த.நா-07-அல4777
|
|
டாக்சியில்
பயணிக்கும் கோடீஸ்வரன் ஒருவனுக்கு அந்த டாக்சிக்காரன் கொடுக்கிற
டார்ச்சர்தான் கதை! காலையில் துவங்கி இரவில் முடிவதாக கதை அமைந்தாலும்,
இரண்டே மணி நேரத்தில் 'சுருக்' என்று படத்தை முடித்திருக்கிறார் இயக்குனர்
லட்சுமிகாந்தன். |
அதற்காகவே
மீட்டருக்கு மேலே போட்டுக் கொடுக்கலாம் (16 ரீலில் படம் எடுத்து பாடாய்
படுத்தும் இயக்குனர்கள் இவரிடம் ட்யூஷன் எடுத்துக் கொள்க!) தன்னை
எல்ஐசி ஏஜென்ட் என்று மனைவி சிம்ரனிடம் பொய் சொல்லும் பசுபதி, பார்க்கும்
தொழிலோ கால் டாக்சி ஓட்டுகிற டிரைவர் வேலை. சவாரிக்கு வரும் அஜ்மல்,
'வேகமா போ வேகமா போ' என்று துரத்த, ஆக்சிலேட்டர்.... சிக்னல்...
ஆக்சிடென்ட்!
தன்னை
காப்பாற்ற வேண்டிய பயணி கூச்சல் குழப்பத்துக்கு நடுவே காணாமல் போக, கம்பி
எண்ணுகிறார் பசுபதி. ஆனால், காரிலேயே தனது பேங்க் லாக்கர் சாவியை
தவறவிடும் அஜ்மல் திரும்பிவருகிறார். ஆனால் தன்னை விட்டு விட்டு ஓடியவர்
மீது எரிச்சல் காட்டுகிறார் பசுபதி. 'சாவி தன்னிடம் இல்லை' என்று பொய்
சொல்கிறார். பிரச்சனை பசுபதியின் வீடுவரை போகிறது அஜ்மல் ரூபத்தில்.
தன்னுடைய உண்மையான தொழிலை மனைவியிடம் போட்டுக் கொடுத்த அஜ்மல் மீது மேலும்
உர்ர்ராகிறார் பசுபதி. ஆரம்பிக்கிறது பழிவாங்கல் படலம்.
500
கோடி ரூபாய் சொத்துக்கு அதிபதியான அஜ்மல், பசுபதியினால் பிளாட்பாரத்திற்கு
வருகிறாரா என்பது க்ளைமாக்ஸ். ஏழை பசுபதியின் ஆரம்ப அறிமுகம் கலகலப்பு.
தொடர்ச்சியாக ஐம்பது வேலைகளை விட்டுவிட்டு வந்தாலும், கார் ஸ்டியரிங்கை
விடாமல் பற்றியிருக்கும் இவரது காரில் ஏறுகிற கஸ்டமர்கள் கலகலப்பை
ஏற்படுத்துகிறார்கள்! குறிப்பாக அந்த கால்கேர்ள். புலி பசித்தாலும் புல்லை
தின்னாது என்பதற்கு, அவள் கொள்ளும் சந்தேகம் 'ஏ மச்!'
பசுபதிக்கு
கோபப்படவும், நெகிழவும் நிறைய சந்தர்ப்பங்கள். ஆனால் ஒன்றிரண்டு வலிய
திணிக்கப்பட்டது போல் இருப்பதால் அந்த நெகிழ்ச்சியும் கோபமும் நீர்த்துப்
போகின்றன. தன்னிடம் பொய் சொன்னதோடல்லாமல் போலீசிலும் சிக்கிக் கொள்கிற
புருஷனிடம், மனைவி கொள்கிற இயல்பான கோபத்தை அழகாக
வெளிப்படுத்தியிருக்கிறார் சிம்ரன். எந்நேரமும் உர்ரென்று இருக்க வேண்டிய
கட்டாயம் அஜ்மலுக்கு. காலையில் அணிந்து கொண்ட கோட்டை கூட (ஆக்சிடென்டின்
காரணமாக ரோடில் விழுந்து புரண்ட பிறகும்) கழற்ற மனசில்லாமல்
சுற்றுகிறாராம்! அபத்தம்.
ஒரு
சாதாரண துணை நடிகை செய்ய வேண்டிய வேடம் மீனாட்சிக்கு. ம்ஹ¨ம் என்ன
செய்வார், பாவம்! பீமன் வேஷத்துக்கு ஓமக்குச்சி நரசிம்மனை நடிக்க வைத்தது
மாதிரி, சீரியஸ் ஆன காட்சிகள் எதிலும் லாஜிக் இல்லாதது பெரும் குறை.
குறிப்பாக பேங்க்கில் பசுபதி டாகுமென்ட் திருடும் காட்சி.
அதிருக்கட்டும்... 500 கோடி ரூபாய் சொத்துக்குரிய டாகுமென்ட். கிழிந்து
கிடக்கும்போது அதை கையில் எடுத்துக் கூடவா பார்க்க மாட்டார் அஜ்மல்?
இசையில்
புது துள்ளல் இருக்கிறது. வார்த்தைகள் புரியாத பாடலுக்கு நடுவில், 'அந்த
காலத்திலே பாட்டு எப்படி இருந்திச்சு. இப்பவும் பாடுறானுங்களே' என்று
குரல் கொடுக்கும் கிழவி சூப்பர். 'இப்படி கொல வெறி புடிச்சு
அலையுறானுங்களே...' என்று அதே கிழவி கூக்குரல் இடுகையில் கைதட்டி
ரசிக்கிறது தியேட்டர் மொத்தமும்! யதார்த்தத்தை அனுமதித்த விஜய் ஆன்ட்டனி
வாழ்க! அற்புதமான முழு பாடலாக வந்திருக்க வேண்டிய ஒரு பாடலை சுருக்கி
'தீம் சாங்' ஆக்கிவிட்டது வருத்தம்.
சேசிங்,
மற்றும் ஆக்ஷன் காட்சிகளில் ஆர்.பி.குருதேவின் ஒளிப்பதிவு பிரமிக்க
வைக்கிறது. எடிட்டிங்கில் சசிக்குமாரின் ஜிமிக்ஸ் வித்தை காட்டுகிறது.
ஆத்திச்சூடி பாடலுக்கு டான்ஸ் மாஸ்டர் ஷோபியின் நடனம் கலக்கல்!
சுகமான பயணமாக வரவேண்டிய படம். ஏனோ, சித்திரை வெயிலில் ஏசி இல்லாத கார் சவாரியாகி விட்டது! | |
Category: திரை விமர்சனம் | Added by: m_linoj (2009-04-26)
|
Views: 726
| Rating: 0.0/0 |