காதல்னா சும்மா இல்ல
|
|
எல்லா
உயிர்களிடத்தும் அன்பு செலுத்துகிற காதலி. தனக்கென்று மட்டுமே வாழும்
காதலன். ‘வேவ் லெங்க்த்’ வேற வேற மாதிரி இருக்கே என்று ஒதுங்கிப்
போய்விடுகிறாள் காதலி. |
அவள்
இல்லாத வாழ்க்கை அரை பூஜ்யம் என்று நினைக்கிற ஹீரோ, காதலியை தேடி நடத்தும்
நீண்ட பயணமும், அதில் கிடைக்கிற அனுபவங்களும்தான் படம். காதலி கிடைத்தாளா?
காதல் கை கூடியதா? சுவாரஸ்யமான திரைக்கதை. சொக்க வைக்கும் வசனங்கள் என்று
பொழுது போக்கை குழைத்து போகன்வில்லா வரைந்திருக்கிறார் இயக்குனர்
இளங்கண்ணன். (வாங்கண்ணா....)
அரண்மனை புத்தருக்கு ஞானோதயம்
வந்ததை மூலக்கருவாக கொண்டிருப்பார்கள் போலிருக்கிறது. பிறப்பும், இறப்பும்
எத்தகைய உணர்வை தோற்றுவிக்கும் என்பதை அந்த பணக்கார வாலிபன் மூலம் உணர
வைக்கிற காட்சிகள் அற்புதம். பணக்கார வாலிபனாக நடித்திருக்கிறார் அறிமுக
நடிகர் சர்வானந்த். அழகான தோற்றம், அற்புதமான நடிப்பு என்று ‘நல்வரவு’ போட
வைக்கிறார். கமலினி முகர்ஜியின் மேல் இவர் வைத்திருக்கும் காதலை முதல்
சந்திப்பிலேயே போட்டு உடைப்பது ஷாக். அதன்பிறகு கமலியின் சோஷியல்
சர்வீசுக்கு முட்டுக்கட்டை போடுவதே இவரது ட்யூட்டியாக இருக்கிறது.
அதனாலேயே சர்வானந்த் மீது ரசிகர்களுக்கு வெறுப்ஸ்... ஆனால் இதை பேலன்ஸ்
பண்ணுகிறது இவரது காதலி தேடும் படலம். எங்கெங்கோ குக்கிராமங்களில் அலைந்து
காதலியை கண்டுபிடித்து கட்டிப்பிடிக்கிற போது நம்மையும் மீறி ஒரு
அப்பாடா...!
சர்வானந்துக்கு ஹைவேஸ் தோழனாக மாட்டுகிற ரவிகிருஷ்ணா
படம் முழுக்க சும்மா போட்டு தாக்குகிறார். வாயை திறந்தாலே ரவுசுதான்!
கேரக்டரின் பெயர் ‘வெட்டி’ வேலு! எப்படியாவது அந்த காஸ்ட்லி பைக்கை
‘அடித்துவிட’ வேண்டும் என்று இவர் போடுகிற கணக்கும், அதையும் மீறி
சர்வானந்த் மீது இவர் வைக்கிற பாசமும் ரகளையோ ரகளை! நெஞ்சில் ஈரம் உள்ள
எவரையும் அச்சச்சோ போட வைக்கிறது இவரது முடிவு. அச்சச்சோ...!
வேட்டையாடு
விளையாடு படத்தில் வெள்ளரிக்காய் பிஞ்சு மாதிரி வந்த கமலினி முகர்ஜியா
இது? சில கோணங்களில் கமலினி அலர்ஜி. ஆனாலும், இவர் ஆடும் நாட்டியமும்,
அந்த நடன அமைப்பும் ஆஹா...!
தீவிர கம்யூனிஸ்டுகளையும், அவர்களது
துப்பாக்கி தத்துவத்தையும் வசனங்களால் வளைத்து பிடித்திருக்கிறார்
இயக்குனர். “காட்டை விட்டு வெளியே வாங்க. அழிக்க வேண்டிய சமாச்சாரங்கள்
நிறைய இருக்கு” என்ற அவரது வார்த்தைகள் நிஜமோ நிஜம். ஆனால், கதைக்கு
தேவையில்லாமல் திணிக்கப்பட்ட எபிசோடாகவே இந்த காட்சிகள் இருப்பது சப்!
நாசருக்கு
அதிகம் வேலையில்லை. ஒரு சில காட்சிகளில் வந்தாலும், தியேட்டரை துவம்சம்
பண்ணிவிட்டு போகிறார் எம்.எஸ்.பாஸ்கர். தேஜாஸ்ரீயின் அந்த தெருக்கூத்து
பாடலில் ஓங்கு தாங்காக ஒலிக்கிறது ரெட்டை அர்த்தம்!
எஸ்.ஏ.வின்சென்ட்டின் ஒளிப்பதிவு தனியாக பாராட்டப்பட வேண்டிய ஒன்று.
பாடல்களில் ‘ஜெய் சம்போவும்’, ‘என்னமோ செய்தாய் நீ’ யும் ரிங் டோன்களை ஆக்ரமிக்கும்.
‘கம்மியம்’
என்ற தெலுங்கு படத்தின் ரீமேக்தான் இந்தப்படம். இது தொடரும் என்றால்,
தமிழ்நாடு, ஆந்திர எல்லையில் ஒரு ‘வெல்கம்’ போர்டே வைக்கலாம், நிரந்தரமாக! | |
Category: திரை விமர்சனம் | Added by: m_linoj (2009-04-26)
|
Views: 745
| Rating: 0.0/0 |