குரு என் ஆளு
குரு என் ஆளு |
|
பெரிய
கம்பெனி முதலாளி அப்பாஸ், திருமணமான பிறகும் பெண்கள் பின்னால் அலையும்
சபலக்காரர். அவர் உதவியாளர் மாதவன், முதலாளி போல் தானும் ஒரு கம்பெனிக்கு
முதலாளியாக வேண்டும் என லட்சியம் கொண்டவர். |
நகைக்கடையில்
பணியாற்றும் தன்னைப்போல் ஆசை கொண்ட மம்தாவை சந்திக்கிறார். இருவரும்
நட்பாகிறார்கள். மம்தா மேல் காதல் துளிர்க்கிறது. அப்போது அப்பாஸ் கண்ணில்
மம்தா பட அடைய துடிக்கிறார். அவரை தன்னோடு சேர்த்து வைத்தால் ஒரு
கம்பெனிக்கு முதலாளியாக்குவதாக மாதவனுக்கு உறுதியளிக்கிறார்.
பணஆசை இருப்பதால் காதலை மறைத்து இருவரையும் சேர்த்து வைக்க முயற்சிக்கிறார்.
ஒரு
கட்டத்தில் பணத்தை விட காதல் உயர்ந்தது என்பதை உணரும், முதலாளியிடம்
இருந்து மம்தாவை மீட்க துடிக்கிறார். காதல் வென்றதா என்பது கிளைமாக்ஸ்...
பண
ஆசைக்கும் காதலுக்கும் முடிச்சு போட்டு கல கலப்பாக நகர்த்தியுள்ளார்
இயக்குனர் செல்வா. முதலாளி ஆசைகளை நிறைவேற்ற “யெஸ்பாஸ்” என துறு துறுவென
ஆஜராகும் கேரக்டரில் மாதவன் பளபளக்கிறார். காதலியை கெட்ட முதலாளியிடம்
சிக்க வைத்து பிறகு அவரிடம் இருந்து மீட்க போராடுவது தமாஷான விறு
விறுப்பு.
வெளிநாட்டுக்கு விளம்பர சூட்டிங் பெயரில் மம் தாவை
அழைத்து போய் ஆசையை நிறைவேற்ற துடிக்கும் அப்பாஸ் திட்டத்தை முறியடிக்க
அவரது மனைவியை ரகசியமாக வரவழைப்பது விவேக்குக்கு பெண் வேடமிட்டு,
மம்தாவுக்கு பாதுகாப்பாக அமர்ந்துவது என அமர்க்களம் செய்கிறார்.
மம்தாவை
அனுபவிக்க துடிப்பதிலும் மனைவி சந்தேகப்படும் போதெல்லாம் மாதவனின் காதலி
என இணைத்து தப்பிப்பதுமாக அப்பாஸ் அழுத்தம் பதிக்கிறார்.
ஆடம்பர
வாழ்வுக்கு ஆசைப்படுபவராக வரும் மம்தா பணத்துக்கும் காதலுக்கும், இடையில்
அல்லோலப்படுகிறார். ஒரே நாளில் மாதவன் குடும் பத்தினருடன் நெருக்கமாகி
காதல் வயப்படுவது... காதலன் கம்பெனி முதலாளியாக அப்பாஸ் தன் படுக்கைக்கு
செல்ல தயாராவது கேரக்டரை வலுவிழக்க செய்கிறது. காதல் வயப்பட்ட பெண்ணை
மணமான முதலாளிக்கு தாரை வார்த்து கொடுக்க தயாராகும் மாதவன் செய்கையும்
ஒட்டவில்லை.
விவேக்,
எம்.எஸ்.பாஸ்கர், மயில்சாமி காமெடி பெரிய பலம். வெளிநாட்டில் பெண்
வேடமிட்டு வரும் விவேக்கும் அவரை தனது லட்சிய மனைவியாக நினைத்து பின்
தொடரும் எம்.எஸ்.பாஸ்கரும் காமெடியில் பட்டையை கிளப்புகின்றனர். இருவரும்
புதிய பறவை சிவாஜி, சரோஜாதேவி பாணியில் பேசும் காதல் வசனங்கள் வயிற்றை
புண்ணாக்குகிறது. ஒரு கூடை சன்லைட் பாடலுக்கு ரஜினி ஸ்டைலில்
எம்.எஸ்.பாஸ்கரும், ஸ்ரேயாவாக விவேக்கும் நடனம் ஆடுவது ரகளை.
யு.கே.செந்தில்குமார் ஒளிப்பதிவு, ஸ்ரீகாந்த் தேவா இசை வலு சேர்க்கின்றன. | |
Category: திரை விமர்சனம் | Added by: m_linoj (2009-05-02)
|
Views: 1205
| Rating: 0.0/0 |