நம் அன்றாட வாழ்வில் உபயோகப்படுத்தும் பொருட்களில் ஒன்றாகி விட்டது கைப்பேசி.
உண்ண உணவும், உடுக்க உடையும் இல்லாமல் இருப்பார்களே தவிர, ஆனால் கைப்பேசி இல்லாமல் இருக்கமாட்டார்கள் என்று சொல்லும் அளவிற்கு உலகம் நவீனமயமாகிவிட்டது.
பள்ளிக்குழந்தைகளின் கைகள் முதல் வயதானவர்களின் பாக்கெட் என அனைத்து தலைமுறையினரையும் தன் வசப்படுத்திக்கொண்டது இந்த கைப்பேசி.
கைப்பேசியை பயன்படுத்திக் கொண்டிருக்கும் போது திடீரென சார்ஜ் இல்லாமல் சுவிட் ஆப் ஆகிவிட்டால், உடனே நமக்கு கோபம் தான் வரும்.
ஆனால், நாம் இடைவிடாமல் பயன்படுத்தியதால் தான் சார்ஜ் தீர்ந்து விட்டது என்று நினைக்க தோன்றாது.
இவ்வாறு பயணங்களின் போது சார்ஜ் தீர்ந்து போனால், சேரும் இடம் அல்லது எங்கேயாவது இடையில் சார்ஜ் போட்டுக்கொள்ளலலாம்.
ஆனால், நண்பர்களுடன் அடர்ந்த காட்டுப்பகுதிக்கு செல்லும் போது அங்குள்ள காட்சிகளால் வசீகரிக்கப்படும் நீங்கள், உடனே அதனை படம்பிடித்து பேஸ்புக்கில் அப்லோட் செய்ய ஆசைப்படுவீர்கள்.
அந்த சமயம் பார்த்து உங்கள் கைப்பேசியில் சார்ஜ் இல்லாமல் போனால் அதற்கும் ஒரு ஐடியா உள்ளது.
வெறும் சுள்ளிகளால் நெருப்பை மூட்டி அதன் மூலம் கைப்பேசியை சார்ஜ் ஏற்றவும் தேநீர் தயாரிக்கவும் உதவும் வகையில் பயோலைட் கேம்ப்ஸ்டவ்(Biolite camp stove) ஒன்று தற்போது கிடைக்கிறது.
இந்த ஸ்டவ்வில் இரண்டு அறைகள் உள்ளன. ஓர் அறையில் சுள்ளிகளைப் போட்டு எரிக்கலாம்; அந்த அறையின் மீது பாத்திரத்தை வைத்துச் சூடேற்றலாம்.
ஒரு லிட்டர் தண்ணீரை நான்கைந்து நிமிடங்களில் கொதிக்க வைக்கலாம். ஆகவே தேவையான தேநீரைத் தயாரித்துக்கொள்ளலாம்.
|