c
ஆகாய மார்கமான பயணம் என்பது மானுட உலகுக்கு கிடைத்த மிகச் சிறந்த பேறாகும். ஒரு நாட்டின் நேர அலகில் இருந்து இன்னுமொரு நாட்டின் மாறுபட்ட நேர அலகில் ஒரே நாளில் நீண்டதூரத்தினையும் தாண்டும் இந்த விமானப் பறப்பினை மனிதன் பறவைகளைக் கண்டே உருவாக்கியிருந்தான்.
பறவையின் உடலை சமநிலையில் பேணவும் பறக்கவும் சிறகுகள் முக்கிய பங்காற்றுகின்றன.
பறவையை பார்த்து இயந்திர பறவையை உருவாக்கிய அறிவியல் முயற்சி இன்று பறவையின் இயற்கை தன்மையை போன்று விமானங்களையும் உருவாக்கும் வழி தேடிச் செல்கின்றது.
காற்றோட்டத்திற்கு ஏற்ப பறவைகள் அவற்றின் சிறகுகளை பறப்பதற்கு ஏற்ற வகையில் மாற்றிக்கொள்கின்றன. இதே போன்ற அமைப்பினை விமானங்களில் உருவாக்கி அவற்றின் செயல் திறனை அதிகரிப்பது குறித்து விஞ்ஞானிகள் ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
ஏற்கனவே ஐரோப்பாவில் எரிபொருள் பாவனையை சிக்கனப்படுத்தும் வகையில் விமானங்களை எளிதாக தரையிறக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அத்துடன் விமான பறப்புகள் அதிகரிப்பினால் காற்று மண்டலத்தில் மாசு அளவு பெருகி வருவது குறித்தும் சிந்திக்கப்படுகின்றது.
எனவே வளிமண்டலம் மாசுபடுவதனை குறைக்கும் முயற்சியின் ஒரு அங்கமாக காற்றோட்டத்திற்கு ஏற்ப விமானங்களை தரையிறங்கும் தொழில்நுட்பம் ஏற்படுதப்படவேண்டுமென ஆராய்ச்சியாளர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்
Source: http://www.lankasritechnology.com/view.php?22yOld0bcX90Qd4e2eMM302cBnB3ddeZBnV303e6AA2e4g09racb3lOI43 |