ஈசா
உப்பள
பின்னணியில் மனசை அப்பளம் போல் நொறுக்குகிற கதை. காதல் மனைவியின்
இறப்புக்கு காரணமானவர்களை சக்கையாக பிழிந்து சாவு கொடுக்கிற வேலைதான்
விக்னேஷ§க்கு!
வழக்கமான இந்த கதையை, சொல்லியிருக்கும் விதத்தில்தான் மிரட்டல்! புதுமுக இயக்குனர் பாலகணேசாவுக்கு ஒரு 'பலே' போடுங்கப்பா...
எடுத்தவுடனே
ஸ்கீரினை ஓப்பன் பண்ணி, இருப்பதையெல்லாம் காட்டாமல், விக்னேஷின்
குடிசைக்குள்ளே லக்ஷணா உயிரோடு இருப்பது போல துவங்குகிறது படம். கிடைக்கிற
அண்ணாச்சிகளையெல்லாம் அண்ணாசி பழம்போல துண்டு போடுகிறார் விக்கி.
இன்டர்வெல்லில்தான் தெரிகிறது, அதுவரை விக்னேஷ் பேசிக் கொண்டிருந்தது
லக்ஷணாவுடன் அல்ல. அவரது பிணத்துடன் என்று! ஏன் இந்த கொலை வெறி துரத்தல்?
காதலும், கவலையுமாக ஒரு பிளாஷ்பேக். தனது மனைவியின் சாவுக்கு
காரணமானவர்களை போட்டுத்தள்ளும் விக்னேஷை துரத்துகிறது போலீஸ். கையில்
சிக்கினாரா? விறுவிறுப்பான சுபம்.
இந்த படமே முதல், அல்லது கடைசி
என்ற வெறியோடு உழைத்திருக்கிறார் விக்னேஷ். இப்படி ஒரு வெறித்தனமான ஹீரோ
இல்லையென்றால், அந்த க்ளைமாக்ஸ் சண்டையை நினைத்துக் கூட பார்த்திருக்க
முடியாது இயக்குனர். பாம்புகள், தவளைகள் நடுவே ஒரு தவம் போலவே கிடந்து
ஊர்ந்திருக்கிறார் விக்னேஷ். மனசு நிறைய பாராட்டலாம். பிதாமகன் விக்ரமை
இமிடேட் செய்வதை தவிர்த்திருந்தால் விக்னேஷின் உழைப்புக்கு ஒரு ராயல்
சல்யூட் கிடைத்திருக்கும். அதுதான் கொஞ்சம் உறுத்தல்.
லக்ஷணா,
நிஜமாகவே லட்சணம். சற்றே அர்ச்சனாவின் சாயல். நடிப்பில் அவரையே மிஞ்சுவார்
போலிருக்கிறது. தன்னை காதலிக்கும் விக்னேஷ் அதை வெளிப்படுத்த
தடுமாறும்போது தானே முன் வந்து காதலை சொல்வது பேரழகு. இவருக்கும்
விக்னேஷ¨க்குமான நெருக்கத்தில் நிழலை மிஞ்சிய நிஜம்.
கவனிக்கத்தக்க
புதுமுகம் அந்த கருப்பு வில்லன். கடைசி வரை 'டவுசரு...' டயலாக்கை விடாமல்
பற்றிக் கொள்வதுதான் சற்றே அலுப்பு. எல்லா ரீல்களிலும் அலட்டிக் கொள்ளாமல்
நடந்து, கடைசி ரீலில் ஆக்ரோஷமாக மோதி செத்துப்போகையில் 'ஒழிஞ்சாண்டா
துரோகி' என்று நெட்டி முறிக்கிறது தியேட்டர்.
காமெடிக்கென்று ஒரு
லாரி ஆட்களை இறக்கியிருக்கிறார்கள். அதில் ஜம்மென்று முந்தி நிற்பது
லொள்ளு மனோகரும், சுவர் முட்டி சுப்புராஜூம்தான்.
மிகவும்
பிரமிக்க வைத்திருக்கிறார்கள் சண்டை இயக்குனர் ட்ரேகன் சிங்லீயும்,
ஒளிப்பதிவாளர் ஆர்.பி.பாலகணேஷ§ம். அதுவும் அந்த க்ளைமாக்ஸ் ஃபைட், ஆங்கில
படங்களுக்கு இணையானது.
இசை- புதுமுகம் ஹரண். எல்லா பாடல்களும்
இனிமை. குறிப்பாக யாரடி நீ மோகினி ரீமிக்ஸ் துள்ளல். பின்னணி இசையும்
காட்சிகளை கவுரப்படுத்துகின்றன.
அவித்த உப்புமாவையே தாளிக்காமல்,
தனக்கென்று தனி அடையாளத்தோடு அறிமுகம் ஆகியிருக்கும் புதுமுக இயக்குனர்
பாலகணேசாவுக்கு சின்ன சின்ன குறைகளை மறந்து தரலாம் ஒரு பூச்செண்டு.
ஈசா- நிச்சயம் லேசா இல்லை! |
Category: திரை விமர்சனம் | Added by: m_linoj (2009-08-21)
|
Views: 1151
| Rating: 0.0/0 |