ராகவன்
|
|
சாஃப்ட்வேர் ஆளுங்களையெல்லாம் சகட்டு மேனிக்கு போட்டுத்தள்ளும் ஹார்டு(வேர்) ஆசாமியின் கதை. |
இந்த
சைக்கோவை பொறி வைத்து பிடிக்கிற போலீஸ், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துகிறது
அவனை. ஏன் அப்படி செய்தான் என்பதை சிவப்பு ரோஜா கலரில்
சொல்லியிருக்கிறார்கள். ஆனால் ரோஜா கலரை விட, துருத்திக் கொண்டிருக்கும்
முள்தான் கலவரப்படுத்துகிறது.
சிறுவயதில்
தப்பான அம்மாவை, அப்பா போட்டுத்தள்ளும் அந்த கொடூர காட்சியை
பார்த்துவிட்டு பொம்பளைங்களே இப்படிதான்ங்கிற முடிவுக்கு வர்றாரு ஹீரோ.
அதிலே ஒண்ணும் தப்பில்லேடா ராசாங்கிற மாதிரியே அமையுது சந்தர்ப்பங்கள்.
சென்னைக்கு வந்து தங்குற இடத்திலேயும் ஒரு ஆன்ட்டி, ரொம்ப வேண்(ட்)டி
வேண்டி வில்லங்கத்துக்கு கூப்பிடுது. அவ்வளவுதான், ரத்தம் பார்த்திட்டு
அங்கேர்ந்து கிளம்புறாரு ஹீரோ.
ஆட்டோ
ஓட்ட போனாலும் அங்கேயும் வில்லங்கம். பின் சீட்டிலே படம் ஓட்டுற இன்னொரு
ஜோடியை போட்டுத்தள்ளுகிறார். பிறகென்ன? சிட்டி அலர்ட் ஆகுது. இடையிலே இவரை
காதலிக்கும் மாடல் ராதிகா மல்ஹோத்ரா, ராகவன் ரொம்ப நல்லவன்னு அவரை மீட்க
போராடுறாரு. இப்படி போகுது கதை...
புதுமுகம் விஜித்துக்கு ஏமாளி
முகம். அதுவே கதைக்கு சரியா செட் ஆகிறதுதான் நல்ல பொருத்தம். பீச்சில்
பொம்பளைங்க மேலே கையை வைக்கும் ரவுடிகளை அவர் புரட்டி புரட்டி தாக்குவதில்
கொஞ்சம் ஆக்ஷன் இமேஜூம் எட்டிப்பார்ப்பதால், அடுத்த படத்தில் அந்த
ஏரியாவையும் யோசிக்கலாம்.
கலாச்சாரத்துக்கு எதிரா இருக்கிறவங்களை
போட்டு தள்ளும் ராகவன் பக்கத்திலேயே அரைகுறை டிரஸ்சோட இருக்கிற
ராதிகாவுக்கு அட்வைஸ் பண்ணணும்னு தோணலையே ஏன்? அது போகட்டும், ராதிகா
கொப்பும் குலையுமா இருக்கார். நடிக்க வரலேன்னாலும், எதிர்காலத்தில் ஐட்டம்
டான்சுக்கு தயாராகலாம்.
துங்கும்
சிறுமியின் பாவாடையை சரி செய்யும் ராகவன், பறக்கிற அதன் மேலே ஒரு கல்லை
வைத்துவிட்டு போவது டச்சிங். இன்னொரு காட்சியில் தனது டிரஸ்சை போட்டுக்
கொள்ள சொல்லி அன்பு செலுத்தும் சாப்ட்வேர் வாலிபன், போதை தலைக்கேறியதும்
அதை கழற்ற சொல்வது பணக்கார திமிரின் அடையாளம். இப்படி நுணுக்கமாகவும்
சிந்தித்திருக்கிறார் இயக்குனர் பரந்தாமன்.
நீண்ட நாட்களுக்கு பிறகு கங்கை அமரன். இளையராஜா வாய்சில் பாடியிருக்கும் அந்த ஒரு பாடல் ஆஹா. ஒளிப்பதிவும் நேர்த்தி. அட ராகாவன்னு அலுத்துக் கொள்ளும்படி இல்லை! | |
Category: திரை விமர்சனம் | Added by: linoj (2009-06-27)
|
Views: 892
| Rating: 0.0/0 |