இந்தியாவில் நோக்கியா லூமியா 630, லூமியா 630 டூயல் சிம் என இரண்டு புதிய மொபைல் போன்களை நோக்கியா நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்த போன்கள் குறித்து சென்ற மாதம் அறிவிப்பு வெளியானது.
இவற்றில் தெளிவான Black IPS Display தரும் 4.5 அங்குல திரை, Corning Gorilla Glass பாதுகாப்புடன் தரப்பட்டுள்ளது.
இதன் Snapdragon 400 Quad Core Processor 1.2 gHZ வேகத்தில் இயங்குகிறது.
விண்டோஸ் போன் 8.1 OS முன்புறமாக 720p HD வீடியோ பதிவு மேற்கொள்ளக் கூடிய 5 மெகா பிக்ஸெல் கேமரா தரப்பட்டுள்ளது.
இதே வடிவமைப்பில் இரண்டு சிம் இயக்கம் கொண்டதாக, இரண்டாவதாகக் கூறப்பட்ட போன் வெளிவந்துள்ளது.
இரண்டு சிம்களுக்கிடையே அழைப்புகளை முன்னோக்கி அனுப்பும் வசதி தரப்பட்டுள்ளது. இரண்டிலும் 1830 mAh திறன் கொண்ட பேட்டரி தரப்படுகிறது.
இவற்றின் RAM நினைவகம் 512 எம்.பி. கொள்ளளவு கொண்டது. இதன் Storage 8 ஜி.பி. இதனை 128 ஜி.பி. வரை உயர்த்திக் கொள்ளலாம். |