சேவைகள் |
CATEGORIES | |||||||
|
கணினி |
கவிதைகள் |
பெண்கள் உலகம் |
சிறுவர் பூங்கா |
உடல்நலம் |
தமிழ் சினிமா |
ஆன்மீகம் |
நகைச்சுவை(ங்க...)! | ||||||
|
Email Subscribe |
Serch |
|
Statistics |
Online Users |
|
Site Friend |
|
இணைப்பு கொடுக்க |
Code : |
Vote Plz.. |
|
Main » Articles » கவிதைகள் » தாயாக கவிதைகள் | [ Add new entry ] |
திசைமாறிய பறவைகள்
இறகொதுக்கி அமரலாமா...? மரங்களே...! தொலைதூரம் பறந்துவிட்டோம் தொலைத்து விட்டோம் முகவரியை..! இளைப்பாறிச் செல்லலாமா? இருபதாண்டுப் பயணம் இது ..! இரத்தக் கறையோடு வந்த பறவைகளே...! யுத்தம் செய்து விட்டா வந்தீர் இங்கே.. கூடுகளைத் தேடாமல் குனிந்து நிற்பதென்ன..! காடு நாடெல்லாம் கயவர் எரித்துவிட்டால் தயவுக்கு யாரிடம் போவோம் மரங்களே ....! தவிக்கிறோம் புவிக்கு வந்ததை எண்ணி...! ஏன் இந்த அவலம் பறவைகளே.....! இணைந்து வாழாமல் இருப்பதும் ஏனோ..? எரியும் நெருப்பென்று விலகி நின்றோம் எரிந்தது எங்கள் கூரையல்லவா.... எரிவது கண்டு திரியானோம் அது எங்களை மட்டுமா.... தீபமென்னும் தேசத்தையல்லவா.. தின்றது.. கொலையுண்ட புறாக்களின் குருதி எம்மில் பட்டுப் பட்டு நிறம் மாறியதல்லவா எம் பறவைக்கூட்டம் கழுகுக் கூட்டங்களே கண்டு அலறியதும்... குழறி ஓடிப்போய் குமிறி அழுத ஞாபகமும் வெள்ளைக் கொடிகளின் வளைவு நெளிவு தன்னில் தெளிவாகத் தெரியும் களங்கம் துடைக்க கழுத்தில் புலிச்சின்னம் துலங்கி நிற்கையிலே கலங்கி ஓடி வந்த வெள்ளைப்புறாக்கள் கண்ணீரோடு நாம் கதற கண்மூடிப் போனார்களே..! கொள்கைப் பறவைகளே..! கூண்டை விட்டு உமை மீட்க.... ஆண்டெல்லாம் அவதிப் பட்டோர் எங்கே...? தெற்குநதித் தொந்தரவால் வடக்கில் அணை கட்டினோமே..... அன்னை தேசம் அதை உடைத்து அந்நியன் ஆகிவிட்டே......! எதிர்காலம் இனிமேல் எப்படியிருக்கும் பறவைகளே...? அது தான் இருளடைந்து விட்டதே எந்தத் திசையில் எம் பறவையினம் பறந்ததுவோ.. அந்தத் திசையில் நாம் பறப்போம் ஆயுள் வரை மாறமாட்டோம் இளங்கவிஞர் ஈழபாரதி | |
Views: 1469 | |
Total comments: 0 | |