வில்லு
|
|
இந்தியில் வெளியான 'சோல்ஜர்' படத்தை ஆல்டர் செய்து விஜய்க்குப் பொருத்தமான சட்டையாகத் தைத்திருக்கிறார்கள். |
அப்பாவின்
பெயரைக் களங்கப்படுத்திய வில்லன்களை மகன் பழிவாங்கும் அதே பழைய பார்முலா
கதைதான். ஆனால் ஆடல், பாடல், கொண்டாட்டம் என அதற்கு வானவில்லின் அத்தனை
நிறங்களையும் சேர்க்க முயற்சி செய்திருக்கிறார் இயக்குநர் பிரபுதேவா.
மேஜர்
சரவணன் நேர்மையின் மறு வடிவம். அந்த நேர்மையால் பாதிக்கப்பட்ட 4 ராணுவ
அதிகாரிகள் சரவணனை சுட்டுக் கொன்று விடுகிறார்கள். தேசத் துரோகி
பட்டத்தையும் சுமத்திவிடுகிறார்கள். இதனால் இறப்பில் கிடைக்க வேண்டிய
ராணுவ மரியாதை கூட சரவணனுக்கு கிடைக்காமல் போகிறது. சரவணனின்
குடும்பத்தையே ஊரிலிருந்து ஒதுக்கி வைத்துவிடுகிறார்கள்.
இருபது வருடங்களுக்குப் பிறகு சரவனணின் மகன் புகழ் (விஜய்-2) தந்தைபட்ட அவமானங்களுக்கு பழி வாங்கப் புறப்படுகிறார்.
தந்தையைக்
கொன்ற நான்கு வில்லன்களிடமும் நான்குவிதமான நாடகங்களை அரங்கேற்றி, கூட
இருந்தே அவர்கள் கதையை முடிக்கிறார்.... என்று நீள்கிறது கதை.
அப்பா
- மகன் என இரட்டை வேடம் விஜய்க்கு. பெரிய ரிஸ்க் எடுத்து நடிக்கும்
அளவுக்கு காட்சிகள் இல்லாததால் ஜஸ்ட் லைக் தட் ஊதித் தள்ளிவிடுகிறார்.
ஆனால் பார்ப்பவர்கள்தான், இன்னும் எவ்வளவு காலத்துக்கு ஒரே மாதிரி
நடிப்பாரோ... என்று சலித்துக் கொள்கிறார்கள்.
மகன் விஜய் நினைத்தால் ஆகாயத்தில் பறக்கிறார், நயனுடன் ஆடுகிறார், சண்டைக் காட்சிகளில் பொறி பறக்க வைக்கிறார்.
நயன்தாராவுக்கு வழக்கம் போல 'ஆடைத் தள்ளுபடி' வேலை தான் இந்தப் படத்திலும். அதை சரியாகச் செய்திருக்கிறார்.
அவருக்கும் விஜய்க்கும் நடக்கும் செல்லச் சண்டைகள், சிணுங்கல்கள் பொங்கல் கரும்பு.
வடிவேலு சீக்கிரமே ரூட்டை மாற்றியாக வேணடிய கட்டாயம் வந்திருக்கிறது. அரைத்த மாவை திரும்பத் திரும்ப அரைத்துக் கொண்டிருக்கிறார்.
படத்தின்
பெரிய பலம் தேவி ஸ்ரீபிரசாத் இசை படத்துக்குப் பலம். அந்த தெலுங்கு ரீமேக்
ஜல்சா..., மம்மி டாடி, நீ கோபப்பட்டுப் பார்த்தால்... பாடல்கள் திரும்பத்
திரும்ப கேட்க வைக்கும் ரகம்.
ஒளிப்பதிவும், பாடல் அமைப்பும் சபாஷ் சொல்ல வைக்கின்றன.
பணத்தைத்
தண்ணீராக செலவழித்திருக்கும் ஐங்கரன் நிறுவனத்தின் தாராளம், காட்சிகளில்
தெரிகிறது. அதே போல, திரைக்கதையிலும் கொஞ்சம் கூடுதல் கவனம்
செலுத்தியிருந்தால் செய்த செலவுக்கு இன்னும் நியாயம் கிடைத்திருக்கும் -
சிறப்பாகவும் இருந்திருக்கும். | |
Category: திரை விமர்சனம் | Added by: m_linoj (2009-04-26)
|
Views: 847
| Rating: 0.0/0 |