Bபயஸ்(BIOS – Basic Input Output System)> ஓர் கணனியின் மத்திய செயற்பாட்டகம்(CPU)
தொடர்பாக ஏற்கனவே ஓர் கட்டுரையில் குறிப்பிட்டோம். ஒரு மத்திய
செயற்பாட்டகம் கணனி ஒன்றின் சிந்திக்கும் பகுதி என தெரிந்து கொண்டோம்.
அப்படியெனில், ஓர் கணனியில் எந்தவகையான செலுத்துகை(Drive) இணைப்புக்கள்
இணையக்கப்பட்டுள்ளன என்பதை எவ்வாறு ஒரு மத்திய.. செயற்பாட்டகம் அறிந்து
கொள்கின்றது? அடுத்து ஒரு
கணனியின் சேமிப்பகங்கள்
தமது வேலைக்கு தயார் என்பதை மத்திய செயற்பாட்டகத்திற்கு தெரிவிப்பது யார்?
USB இணைப்புக்களை நிறுத்துவதும் தொடக்குவதும் யார்? இப்படியான அனைத்து
வினாக்களுக்கும் ““BIOS”” என்பதே விடையாகும். ““BIOS”” என்பது இல்லாமல்
ஒரு கணனியின் பல்வேறுபட்ட
வன்பொருட்களின்
இணைப்புப் பாலம் என்பது சாத்தியமற்ற ஒன்றாகிவிடுகின்றது. ஒரு கணனியின்
ஆழவாநசடிழயசன னை பொறுத்தவரையில் மத்தியசெயற்பாட்டகம் (CPU) ஒன்றிற்கு
அடுத்தபடியாக முக்கியத்துவம் பெறுவது அதன் BIOS ஆகும். BIOS ஒரு firmware
("software on a chip") ஆகும்.
அதாவது மிகச்சிறிய இலத்திரனியல் உறுப்பு (தொகையிடும் சுற்று – IC போன்ற)
ஒன்றினுள் நிறுவப்பட்டிருக்கின்ற மென்பொருள் என்பது இதன் விளக்கம். இது
கணனியின் செயற்பாடு
ஆரம்பிக்கின்ற வேளையிலேயே(system startup) அதிகமாக பல வழிகளில்
தொழிற்படுகின்றது. அத்துடன் இந்தவேளையில் இதன் செயற்பாடு மிகவும்
அவசியமானதும் நுணுக்கம் நிறைந்ததாகவும் அமைந்து விடுகின்றது. அதன் கருத்து
இங்கு ஏதாவது
குழப்பங்கள் ஏற்பட்டால்
கணனியின் இயங்கு தளத்தினை ஆரம்பிப்பது இயலாது போய்விடும்.
எவ்வாறிருந்தபோதும் கணனியில் இயங்கு தளம் ஒன்று இயங்குவதற்கு ஆரம்பித்த
பின்பு (After system startup) பயஸ் ஒன்றின் செயற்பாடு என்பது அதிகமாக
இருப்பதில்லை. ஓர் கணனியை பொறுத்தவரையில் எவ்வாறான வேலைகளை
BIOS செய்கின்றது. என்பது முக்கியமாகும்.
மூன்று முக்கியமான செயற்பாடுகள் இங்கு குறிப்பிடத்தக்கன. தாய்ப்பலகையில்(motherboard) இருக்கின்ற செலுத்துகை
உறுப்புக்களை(Drive) அடையாளம் காணுதலும்
கட்டுப்படுத்துதலும்> The power-on self-test (POST) செயற்பாடு
(ஒவ்வோர் முறையும் உங்கள் கணனியினை ஆரம்பிக்கின்றபோது உங்கள் கணனியின்
வன்பொருட்கள் தொடர்பாக உள்ள
பிழைகளை தேடுகின்ற ஒரு
செயற்பாடு – CPU, system timer, Video display card, Memory, The
keyboard, The disk drives என்பன சில தேடப்படும் பகுதிகளாகும்)>
இயங்குதளம் ஒன்றினை தேடி இயக்கும் செயல்முறை (Bootstrap loader function)
என்பவையே அவையாகும்.
இன்னோர்
முக்கியமான விடையம்> ஒரு கணனியயை பொறுத்தவரையில் BIOS ஒன்று தன்னந்தனியாக செயற்பட முடியாது. அது இயங்குவதற்கு
வேறு இரண்டு முக்கிய உறுப்புக்களின் உதவிதேவைப்படுகின்றது. அதாவது ஒன்று CMOS நினைவகம் (memory - இங்கேயே உங்களால்
பயஸ் தொடர்பாக செய்யப்படுகின்ற அனைத்து மாற்றங்களும் சேமித்து வைக்கப்படகின்றன)> மற்றையது CMOS பட்டறி (battery) என்பவையே அவையாகும்.
|