|
|
குப்பத்து ராஜா, பணக்கார ரோஜாவை கைபிடிக்கிற வழக்கமான கதைதான். |
அதிலே சாம, பேத, தான, தண்டத்தை கலந்து 'ஆஹா'ன்னு சொல்ல வச்சிருக்கார் டைரக்டர் ஆர் என் ஆர் மனோகர்!
குப்பத்துல
திரிகிற நகுலுக்கு, நடனாலயா டீச்சர் சுனைனா மீது திடீர் காதல். இந்த
கோக்கு மாக்கு லவ்வுக்கு, குண்டு வைக்கிற மாதிரியே அமையுது
சந்தர்ப்பங்கள். சுனைனா பார்க்கும் போதெல்லாம் பெரிய ரவுடியை போல வெட்டு
குத்தில் இறங்கி வெளுத்துக்கட்டுகிறார் நகுல். வெறுப்பும்,
கடுப்புமாக வெறித்து பார்க்கும் சுனைனாவிடம், "நீங்கதாங்க என்னோட
பொண்டாட்டி" என்று சொல்லி மேலும் பினாயில் அடிக்கிறார் நகுல். "செத்தாலும்
சாவேனே தவிர, உனக்கு கழுத்தை நீட்ட மாட்டேன்"னு சவால் விடுகிறார் சுனைனா.
க்ளைமாக்ஸ் என்னன்னு பன்னு துண்ற பச்ச புள்ள கூட சொல்லிடுமே!?
மாசிங்கிற
ரவுடியாகவும், மணிங்கிற நல்ல புள்ளையாகவும் திடீர் செட்டப் செய்து
சுனைனாவை மடக்கப் பார்க்கிற அவரது யுக்தி, மொத்த படத்தையும் ஃபாஸ்ட்
பார்வேடு பட்டனை அமுக்கி கொண்டு செல்லும் கலாட்டா சக்தி! திடீரென்று
சுனைனா வந்துவிட, தலையில் தவலைப் பானையை கவிழ்த்து தப்பிக்கிறாரே, செம
நறுக்!
இன்ஸ்பெக்டர் பவனுக்கு, இருக்கிற வேலையெல்லாம் விட,
இரண்டு பேரும் ஒன்னுதான்னு நிரூபிக்கிற பெரிய வேலை. லாக்கப்புல நகுலை
பூட்டிவிட்டு, "எங்கே கூப்பிடு உன்னோட காதலனை"ன்னு செல்போனை கொடுக்கும்
போது, நகம் கடிக்க ஆரம்பிக்கிறான் ரசிகன். அந்த காட்சி முடிவதற்குள் மொத்த
நகமும் அவுட்!
இரண்டு பேரும் வேற வேறன்னு சுனைனாவை நம்ப வைக்க, ஒரு ஊரே நடிப்பது லாஜிக் இல்லா மேஜிக்.
நகுலுக்கு
இது சவால் கேரக்டர்தான். டான்ஸ், பைட், நடிப்பு என்று சகலத்திலும் ரகளையான
முன்னேற்றம். என்றாலும், ஆள் 'அந்நியன்' போலவே இருப்பதுதான் குறை.
(அதுக்கென்னா செய்யுறதாம்?)
இவருக்கு
பக்க வாத்தியங்களாக அமைந்துவிட்ட சந்தானமும், கருணாசும் போட்டு குலுக்கி
எடுக்கிறார்கள். எம்.எஸ்.பாஸ்கரின் தனி ஆவர்த்தனம், சில இடங்களில்
செல்லுபடியானாலும், பல இடங்களில் நகைச்சுவைக்கு நாட் ரீச்சபிள்தான்!
கெமிஸ்ட்டிரி
கெமிஸ்ட்ரிங்கிறாங்களே, அது சுனைனாவையும் நகுலையும் ஒரே குடுவையில் போட்டு
குலுக்கிய மாதிரி கலந்து கண்ணாமூச்சு காட்டுகிறது. எரிச்சலில் கண்கள்
சிவந்து, காதலில் கண்கள் மலர்ந்து அநாயசமாக நடித்து தள்ளுகிறார்
சுனைனாவும்!
ஹிட்.
இல்லைன்னாலும் ஹிட்தான் என்ற ஒரே மூடில் ட்யூன் போட்டிருப்பார்
போலிருக்கிறது டி.இமான். இசையும், குரல்களும், தாளக் கருவிகளும் இணைந்து
ஒரு மயக்கத்தை வரவழைக்கிறது. துள்ளல் இசை மட்டுமல்ல, து£க்கலான இசையும்
கூட. குறிப்பாக நேக்கா ரொம்ப நேக்கா... வெற்றியின் ஒளிப்பதிவு நேர்த்தி.
நகுல் தமிழ்சினிமாவிலிருந்து 'நகுர்த்த' முடியாத சக்தியாகியிருக்கிறார். மாசில்லாத எம் ஓ என் ஒய்! | |