றால் சலுகைகளை வழங்குவது. உரிமங்களை வழங்குவதற்கு. REVOKE என்றால் கொடுத்த சலுகைகளை / உரிமைகளைத் திரும்பப் பெருவதற்கு. DROP என்பது ஒட்டுமொத்த Database (அ) Table ஐ அழிப்பதற்கு (தகவலும், Structureம் அழிந்துவிடும்). TRUNCATE என்பது தகவல்களை மட்டும் அழிப்பதற்கு (Structure அழியாது). SELECT பதியப்பட்ட தகவல்களைத் தேடித் தருவதற்கு INSERT புதிய rowவை உருவாக்க UPDATE பழைய rowன் தகவலை மாற்றுவதற்கு DELETE பதிந்திருக்கும் row / rows ஐ அழிப்பதற்கு CREATE புதிய Database / Table ஐ உருவாக்க நன்றி தமிழ் நெஞ்சம் Source: http://tamilsql.blogspot.com/2009/01/sql-6.html | |
Views: 1351 | |
Total comments: 0 | |