சேவைகள் |
CATEGORIES | |||||||
|
கணினி |
கவிதைகள் |
பெண்கள் உலகம் |
சிறுவர் பூங்கா |
உடல்நலம் |
தமிழ் சினிமா |
ஆன்மீகம் |
நகைச்சுவை(ங்க...)! | ||||||
|
Email Subscribe |
Serch |
|
Statistics |
Online Users |
|
Site Friend |
|
இணைப்பு கொடுக்க |
Code : |
Vote Plz.. |
|
Main » Articles » கவிதைகள் » தாயாக கவிதைகள் | [ Add new entry ] |
விழித்தெழு தமிழா விழித்தெழு!
செங்கமலத்தில் உறங்கும் என் தமிழ் செல்வங்களுக்கும் சொந்த நாட்டிலே சோகங்களை சுமந்து வாழும் என்சொந்தங்களுக்கும் அனுதாபங்களையும் வணக்கத்தையும் வைத்து முதல் முறையாக இணையதளம் மூலம் வருகிறேன் எப்போதெல்லாம் பூமியில் அநியாயம் தலை தூக்குகின்றதோ அப்போதெல்லாம் அவதரிப்பேன் உங்கள் முன்னால் இது அவதார புருஷர்களின் மந்திரம் எப்போதெல்லாம் அறிந்தும் அறியாமலும் உறங்குகின்றீர்களோ அப்போதெல்லாம் என் எழுத்துக்கள் பேசட்டும் உங்களோடு எவர் எவரோ வருகின்றார் எதை எதையோ எழுதுகின்றார் எம் மனதை குழப்பத்துடிக்கின்றார் இணையதளம் மூலம் எவரும் எதையும் எப்பிடியும் எழுதலாம் மயங்கி விடாதே தமிழா! விழித்திடு விழித்தெழு உன் தேசத்தின் விடிவிற்காய் விழித்தெழு இன்னும் ஏன் உனக்கு தயக்கம் இத்தனையும் நடந்தது போதாதா எத்தனை எத்தனை துயரங்கள் எண்ணில் அடங்கா அவலங்கள் ஏன் உனக்கு மயக்கம் மூடி விடு சண் ரிவியையும் இதர பல கொண்டாட்டங்களையும் கட்டிலில் கட்டி அணைத்துபடுப்பதற்கு மட்டும் அல்ல உணர்வு தன்மானத் தமிழனாக வாழ்வதற்கு வேண்டும் உணர்வு காட்டிக் கொடுத்திட அல்ல உணர்வு தனித் தமிழர் தாயகம் அமைத்திட வேண்டும் உணர்வு அறுத்திடு தளையை உடைத்திடு தடையை சுடு காடாய் சுடர் விட்டு எரியுது பார் உன் சொந்ததேசம் மர நிழலில் கூட வாழ இடமில்லை அடிமை எமக்கு சுகமான சுக போக வாழ்க்கை உனக்கு இங்கு உன் தேசத்தை பற்றி சிந்தித்து பார் சற்று குற்று உயிராய் கிடக்கும் எம்மினம் தழைத்திட மோகத்தில் மயங்கி கிடக்கும் உன் உணர்வுகளை சற்று திருப்பிடு எம் தேசத்திற்காக நாயைப்போல் கிடக்கின்றது நடுத்தெருவில் நாதி இல்லாமல் நம்மினம் விழித்திடு விழித்தெழு உலகத்திலே ஒவ்வோர் இனத்திற்கும் தேசமுண்டு உனக்கோர் தேசமுண்டா அகதிகளாய் அடிமைகளாய் சொந்த தேசத்திலே முல்வேலிக்கூட்டுக்குள்ளே முடக்கி கிடப்பவர் உன் இன மக்கள் மட்டுமே ஓற்றுமைப்படு ஒன்றாய் நில் ஒருகுடையின் கீழ் வா எமக்கு ஓர் தேசம் அமைத்திடு என்றும் இல்லா மாதிரி எம் இனத்தை மாற்றி அமைத்திடு பாதகர் போல் எம்மை எண்ணி அழித்திடும் சிங்களம் இதற்கு துணை போகும் எச்சில் இலையை நக்கும் நம்மினத்தில் சிலர் கை கால் அறுபட்டு பேணி வளர்த்த உடல் சிதைந்து உழுது விதைத்த பயிர்முளை போலாய் நிலமகள் மீது தூவிக்கிடக்கின்றது மனிதம் எழுந்திடுமோ மறு ஜென்மம் இருந்திடுமோ காலகாலமாய் இச்சாபம் முடிவேதும் இன்றி முடிந்திடல் தகுமோ எங்கள் தேசத்தில் எந்தக்கனவுகளும் எமக்கின்றி சந்ததி சந்ததிகளாய் சாவுக்கென்று தத்தெடுக்கப்பட்டவன் தமிழனோ வாழ்வினிலே சாவும்முண்டு வருவதற்குநேரமுண்டு வாழ்வேதான் சாவாகி வாழ்வதுமோர் வாழ்வாமோ காலகாலமாய் கட்டிக் காத்தவை அனைத்தும் போலிப் பொருளாய் புதைக்க பட்டும் அழிக்கப்பட்டும் போயின புகliடம் இல்லை புகன்Riட மொழியும் இல்லை ஆதரவற்றோம் அனாதைகளானோம் விழித்திடு விழித்தெழு அகதி என்ற பெயரை அழித்திட நினைத்திடு அரியாசனம் அமைத்திட துடித்திடு அதற்காய் ஒரு படை திரட்டி அணி திரள்வதாய் உறுதி கொள் அன்றேல் குருதிப்பூக்கள் நாளை மலரும் எங்கள் தலை முறைகள் நொந்தழுவார்கள் சாவுக்கும் வாழ்வுக்கும் இடையிலான போராட்டங்கள் தொடரும் இழந்தவைகள் அர்த்தமற்று போக இனியும் பொறுக்கலாகாது எழுந்திடு எழுந்திடு தமிழா விழித்திடு விழித்தெழு எங்கள் குரல்கள் ஓங்கி ஒலிக்கட்டும் நான்கு திசைகளிலும் பிரிந்துநின்று பெறமுடியாததை சேர்ந்தால் சாத்தியப்படுவதை உணர்வாய் உனக்கென்று கிடைக்கும் ஒரு குழி நிலமேனும் உண்மையானது மல்லாந்து படுத்தபடி விரிந்த வானத்தையும் சுதந்திரக்காற்றையும் சுவாசிக்கும்போது அலை அலையாய் எழும்பி வந்து உடல் எல்லாம் அள்ளி இறைக்கும் புழுதி மழையில் புரிந்து கொள்வாய் சுதந்திரத்தின் சுகத்தை விழித்தெழு தமிழா விழித்தெழு rasinthaa | |
Views: 1611 | |
Total comments: 0 | |