கணனி ஒன்றினை பொறுத்தவரை அது பல வன்பொருட்களை இணைத்து
இயங்கக்கூடிய ஒரு சாதனம் என நாம் அறிவோம். ஆனால் ஒரு கணனியில் அவ்வளவு
அதிகமான இணைப்பு வாயில்கள்(Ports) காணப்படுவதில்லை. தன்மையிலும்,
தொழிற்பாட்டிலும் வேறுபட்ட கணனியின் வெளி இணைப்பு மென்பொருட்களை விளங்கிக்
கொள்ளக் கூடிய வகையில் ஒரு கணனியில் காணப்படும் சில இணைப்பு வாயில்கள்
எவ்வாறு பயன்படுத்தப்படுகின்றன என்பது இங்கு முக்கியமாகின்றது. அதற்கு
நாம் கணனி ஒன்றில் காணப்படும் இணைப்பு வாயில்களின் வகைகள் மற்றும்
அவற்றினூடாக கணனி... ஒன்றுடன் இணைக்கக் கூடிய சாதனங்கள் பற்றி
அறிந்திருத்தல் இன்றியமையாதது ஆகின்றது.
ஒவ்வொரு
இணைப்பு வாயில்கள்
மூலமும் ஒரு வன்பொருள் சாதனம் கணனி மூலம் இணைக்கப்படுகின்றது எனின் அந்த
இணைப்பின் ஊடாக இரண்டு விதமான செயன்முறைகள் நடைபெறும். ஒன்று தரவுகளின்
கடத்தல், மற்றையது இணைக்கப்பட்டுள்ள இலத்திரனியல்
சாதனத்துக்கான மின்
கடத்தல் என்பதாகும். பொதுவாக இவ்வகையில் உபயோகிக்கப்படும் இணைப்பான்
மற்றும் இணைப்பு வாயில்கள் அவற்றின் PIN வடிவமைப்புக்களை பொறுத்து ஆண்,
பெண் என பிரிக்கப்படுவதுண்டு. PIN களை வெளியே தெரியும் படியாக
கொண்டிருக்கும்
இணைப்பான்கள் மற்றும்
செருகிகள் ஆண்(Male Port)இ எனவும் PIN களை செலுத்தக் கூடியதாக அமைந்துள்ள
செருகி(sockets) வடிவமைப்பில் உள்ளவை பெண்(Female Port) எனவும்
அளைக்கப்படும்.
இரண்டுவகையான மரபுமுறையான இணைப்பான்கள் காணப்படுகின்றன. அவை அவற்றின் முக்கியத்துவம் கருதி இன்றும்
நவீன கணனிகளில்
தொடர்கின்றது. Serial ports and parallel ports என்பவை அவையாகும். இவை
இரண்டும் ஆங்கில எழுத்தான D வடிவில் அமைந்தவை. அதாவது ஒழுங்கீனமான
இணைப்புக்களை தவிர்ப்பதற்கும், சரியான இணைப்பு முறையினை
இலகுபடுத்துவதற்கும் இந்த
வடிவம் துணைசெய்தது. அதனால் இவ்வகை இணைப்பான்கள் (connectors) பல தொழில்நுட்பவியலாளர்களினால் DB என்றோ அல்லது D-subminiature என்றோ அழைக்கப்படுகின்றன.
Serial ports வழமையாக 9 மற்றும் 25 PINs கொண்டவையாக காணப்படலாம். இதில் 9
Pஐளே கொண்டவையில் 5 மேற் புறமாகவும் மிகுதி நான்கு கீழ்ப்புறமாகவும்
அமைந்து காணப்படும்.
அதே போல் 25 PINs கொண்டதில் 13 மேற்புறமாக அமைந்திருக்கும். இவ்வகை இணைப்புக்களின் மூலம் 1bit
தரவுகளே ஒரு நேரத்தில்
பரிமாறப்பட்டன. இது இன்றைய கணனி உலகின் மிகக்குறைந்த தரவுப்பரிமாற்ற அளவு.
அத்துடன் ஒரு வினாடிக்கு 115 115 kilobits (Kbps) வேகத்தில் தரவுகளை
கடத்தின. இவ்வகையான களின் துணையுடன் ஒரு கணனியில் mice, external modems,
label printers, personal digital assistants (PDAs), and digital cameras
போன்ற சாதனங்களின் பயன்பாடுகளை ஒரு கணனியின் வாயிலாக பெறுவதற்கு
சந்தர்ப்பம் அமைத்துக்கொடுக்கப்பட்டது.
Parallel ports இவை 25 pin களை கொண்டவை மேல்வரிசையில் 13
ம் கீள் வரிவையில் 12 அமைந்து காணப்படும். ஆரம்பகாலங்களில் வந்த கணனிகளில்
Parallel ports எனப்படும் இவற்றின்
பயன்பாடுகள் அதிகம்
என்பதனால் இவை அதில் முக்கியத்துவம் பெற்றன. Parallel ports என்பதனை
இலகுவாக printer ports எனவும் விளங்கிக் கொள்ளலாம். ஆரம்ப காலங்களில் அவை
அதற்கே அதிகமாக பயன்படுத்தப்பட்டதனால் காலப்போக்கில் அந்த
பெயரும் அதற்கு உருவாகியது. எப்படியிருந்தபோதும் Parallel ports களில் external CD-ROM drives, Zip drives, and scanners போன்ற ஏனைய
வெளியிணைப்பு வன்பொருட்களையும் இணைத்து பயன்படுத்த முடியும் என்பதனை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
|