நாம் ஏற்கெனவே ஒரு வார்த்தையை எவ்வாறு 73 ன்று விதமாக மாற்றி அமைக்கலாம் என்பதை Grammar Patterns 1, Grammar Patterns 2, Grammar Patterns 3 போன்ற மூன்று பாடங்களிலும் கற்றோம். இந்த கிரமர் பெட்டன்களை வாய்பாடு பாடமாக்குவதுப் போன்று மனப்பாடம் ஆக்கிக்கொள்ளுங்கள்.
இவற்றைத் தவிர இன்னும் சில கிரமர் பெட்டன்களும் இருக்கின்றன. அவற்றை எதிர்வரும் பாடங்களில் வழங்கப்படும்.
I do a job. நான் செய்கின்றேன் ஒரு வேலை. எனும் வாக்கியத்தின் இலக்கண விதிமுறைகளை விரிவாகக் கற்றோம்.
I am doing a job. நான்
செய்துக்கொண்டிருக்கின்றேன் ஒரு வேலை. எனும் "நிகழ்காலத் தொடர் வினை"
(Present Continuous Tense) வாக்கியத்தை இன்று விரிவாகக் கற்கப்
போகின்றோம்.
இதை மூன்று பகுதிகளாகப் பிரித்துக் கற்போம்.
Positive (Affirmative) Subject + Auxiliary verb + Main verb with ing 1. I + am + doing a job 2. He/ She/ It + is + doing a job. 3. You/ We/ They + are + doing a
job. இவ்வாக்கிய அமைப்புகளில் எழுவாய் (Subject) வாக்கியத்தின் முன்னால்
வந்துள்ளதை கவனிக்கவும். அத்துடன் இந்த Form ல் எப்பொழுதும் பிரதான
வினைச்சொல்லுடன் "ing" யும் இணைந்து பயன்படும்.
Negative Subject + Auxiliary verb + not + Main verb with ing 1. I + am + not + doing a job 2. He/ She/ It + is + not + doing a job. 3. You/ We/ They + are + not + doing a job.
Question (Interrogative) Auxiliary verb + Subject + Main verb with ing 1. Am + I + doing a job? 2. Is + he/ she/ It + doing a job? 3. Are + you/ we/ they + doing
a job? இவற்றில் "Subject" அதாவது விடயம் பின்னாலும் "Auxiliary verb
"துணை வினை வாக்கியத்தின் ஆரம்பித்திலுமாக மாறி வந்துள்ளதை அவதானியுங்கள்.
பகுதி 1
உதாரணம்:
Are you doing a job? நீ செய்துக்கொண்டிருக்கின்றயா ஒரு வேலை? Yes, I am doing a job. (I’m) ஆம், நான் செய்துக்கொண்டிருக்கின்றேன் ஒரு வேலை. No, I am not doing a job. (I’m not) இல்லை, நான் செய்துக்கொண்டிருக்கின்றேனில்லை ஒரு வேலை.
Are you speaking in English? நீ பேசிக்கொண்டிருக்கின்றாயா ஆங்கிலத்தில்? Yes, I am speaking in English. (I’m) ஆம், நான் பேசிக்கொண்டிருக்கின்றேன் ஆங்கிலத்தில். No, I am not speaking in English. (I’m not) இல்லை, நான் பேசிக்கொண்டிருக்கின்றேனில்லை ஆங்கிலத்தில்.
Are you going to school? நீ போய்க்கொண்டிருக்கின்றாயா பாடசாலைக்கு? Yes, I am going to school. (I’m) ஆம், நான் போய்க்கொண்டிருக்கின்றேன் பாடசாலைக்கு. No, I am not going to school. (I’m not) இல்லை, நான் போய்க்கொண்டிருக்கின்றேனில்லை பாடசாலைக்கு.
இலகுவானப் பயிற்சிக்கு சிறிய அறிவுரை
நீங்கள்
காலையில் எழுந்ததிலிருந்து இரவு படுக்கைக்குப் போகும் வரையிலான உங்கள்
அனைத்து செயற்பாடுகளையும் ஆங்கிலத்தில் பட்டியலிட்டுக்கொள்ளுங்கள். அவற்றை
இரண்டு பேர்களாகவோ அல்லது தனித்தோ ஒருவர் கேள்விக் கேட்க மற்றவர்
பதிலளித்துப் பயிற்சி செய்யலாம். உங்களுக்கு உதவியாளர் யாரும் இல்லையெனில்
நீங்களே, உங்களை கேள்விக் கேட்டும் பதிலளித்தும் பயிற்சி செய்யலாம்.
உதாரணம்: What are you doing now? - நீ என்ன செய்துக்கொண்டிருக்கின்றாய் இப்பொழுது? என்ற
கேள்வியை ஒவ்வொரு வினாடியும் நீங்களே உங்களை கேட்டுக்கொள்ளுங்கள். அதற்கு
பதிலாக இப்பொழுது இந்த வினாடி நீங்கள் என்ன செய்துக்
கொண்டிருக்கின்றீர்களோ அதை பதிலாகக் கூறிக்கொள்ளுங்கள். இவ்வாறு
காலையிலிருந்து இரவு நித்திரைக்கு போகும் வரை உங்கள் அன்றாட வாழ்க்கையில்
நடைப்பெரும் அத்தனை விடயங்களையும் பேசிப் பயிற்சி செய்துப்பாருங்கள்.
தொடர்ந்து ஒரு வாரம் பயிற்சி செய்யுங்கள்.
அடுத்த வாரம் உங்களுக்கே ஆச்சரியமாக இருக்கும். அத்தனை வார்த்தைகளையும் நீங்கள் அறியாமலே உங்கள் மனதில் மனப்பாடம் ஆகியிருக்கும். சரி பயிற்சியைத் தொடருங்கள்.
1. I am getting up now. நான் எழுந்துக்கொண்டிருக்கின்றேன் இப்பொழுது.
2. I am going to toilet. நான் போய்க்கொண்டிருக்கின்றேன் குளியலறைக்கு.
3. I am brushing my teeth. நான் துலக்கிக்கொண்டிருகின்றேன் என் பற்களை.
4. I am having a bath. நான் குளித்துக்கொண்டிருக்கின்றேன்.
5. I am having some tea. நான் அருந்திக்கொண்டிருக்கின்றேன் கொஞ்சம் தேனீர்.
6. I am dressing. நான் உடுத்திக்கொண்டிருக்கின்றேன்.
7. I am practicing my religion. நான் பின்பற்றிக்கொண்டிருக்கின்றேன் எனது மதத்தை.
8. I am having my breakfast. நான் சாப்பிட்டுக்கொண்டிருக்கின்றேன் எனது காலை உணவை.
9. I am worshiping to my parents. நான் வணங்கிக்கொண்டிருக்கின்றேன் எனது பெற்றோரை.
10. I am leaving from home. நான் வெளியேறிக்கொண்டிருக்கின்றேன் வீட்டிலிருந்து.
11. I am traveling by bus. நான் பிரயாணித்துக்கொண்டிருக்கின்றேன் பேரூந்தில்.
12. I am getting down from the bus. நான் இறங்குகிக்கொண்டிருக்கின்றேன் பேரூந்திலிருந்து.
13. I am entering into the Office நான் நுழைந்துக்கொண்டிருக்கின்றேன் அலுவலகத்திற்குள்.
14. I am working. நான் வேலை செய்துக்கொண்டிருக்கின்றேன்.
15. I am doing my duty. நான் செய்துக்கொண்டிருக்கின்றேன் எனது கடமையை.
16. I am operating a computer. நான் இயக்கிக்கொண்டிருக்கின்றேன் ஒரு கணனியை.
17. I am helping to people. நான் உதவிக்கொண்டிருக்கின்றேன் மக்களுக்கு.
18. I am getting down meals from canteen. நான் எடுபித்துக்கொண்டிருக்கின்றேன் உணவு சிற்றுண்டிசாலையிலிருந்து.
19. I am sharing my lunch. நான் பகிர்ந்துக்கொண்டிருக்கின்றேன் எனது (பகல்) உணவை.
20. I am working as a team. நான் வேலை செய்துக்கொண்டிருக்கின்றேன் ஒரு குழுவாக.
21. I am talking with my friends. நான் பேசிக்கொண்டிருக்கின்றேன் எனது நண்பர்களுடன்.
22. I am leaving from office to home நான் வெளியேறிக்கொண்டிருக்கின்றேன் அலுவலகத்திலிருந்து வீட்டிற்கு.
23. I am waiting for you. நான் காத்துக்கொண்டிருக்கின்றேன் உனக்காக.
24. I am coming back to home. நான் திரும்பிவந்துக்கொண்டிருக்கின்றேன் வீட்டிற்கு.
25. I am having a body wash. நான் ஒரு (உடல்) குளியல் எடுத்துக்கொண்டிருக்கின்றேன்.
26. I am changing my clothes. நான் மாற்றிக்கொண்டிருக்கின்றேன் எனது உடைகளை.
27. I am having a cup of coffee. நான் அருந்திக்கொண்டிருக்கின்றேன் ஒரு கோப்பை கோப்பி.
28. I am going to play ground. நான் போய்க்கொண்டிருக்கின்றேன் விளையாட்டு மைதானத்திற்கு.
29. I am walking. நான் நடந்துக்கொண்டிருக்கின்றேன்.
30. I am smoking cigarette. நான் புகைத்துக்கொண்டிருக்கின்றேன் வெண்சுருட்டு.
31. I am meeting my friends நான் சந்தித்துக்கொண்டிருக்கின்றேன் எனது நண்பர்களை.
32. I am cracking joke with others. நான் பகிடி விட்டுக்கொண்டிருக்கின்றேன் மற்றவர்களுடன்.
33. I am playing foot ball. நான் விளையாடிக்கொண்டிருக்கின்றேன் உதைப்பந்தாட்டம்.
34. I am answering phone. நான் பதிலளித்துக்கொண்டிருக்கின்றேன் தொலைப்பேசியில்.
35. I am having a rest. நான் ஓய்வெடுத்துக்கொண்டிருக்கின்றேன்.
36. I am studying for the exam. நான் படித்துக்கொண்டிருக்கின்றேன் பரீட்சைக்காக.
37. I am reading a book. நான் வாசித்துக்கொண்டிருக்கின்றேன் ஒரு புத்தகம்.
38. I am watching movie. நான் பார்த்துக்கொண்டிருக்கின்றேன் திரைப்படம்.
39. I am thinking about that. நான் நினைத்துக்கொண்டிருக்கின்றேன் அதைப் பற்றி.
40. I am preparing tea. நான் தாயாரித்துக்கொண்டிருக்கின்றேன் தேனீர்.
41. I am rectifying mistakes. நான் திருத்திக்கொண்டிருக்கின்றேன் தவறுகளை.
42. I am writing an article in Tamil நான் எழுதிக்கொண்டிருக்கின்றேன் ஒரு கட்டுரை தமிழில்.
43. I am translating English to Tamil. நான் மொழி பெயர்த்துக்கொண்டிருக்கின்றேன் ஆங்கிலத்தை தமிழுக்கு.
44. I am improving my English knowledge. நான் வளர்த்துக்கொண்டிருக்கின்றேன் எனது ஆங்கில அறிவை.
45. I am having my dinner. நான் சாப்பிட்டுக்கொண்டிருக்கின்றேன் (இரவு) சாப்பாடு.
46. I am singing a song. நான் பாடிக்கொண்டிருக்கின்றேன் ஒரு பாடல்.
47. I am doing my home work. நான் செய்துக்கொண்டிருக்கின்றேன் எனது வீட்டுப்பாடம்.
48. I am practicing English at night. நான் பயிற்சித்துக்கொண்டிருக்கின்றேன் ஆங்கிலம் இரவில்.
49. I am praying. நான் பிராத்தித்துக்கொண்டிருக்கின்றேன்.
50. I am sleeping. நான் நித்திரைசெய்துக்கொண்டிருக்கின்றேன்.
மேலே நாம் கற்ற 50 வாக்கியங்களையும் கேள்வி பதிலாக மாற்றி பயிற்சி செய்யுங்கள் பார்க்கலாம்.
பகுதி 2
Positive Subject + Auxiliary verb + Main verb with ing 2. He/ She/ It + is + doing a job.
Negative Subject + Auxiliary verb + not + Main verb with ing 2. He + She/ It/ is + not + doing a job?
Question Auxiliary verb + Subject + Main verb with ing 2. Is + he/ she/ It + doing a job?
மேலே
பகுதி 1 ல் உள்ள 50 வாக்கியங்களை கேள்வி பதிலுமாக மாற்றி பயிற்சி செய்யும்
படி கூறியிருந்தேன். இப்பொழுது அதே 50 வாக்கியங்களையும் He / She / It
போன்ற சொற்களைப் பயன்படுத்தி கேள்விப் பதில்களாக அமைத்து பயிற்சி
செய்யுங்கள்.
உதாரணம்:
Is he doing a job? அவன் செய்துக்கொண்டிருக்கின்றானா ஒரு வேலை? Yes, he is doing a job. (he’s) ஆம், அவன் செய்துக்கொண்டிருக்கின்றான் ஒரு வேலை. No, he is not doing a job. (isn’t) இல்லை, அவன் செய்துக்கொண்டிருக்கின்றானில்லை ஒரு வேலை.
Is she going to school? அவள் போய்க்கொண்டிருக்கின்றாளா பாடசாலைக்கு? Yes, she is going to school. (she’s) ஆம், அவள் போய்க்கொண்டிருக்கின்றாள் பாடசாலைக்கு. No, she is not going to school. (isn’t) இல்லை, அவள் போய்க்கொண்டிருக்கின்றாளில்லை பாடசாலைக்கு.
Is it working? அது வேலை செய்துக்கொண்டிருக்கின்றதா? Yes, it is working. (it’s) ஆம், அது வேலை செய்துக்கொண்டிருக்கின்றது. No, it is not working. (isn’t) இல்லை, அது வேலை செய்துக்கொண்டிருக்கின்றதில்லை.
கவனத்திற்கு
It’s It + is என்பதின் sort form காவே It's பயன்படுகின்றது. It’s It + was என்பதின் sort form ஆகவும் It's பயன்படும். It’s been It
+ has been என்பதின் sort form ஆக It's been என்று பயன்படுத்தப்
படுகின்றது. (இவ்வாறான சந்தர்ப்பங்களில் " It's" உடன் "been" இணைந்து
வந்திருப்பதை அவதானிக்கலாம்.) Its Its 'இதனுடையது' என்று பொருள்படும்.
பகுதி 3
மேலே
கொடுக்கப்பட்டிருக்கும் 50 வாக்கியங்களை you, we, they போன்ற சொற்களைப்
பயன்படுத்தியும் கேள்வி பதில் அமைத்து பயிற்சிச் செய்யலாம்.
Positive Subject + Auxiliary verb + Main verb with ing 3. You/ We/ They + are + doing a job.
Negative Subject + Auxiliary verb + Main verb with ing 3. You/ We/ They + are + not + doing a job
Question. Auxiliary verb + Subject + Main verb with ing 3. Are + you/ we/ they + doing a job?
உதாரணம்:
Are they doing a job? அவர்கள் செய்துக்கொண்டிருக்கின்றார்களா ஒரு வேலை? Yes, they are doing a job. (they’re) ஆம், அவர்கள் செய்துக்கொண்டிருக்கின்றார்கள் ஒரு வேலை. No, they are not doing a job. (aren’t) இல்லை, அவர்கள் செய்துக்கொண்டிருக்கின்றார்களில்லை ஒரு வேலை.
Are they speaking in English? அவர்கள் பேசிக்கொண்டிருக்கின்றார்களா ஆங்கிலத்தில்? Yes, they are speaking in English. (they’re) ஆம், அவர்கள் பேசிக்கொண்டிருக்கின்றார்கள் ஆங்கிலத்தில். No, they are not speaking in English. (aren’t) இல்லை, அவர்கள் பேசிக்கொண்டிருக்கின்றார்களில்லை ஆங்கிலத்தில்.
Are we going to school? நாங்கள் போய்க்கொண்டிருக்கின்றோமா பாடசாலைக்கு? Yes, we are going to school. (We’re) ஆம், நாங்கள் போய்க்கொண்டிருக்கின்றோம் பாடசாலைக்கு. No, we are not going to school. (aren’t) இல்லை, நாங்கள் போய்க்கொண்டிருக்கவில்லை பாடசாலைக்கு. ` (Present
Continuous) "நிகழ்காலத் தொடர்வினை" செயல் அல்லது சம்பவம்
நிகழ்ந்துக்கொண்டிருக்கிறது என்பதை வெளிப்படுத்தப் பயன்படுகின்றது. கீழே
உள்ள வரைப்படத்தைப் பாருங்கள். இருப்பினும் இந்த "நிகழ்காலத் தொடர்வினை" யை நான்கு விதமாக வகைப் படுத்தலாம். 1. At the time of speeches அதாவது மேலே குறிப்பிட்டுள்ளதைப் போன்று செயல் அல்லது சம்பவம் நிகழ்ந்துக் கொண்டிருக்கும் போது: உதாரணம்: I
am reading a book at the moment. நான் வாசித்துக்கொண்டிருக்கின்றேன் ஒரு
புத்தகம் இப்பொழுது (இந்த வினாடி). அதாவது செயல் நிகழ்ந்த வண்ணமே
இருக்கின்றது. 2. Temporary Situations தற்காலிகச் சூழ்நிலையின் போது:
உதாரணம்: At
school, we are studing the classical languages this week. பாடசாலையில்
நாங்கள் படித்துக்கொண்டிருக்கின்றோம் செம்மொழிகளை பற்றி இந்த வாரம்.
இதில்
"படித்துக்கொண்டிருக்கின்றோம்" என்பது "நிகழ்காலத் தொடர்வினை"
என்றப்போதும் "இந்த வாரம்" என்பது ஒரு தற்காலிகக் கால இடைவெளியை குறித்து
நிற்கின்றது என்பதை அவதானிக்கவும்.
3. Planned activities (Future Reference) இது ஒரு திட்டமிட்ட நடவடிக்கையை குறித்துக் காட்டுகின்றது.
உதாரணம்: I
am coming tomorrow. இதனைச் சற்று கவனியுங்கள். இச்சொல்லில் "I am coming"
நான் வந்துக்கொண்டிருக்கின்றேன், என "நிகழ்காலத் தொடர்வினை" போல்
கூறினாலும், இதனுடன் tomorrow "நாளை" என்று ஒருச் சொல்லும் இணைந்து
வருவதால் இதை ஒரு எதிர்காலச் சொல்லாகப் பயன்படுத்தப் படுகிறது. அதாவது
"நான் வருகின்றேன் நாளை" எனும் பொருளில் ஏற்கெனவே திட்டமிடப்பட்ட நாளை
நடக்கப் போகும் நிகழ்வைக் குறிப்பதால் இதை "Future Reference" என்று
கூறப்படுகின்றது. For Future Reference: tomorrow next week 4. To describe repeated action ஒரு செயலை விவரித்தலின் போது:
உதாரணம்: My
brother always interrupting me when I study. எனது சகோதரன் எப்போதும்
இடைஞ்சல் செய்துக்கொண்டிருக்கின்றான் நான் படிக்கும் பொழுது.
குறிச்சொற்கள் Signal words (Comman expressions)
now at the moment today this week
சரி! பயிற்சிகளை தொடருங்கள்.
இப்பாடம்
தொடர்பாக ஏதேனும் சந்தேகங்கள் விளக்கங்கள் தேவைப்படின் பின்னூட்டம் இட்டோ
அல்லது முகப்பில் காணப்படும் எனது மின்னஞ்சல் ஊடாகவோ தொடர்புக்கொள்ளலாம்.
அதேவேளை உங்கள் ஆக்கப்பூர்வமான கருத்துக்களை தெரிவிக்கவும் மறவாதீர்கள்.
நன்றி. |