linoj.do.am

சேவைகள்
CATEGORIES
ஆங்கில பாடப் பயிற்சிகள்
ஆங்கிலம் துணுக்குகள்
ஆங்கிலம் ஆக்கங்கள்
English Lassons
கணினி
கவிதைகள்
பெண்கள் உலகம்
சிறுவர் பூங்கா
உடல்நலம்
தமிழ் சினிமா
ஆன்மீகம்
நகைச்சுவை(ங்க...)!
சர்தார்ஜி
குட்டீஸ்
மருத்துவம் & நீதிமன்றம்
பொது
அரசியல்
குடும்பம்
Email Subscribe

பதிவுகளை நீங்கள் உங்கள் ஈமெயில் மூலமாகவே பெறலாம். உங்கள் ஈமெயில் முகவரியை இங்கு பதிவு செய்து கொள்ளுங்கள்

Enter your email address:

Serch
Statistics
Online Users

Site Friend
linotech.info
ommuruga.fr
இணைப்பு கொடுக்க
linoj.do.am
Code :
இணையத் தமிழ் உலகம் - க்கு இணைப்பு கொடுக்க மேலே உள்ள 'code' -ஐ Copy செய்து உங்கள் தளம் / Blog-ல் Paste செய்யவும்.

linotechinfo.com
LinoTechinfo - க்கு இணைப்பு கொடுக்க மேலே உள்ள 'code' -ஐ Copy செய்து உங்கள் தளம் / Blog-ல் Paste செய்யவும்.

linotech.info
LinoTech.info - க்கு இணைப்பு கொடுக்க மேலே உள்ள 'code' -ஐ Copy செய்து உங்கள் தளம் / Blog-ல் Paste செய்யவும்.
Vote Plz..
Tamil Top Blogs

My Topsites List
கல்வி
கல்விச்சேவை
யாழ். சென்ஜோன்ஸ்
திருகோணமலை இந்து
சாவகச்சேரி இந்து
ஹாட்லி கல்லூரி
கொக்குவில் இந்து
தமிழ் செஸ்
Jaffna Central - Canada
Vembadi Girl's High School
University of Jaffna
cutsa
University of Moratuwa University of Kelaniya
University of Colombo
The Open Uni of SL
Uni of Sri
University of Peradeniya
Jayewardenepura
Main » Articles » ஆங்கிலம் கற்க » ஆங்கிலம் துணுக்குகள் [ Add new entry ]

ஆங்கிலம் துணுக்குகள் Aangilam Mini Lessons

ஆங்கிலம் துணுக்குகள் Aangilam Mini Lessons

வணக்கம் உறவுகளே!

இன்றிலிருந்து “ஆங்கிலம் துணுக்குகள்” எனும் ஒரு பகுதியையும் தொடர்ந்து வழங்கலாம் என்றுள்ளோம். இது எமது வழமையான “ஆங்கில பாடப் பயிற்சி” திட்டத்திலிருந்து வேறுபட்டது. இருப்பினும் இத்துணுக்குகள் ஆங்கிலம் கற்கும் சிலருக்கு, குறிப்பாக ஆரம்ப நிலை ஆங்கிலம் கற்போருக்குப் பயன்படும் என கருதுகிறோம்.

நீங்கள் இந்த "ஆங்கிலம்" வலைத்தளத்திற்கு புதிதாக வருகைத் தந்தவரானால், எமது வழமையான ஆங்கில பாடப் பயிற்சிகளை தொடர விரும்புவரானால் ஆங்கில பாடப் பயிற்சி 1 லிருந்தே தொடருங்கள். முக்கியமாக "Grammar Patterns" களை மனப்பாடம் செய்துக்கொள்ளுதல் பயனுள்ளதாக இருக்கும்.


 ஒரு சொல்லை, வாக்கியத்தை, ஏன் ஒரு முழு ஆக்கத்தையே வேண்டுமானாலும் கெப்பிட்டல் எழுத்துக்களிலேயே (CAPITAL LETTERS) எழுதலாம். அது உங்கள் விருப்பம்.

ஆனால் சிம்பில் (Simple Letters) எழுத்துக்களில் எழுதுவதானால் ஆங்கில மொழிக்கே உரிய சிறப்பியல்புகளைக் கவனிக்க வேண்டியது மிக முக்கியம்.

How To Use Capital Letters

1. ஒரு வாக்கியத்தின் ஆரம்பத்தின் முதல் எழுத்து எப்பொழுதும் கெப்பிட்டல் எழுத்தாகவே இருக்கவேண்டும். (Capital letters are always used at the beginning of a sentence.)

உதாரணம்:

The car is running
I am looking for a job.
He doesn’t understand.
Do you speak in English?
Where are you going?

2. கிழமை, மாதம், பெயர், ஊர், நாடு, மொழி, மதம், போன்றவற்றை எழுதும் பொழுது அதன் முதல் எழுத்தை கட்டாயம் கெப்பிட்டல் எழுத்திலேயே எழுத வேண்டும். இவை வாக்கியத்தின் மத்தியில் வந்தாலும் அப்படித்தான்.

2. கிழமைகள்: Sunday, Monday, Tuesday, Wednesday, Thursday, Friday, Saturday

3. மாதங்கள்: January, February, March, April, May, June, July, August, September, October, November, December

4. பெயர்கள்: Ellalan, Iravanan, Sarmilan, Kavitha, Thamilovia, Tamilnenjan, Tamilselvan

5. ஊர்கள், நகரங்கள்: Jaffna, Chennai, Point Pedro, Betticola, Tricomalee, Madurai, Kilinochchi

6. நாடுகள்: Tamileelam, India, America, British, France, Netherland, Norway, Japan

7. மொழிகள்: Tamil, English, Chinese, Latin, French, Indhi

8. மதங்கள்: Hindu, Muslim, Christian, Buddhism - God, The Prophet Mohammed, Jesus

9. ஆங்கிலத்தில் "நான்" என்று குறிப்பதற்கு எப்போழுதுமே கெப்பிட்டல் "I" யை மட்டுமே பயன்படுத்த வேண்டும். (சிறிய "i" பயன்படுத்துவதில்லை)

10. "சுருக்கப் பயன்பாடுகள்" அதாவது ஒரு முழுச் சொல் அல்லது வாக்கியத்திற்குப் பதிலாக அதன் முதல் எழுத்துக்களை மட்டும் சுருக்கமாக பயன்படுத்தல். இவற்றை ஆங்கிலத்தில் "Abbreviation" என்றழைப்பர்.

உதாரணம்: தொழில் தகமைகளின் சுருக்கம்: MBBS, LLB

சில நாடுகளின் பெயர்களுக்கான சுருக்கம்: USA, UK, UAE

சிலரது பெயர்களின் சுருக்கம்: MGR, MRR

Category: ஆங்கிலம் துணுக்குகள் | Added by: m_linoj (2009-04-23)
Views: 2187 | Rating: 5.0/2
Total comments: 0
Only registered users can add comments.
[ Sign Up | Login ]