அமெரிக்க ஆங்கிலம் (History of American English)
மொழி
வல்லுனர்களின் கூற்றுப் படி ஆரம்பத்தில் இங்கிலாந்திலும் அமெரிக்க
குடியேற்றப் பகுதிகளிலும் பேசப்பட்டது ஒரே மாதிரியான ஆங்கிலம் தான்.பிரித்தானியாவின்
ஆதிக்கத்தில் இருந்த அமெரிக்கவிற்கும் பிரித்தானியாவிற்கும் வரி செலுத்தல்
விடயமாக 1775 இல் யுத்தம் மூண்டது. இந்த யுத்தத்தில் பிரித்தானியா படு
தோழ்வியடைந்த து அதைத் தொடர்ந்து அமெரிக்கா 1776 யூலை 4 இல் சுதந்திர
பிரகடனம் செய்துக்கொண்டது. அமெரிக்காவின் சுதந்திரத்தைத் தொடர்ந்து
அமெரிக்க ஆங்கில பேச்சிலும் ஒலிப்பிலும் மாற்றங்கள் ஏற்படத் தொடங்கின.பிரித்தானிய
ஆட்சியிலிருந்து தன்னாட்சிப் பெற்றதைப் போன்று அவர்களது மொழியிலும்
தனித்துவம் இருக்க வேண்டும் என பல அமெரிக்கர்கள் விரும்பினர்.சில அமெரிக்க தலைவர்கள் தமது மொழியில் மாற்றங்கள் செய்ய தீர்மானித்தனர். அறிவியலாளர் பெஞ்சமின் பிறான்கிளின். (Benjamin Franklin [1706-1790]) அமெரிக்க ஆங்கில எழுத்திலக்கணத்திலும் ஒரு சீர்திருத்த முறைமை அவசியம் என்பதை வலியுறுத்தினார்.இருப்பினும் இவரது எண்ணம் நிராகரிக்கப்பட்டது. ஆனால் காலப்போக்கில் அவரது எண்ணக்கருவை மற்றவர்கள் செயல்படுத்த விளைந்தனர்.அவர்களில் ஒருவரே நோவா வெப்ஸரர்.(Noah Webster
[1758-1843]) நோவா வெப்ஸரர் பாடசாலைகளுக்கான புத்தகங்களை எழுதினார்.
அமெரிக்கர்கள் கட்டாயம் அமெரிக்க புத்தகங்களையே கற்க வேண்டும் என்பது
இவரது எண்ணம்.1783 இல் இவரே முதல் அமெரிக்க ஆங்கில சொல்லிலக்கணப் புத்தகத்தையும் வெளியிட்டவராவர்.அவரது மொழி சீர்த்திருத்தமைப்பில் அமைந்த ஆங்கில ஒலிப்பு முறைகளும் சொல்லிலக்கணமுமே இன்றைய அமெரிக்க ஆங்கிலமாக திகழ்கின்றது.1828 இல் முதல் அமெரிக்க ஆங்கில அகராதி நோவா வெப்ஸ்டர் அவர்களாலேயே வெளியிடப்பட்டது. (First American Dictionary)பிரிட்டிஸ்
ஆங்கில சொல்லிலக்கண விதி முறைகள் மிகவும் சிக்கலானவை என நோவா வெப்ஸ்ர்
கருத்து தெரிவித்தார். அதனால் அவர் அமெரிக்க சொல்லிலக்கணப்படியே அமெரிக்க
ஆங்கில பதிப்புக்கள் அமையவேண்டும் என எண்ணியதுடன் அதனை நடைமுறையில்
செயல்படுத்தினார்.அதன் படியே அமெரிக்க ஆங்கில எழுத்திணக்கத்தில் மாற்றங்கள் ஏற்படலாயின.பிரிட்டிஸ்
ஆங்கிலத்தில் “ c-e-n-t-r-e” என எழுதப்படுவதில் கடைசி எழுத்துக்களான
“t-r-e” (டர்) உச்சரிப்பிற்கு அமைவாக இல்லை என்பது நோவா வெப்ஸ்ரரின்
முடிவு. எனவே அமெரிக்க ஆங்கிலத்தில் “center” “c-e-n-t-e-r” என
மாற்றப்பட்டது.பிரிட்டிஸ் ஆங்கிலம்: centre, theatre அமெரிக்க ஆங்கிலம்: center, theater பிரிட்டிஸ்
ஆங்கிலத்தின் “h-o-n-o-u-r” – எனும் சொல்லின் “u” ஒலிப்பில் இல்லாத
அவசியமற்ற எழுத்தென கருதி, அமெரிக்க ஆங்கிலத்தில் இந்த “u” அகற்றப்பட்டு “h-o-n-o-r” என எழுதப்படுகின்றது.பிரிட்டிஸ் ஆங்கிலம்: colour, honour, favouriteஅமெரிக்க ஆங்கிலம்: color, honor, favoriteபிரிட்டிஸ்
ஆங்கிலத்தில் “realise” என உச்சரிக்கும் போது இச்சொல்லின் கடைசி
எழுத்துக்களான “se” ஒலிப்பு “றியலைZஸ்” என ஒலிப்பதால் இதுப்போன்ற
சொற்களின் கடைசி எழுத்துக்கள் "ze" என அமெரிக்க ஆங்கிலத்தில்
பயன்படுத்தப்படுகின்றது.பிரிட்டிஸ் ஆங்கிலம்: realise, theorise, socialise, analyseஅமெரிக்க ஆங்கிலம்: realize, theorize, socialize, analyzeஒரு சொல்லின் ஒவ்வொரு எழுத்தும் ஒலிப்புடன் பேசப்படவேண்டும் என்பது நோவா வெப்ஸ்ரரின் விதி முறையாகும்.நோவா
வெப்ஸ்ரரின் இவ்விதி முறைக்கமைய ஒரு சொல்லின் ஒவ்வொரு பாகங்களும்
ஒலிப்புடன் பேசப்பட வேண்டும் எனும் முறை, அமெரிக்க ஆங்கிலத்தை எவரும்
எளிதாக கற்கக் கூடியதாக இருக்கின்றது.ஐரோப்பிய மற்றும் உலகின்
பல்வேறு மொழியினரும் ஐக்கிய அமெரிக்காவில் குடியேறியதன் விளைவால், பற்பல
பிற மொழிச் சொற்களும் அமெரிக்க ஆங்கிலத்தில் உள் நுழைந்தன. அடிமைகளாக
அழைத்துச் செல்லப்பட்ட ஆப்பிரிக்கர்களின் மொழியில் இருந்தும் பலச் சொற்கள்
அமெரிக்க ஆங்கிலத்தில் சேர்க்கப்பட்டுள்ளன. இச்சொற்கள் அமெரிக்க
ஆங்கிலத்தின் சீர்த்திருத்தத்திற்கு பெரிதும் உதவிதாகக் கூறப்படுகின்றது.பிரிட்டிஸ்
ஆங்கிலத்தில் இல்லாத நிறையச் சொற்கள் அமெரிக்க ஆங்கிலத்தின் சொல்வளத்தை
பெருக்கியுள்ளது. அமெரிக்க பூர்வீகக் குடிகளான செவ்விந்திய மொழிகளில்
இருந்தும் பலச் சொற்களை அமெரிக்க ஆங்கிலம் உள்வாங்கிக்கொண்டுள்ளது.இன்று
அமெரிக்க, பிரிட்டிஸ் ஆங்கில சொற்களிற்கிடையே பல வேறுப்பாடுகள் உள்ளன. சில
சமயம் இவர்கள் பேசும் போது ஒருவருக்கொருவர் விளங்கிக்கொள்ள முடியாத அளவில்
பல சொற்கள் இருப்பதாகவும் கூறப்படுகின்றது.உதாரணம் சில சொற்கள்:பிரிட்டிஸ் ஆங்கிலம்: Flatஅமெரிக்க ஆங்கிலம்: Apartmentபிரிட்டிஸ் ஆங்கிலம்: Liftஅமெரிக்க ஆங்கிலம்: Elavatorபிரிட்டிஸ் ஆங்கிலம்: Chipsஅமெரிக்க ஆங்கிலம்: Friesமேலும்
அமெரிக்காவின் Hollywood" திரைப்படத்துறை வளர்ச்சி, இசை, பாடல்கள்,
விஞ்ஞான வளர்ச்சியின் முதன்மை நிலை, நவீன கற்பித்தல் முறை, தொழில்
வழங்கல், போன்றவைகள் மற்றும் அமெரிக்க இணையத் தொழில் நுட்பம் போன்றன
பிரித்தானிய ஆங்கிலத்தை விடவும் அமெரிக்க ஆங்கிலத்தின் செல்வாக்கை உலகில்
வலுப்படுத்தி வருகின்றது.அமெரிக்க ஆங்கில வரலாற்றிற்கு முற்பட்ட ஆங்கில மொழி வரலாறு இங்கே சொடுக்கி பார்க்கலாம்."பிரிட்டிஸ் அமெரிக்க ஆங்கிலச் சொற்பட்டியல்" தமிழ் விளக்கத்துடன் எதிர்வரும் பாடங்களில் தருகிறேன். |
Category: ஆங்கிலம் ஆக்கங்கள் | Added by: m_linoj (2009-04-24)
|
Views: 1667
| Rating: 4.0/1 |