அறுபது வயதில் யோசனை
அவரும் கட்டிலுமாய் அறுபது வயதில் யோசனை மறுபடியும் முப்பது வயது வந்தால் மகனின் பள்ளிப் பையைத் தூக்கிச் செல்ல வேண்டும் மகளின் தலையில் பூ வைத்துப் பின்னி விட வேண்டும் மறுபடியும் நாற்பது வயது வந்தால் மகனின் இளமைக் கிளர்ச்சிகளைப் புரிந்து கொள்ள வேண்டும் மகளின் கல்லூரித் தேர்வுக்கு கூடச் செல்ல வேண்டும் மறுபடியும் அம்பது வயது வந்தால் மனைவியின் முதுமையைப் புரிந்து நடக்க வேண்டும் மக்களின் மனமறிந்து மணம் முடிக்க வேண்டும் மறுபடியும் அறுபது வயது வரும்போது அவரும் குடும்பமுமாய், கட்டில் மட்டும் தனியாக
--------------------------------------நாகேந்திர பாரதி
Source: http://bharathinagendra.blogspot.com/2009/06/blog-post_16.html |
Category: ஏனைய கவிதைகள் | Added by: knbharathi (2009-06-17)
| Author: Nagendra Bharathi E
|
Views: 1703
| Rating: 0.0/0 |