linoj.do.am

சேவைகள்
CATEGORIES
காதல் உறவு
வார ராசிபலன்
மாத ராசிபலன்
குருப்பெயர்ச்சி
கணினி
கவிதைகள்
பெண்கள் உலகம்
சிறுவர் பூங்கா
உடல்நலம்
தமிழ் சினிமா
ஆன்மீகம்
நகைச்சுவை(ங்க...)!
சர்தார்ஜி
குட்டீஸ்
மருத்துவம் & நீதிமன்றம்
பொது
அரசியல்
குடும்பம்
Email Subscribe

பதிவுகளை நீங்கள் உங்கள் ஈமெயில் மூலமாகவே பெறலாம். உங்கள் ஈமெயில் முகவரியை இங்கு பதிவு செய்து கொள்ளுங்கள்

Enter your email address:

Serch
Statistics
Online Users

Site Friend
linotech.info
ommuruga.fr
இணைப்பு கொடுக்க
linoj.do.am
Code :
இணையத் தமிழ் உலகம் - க்கு இணைப்பு கொடுக்க மேலே உள்ள 'code' -ஐ Copy செய்து உங்கள் தளம் / Blog-ல் Paste செய்யவும்.

linotechinfo.com
LinoTechinfo - க்கு இணைப்பு கொடுக்க மேலே உள்ள 'code' -ஐ Copy செய்து உங்கள் தளம் / Blog-ல் Paste செய்யவும்.

linotech.info
LinoTech.info - க்கு இணைப்பு கொடுக்க மேலே உள்ள 'code' -ஐ Copy செய்து உங்கள் தளம் / Blog-ல் Paste செய்யவும்.
Vote Plz..
Tamil Top Blogs

My Topsites List
கல்வி
கல்விச்சேவை
யாழ். சென்ஜோன்ஸ்
திருகோணமலை இந்து
சாவகச்சேரி இந்து
ஹாட்லி கல்லூரி
கொக்குவில் இந்து
தமிழ் செஸ்
Jaffna Central - Canada
Vembadi Girl's High School
University of Jaffna
cutsa
University of Moratuwa University of Kelaniya
University of Colombo
The Open Uni of SL
Uni of Sri
University of Peradeniya
Jayewardenepura
Main » Articles » ஆன்மீகம் » மாத ராசிபலன் [ Add new entry ]

ஜூன் 2014 மாத பலன்

மேஷம்
கடந்த காலத்தை மறக்காதவர்களே! உங்களுடைய ராசிக்கு சாதகமான வீடுகளில் சுக்ரன் செல்வதால் உறவினர்கள், விருந்தினர்களின் வருகையால் வீடு களைக்கட்டும். நண்பர்கள் வீட்டு திருமணம், கிரகப்பிரவேசத்தை முன்னின்று நடத்துவீர்கள். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். வாகனத்தை மாற்றுவீர்கள். சிலர் புது வண்டி வாங்குவீர்கள். மனைவிவழியில் உதவிகள் உண்டு. மனைவி உங்களின் புது திட்டங்களை ஆதரிப்பார். ஆனால் 7-ல் சனியும், 21-ந் தேதி வரை ராகுவும் 7-ல் நிற்பதால் கணவன்-மனைவிக்குள் அவ்வப்போது கருத்து மோதல் வரும். ஈகோப் பிரச்னைகளாலும் சின்ன சின்ன பிரிவுகள் ஏற்படக்கூடும். எனவே ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்துப் போவது நல்லது. 21-ந் தேதி வரை ராசிக்குள்ளேயே கேதுவும் நிற்பதால் பெரிய நோய்கள் இருப்பது போல் சில நேரங்களில் தோன்றும். ஆனால் 22-ந் தேதி முதல் 12-ல் மறைவதால் பெரிய நோயிலிருந்து விடுபடுவீர்கள். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். அழகு, ஆரோக்யம் கூடும். எதிர்பார்த்து ஏமாந்து போன தொகை கைக்கு வரும். புதன் சாதகமாக இருப்பதால் பழைய நண்பர்கள் ஆதரவாக இருப்பார்கள். அவர்களுடன் இருந்து வந்த மனக்கசப்புகள் விலகும். உங்களின் பிரபல யோகாதிபதியான குருபகவான் 3-ல் நிற்பதால் எந்த ஒரு காரியத்தை தொட்டாலும் இரண்டு, மூன்று முறை முயன்று முடிக்க வேண்டிய சூழ்நிலை உருவாகும். மனதில் ஒருவித அலுப்பு, சலிப்பு வந்த நீங்கும். 13-ந் தேதி முதல் குரு 4-ம் விட்டிற்கு செல்வதால் அதுமுதல் தடைகள் கொஞ்சம் விலகும். என்றாலும் தாயாரின் உடல் நலத்தில் கவனம் தேவை. உங்களுடைய ராசிக்கு 6-ல் ராசிநாதன் செவ்வாய் நிற்பதால் வேலைச்சுமை அதிகமாகும். ஆனால் வழக்குகள் சாதகமாகும். சகோதர வகையில் ஒரு பக்கம் அலைச்சல் இருந்தாலும் மற்றொரு பக்கம் பாசப்பிணைப்பு அதிகரிக்கும். சிலர் வீடு மாறுவீர்கள். கன்னிப் பெண்களே! உயர்கல்வியில் வெற்றி உண்டு. காதல் விவகாரத்தில் இருந்து வந்த குழப்பங்கள், தடுமாற்றங்கள் நீங்கும். வியாபாரத்தில் கணிசமாக லாபம் உயரும். புது ஒப்பந்தங்களும் கூடி வரும். கண்டகச் சனி நடைபெறுவதால் பங்குதாரர்களுடன் மோதல்கள் வெடிக்கும். உத்தியோகத்தில் வேலைச்சுமை அதிகமானாலும் சமாளிக்கும் சக்தி உண்டாகும். கலைத்துறையினரே! புதிய வாய்ப்புகள் வரும். சம்பள பாக்கி கைக்கு வரும். சாமர்த்தியமாக காய்நகர்த்த வேண்டிய மாதமிது. பரிகாரம் ஸ்ரீதட்சணா மூர்த்தியை வணங்குங்கள். குருபகவானின் காயத

ரிஷபம்
செய்நன்றி மறவாதவர்களே! 14-ந் தேதி வரை சூரியன், உங்களின் தன-பூர்வ புண்யாதிபதியான புதனுடன் சேர்ந்து அமர்ந்திருப்பதால் எதிர்பாராத பணவரவு உண்டு. தடைப்பட்ட காரியங்கள் நல்ல விதத்தில் முடியும். பிள்ளைகளின் உயர்கல்வி எதிர்பார்த்த கல்விப் பிரிவில் நல்ல நிறுவனத்தில் சேர்ப்பீர்கள். அவர்கள் எதிர்பார்த்தபடி அரசு பொதுத் தேர்வில் மதிப்பெண் வரும். அவர்களால் அந்தஸ்து ஒருபடி உயரும். நெடுநாட்களாக இழுபறியாக இருந்து வந்த பூர்வீக சொத்துப் பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும். ஆனால் சூரியனால் முன்கோபம், உடல் உஷ்ணம், சிறுசிறு வேனல் கட்டிகள் வந்துச் செல்லும். நீர் மோர் அருந்துங்கள். 12-ந் தேதி வரை குருபகவான் 2-ம் வீட்டில் நிற்பதால் முதிர்ச்சியான, அறிவுப் பூர்வமானப் பேச்சால் அனைவரின் இதயத்திலும் இடம் பிடிப்பீர்கள். எதிர்பார்த்த தொகையும் கைக்கு வரும். வெளிநாட்டிலிருப்பவர்களால் ஆதாயம் உண்டு. சிலர் புதுத் தொழில் தொடங்குவீர்கள். 13-ந் தேதி முதல் குரு 3-ம் வீட்டில் நுழைவதால் புதிய முயற்சிகள் தாமதமாகி முடியும். வேலைச்சுமையால் சோர்வடைவீர்கள். செவ்வாய் 5-ல் தொடர்வதால் கர்ப்பிணிப் பெண்கள் நெடுந்தூரப் பயணங்களை தவிர்ப்பது நல்லது. சகோதர வகையில் வார்த்தைப் போர் இருக்கும். மனைவிவழி உறவினர்களுடன் கருத்து மோதல்கள் வந்து நீங்கும். சனி வக்ரமடைந்திருப்பதால் தந்தையாருடன் ஈகோ பிரச்னைகள் வரும். தந்தைவழி உறவினர்களால் அலைச்சல் இருக்கும். கன்னிப் பெண்களே! வேலைக்கு விண்ணப்பித்து காத்திருந்தவர்களுக்கு நல்ல நிறுவனத்திலிருந்து அழைப்பு வரும். நேர்முகத் தேர்வில் வெற்றி பெறுவீர்கள். உயர்கல்வியில் முன்னேறுவீர்கள். வியாபாரத்தை விரிவுப்படுத்துவீர்கள். சந்தை நிலவரத்திற்கேற்ப புதுத் தொழில் தொடங்கும் அமைப்பு உண்டாகும். புது ஏஜென்சியும் வந்தமையும். உத்தியோகத்தில் மேலதிகாரி உங்களுக்கு சாதகமாக இருக்கிறாரா, பாதகமாக இருக்கிறாரா என்று உணர்ந்துக் கொள்ள முடியாமல் போகும். யார் எப்படி இருந்தாலும் நம்முடைய கடமையை சரிவர செய்துவிடுவோம் என்ற மனப்பான்மையில் நீங்கள் கடினமாக உழைப்பீர்கள். கலைத்துறையினரே! தடைப்பட்டிருந்த உங்களுடைய படைப்புகள் வெளியாகும். ரசிகர்கள் கூட்டம் அதிகரிக்கும். இடைவிடாத உழைப்பாலும், சமயோஜித புத்தியாலும் சவால்களை சமாளிக்க வேண்டிய மாதமிது. பரிகாரம்: மயிலாப்பூர் ஸ்ரீகபாலீஸ்வரரை வணங்குங்கள். திருவாசகம் படியுங்கள்.

 

மிதுனம்
வருங்காலத்தைப் பற்றி அதிகம் யோசிப்பவர்களே! ராசிநாதன் புதன் உங்கள் யோகாதிபதி சுக்ரனின் வீட்டில் அமர்ந்திருப்பதால் உடல் நிலை சீராகும். தைரியம் பிறக்கும். குழப்பங்களிலிருந்து விடுபடுவீர்கள். அரசு காரியங்கள் நல்ல விதத்தில் முடியும். எதிர்பார்த்து ஏமாந்த தொகை கைக்கு வரும். தன்னிச்சையாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். புதன் 12-ல் மறைந்திருப்பதால் புண்ணிய ஸ்தலங்களுக்குச் சென்று வருவீர்கள். கோவில் கட்டுவது, பராமரிப்பது, கும்பாபிஷேகம் செய்வது போன்றவற்றிற்காக நிதி உதவிகள் செய்வீர்கள். சுக்ரன் சாதகமான வீடுகளில் செல்வதால் சவாலான காரியங்களைக் கூட எளிதாக முடிக்கும் வல்லமை உண்டாகும். யதார்த்தமான முடிவுகள் எடுப்பீர்கள். வீடு வாங்குவது, விற்பது லாபகரமாக முடிவடையும். வாகனத்தை சரி செய்வீர்கள். நீண்ட நாட்களாக மகளுக்கு வரன் தேடிக் கொண்டிருந்தீர்களே! உங்கள் ரசனைக் கேற்ற வரன் அமையும். மகனுக்கு வெளிநாடு தொடர்புடைய நிறுவனத்தில் வேலைக் கிடைக்கும். வங்கிக் கடன் உதவியும் வந்து சேரும். உங்களின் சுகஸ்தானமான 4-ம் வீட்டிலேயே சத்ருஸ்தானதிபதி செவ்வாய் அமர்ந்திருப்பதால் சோர்வு, களைப்பு அதிகரிக்கும். தாயாரின் உடல் நிலை பாதிக்கும். அவருடன் கருத்து மோதல்கள் வரும். மற்றவர்களுக்கு ஜாமீன், கேரண்டர் கையழுத்திட வேண்டாம். பணம் வாங்கித் தருவதில் குறுக்கே நிற்க வேண்டாம். சிறுசிறு விபத்துகள் ஏற்படக்கூடும். ஜன்ம குரு இந்த மாதம் 12-ந் தேதி வரை தொடர்வதால் உடல் உஷ்ணம் அதிகமாகும். வாயுக் கோளாறால் நெஞ்சு வலிக்கும் ஆனால் பெரிய பாதிப்புகள் இருக்காது. 13-ந் தேதி முதல் குரு உங்கள் ராசியை விட்டு விலகுவதால் நோயிலிருந்து விடுபடுவீர்கள். மருத்துவச் செலவுகள் குறையும். பிரிந்திருந்த கணவன்-மனைவி ஒன்று சேருவீர்கள். தடைப்பட்டிருந்த கல்யாணம் கூடி வரும். கன்னிப் பெண்களே! பெற்றோருடன் இருந்த மனக்கசப்பு நீங்கும். காதல் விவகாரத்தில் தெளிவான முடிவுக்கு வருவீர்கள். உயர்கல்வியில் வெற்றி உண்டு. வியாபாரத்தை விரிவுப்படுத்துவதற்கு தேவையான உதவிகள் கிடைக்கும். உத்தியோகத்தில் உங்களுக்கு எதிராக பழி சுமத்தியவர்கள், எதிராக வேலைப் பார்த்தவர்கள் பலவீனமடைவார்கள். கலைத்துறையினரே! கன்னடம், மலையாளம் பேசுபவர்களால் நன்மை உண்டு. இழந்த செல்வாக்கை மீண்டும் பெறுவீர்கள். புதிய பாதையில் பயணிக்கும் மாதமிது. பரிகாரம்: பழனி முருகப் பெருமானை வணங்குங்கள்

 

கடகம்
சமயோஜித புத்தி அதிகமுள்ளவர்களே! சுக்ரன் உங்களுடைய ராசிக்கு சாதகமான வீடுகளில் செல்வதால் பிரச்னைகளை சமாளிக்கும் சக்தி கிடைக்கும். கேட்ட இடத்தில் உதவிகள் வந்து சேரும். மனைவிவழி உறவினர்கள் ஆதரவாக இருப்பார்கள். தெலுங்கு, ஹிந்தி பேசுபவர்கள் மூலமாக ஆதாயமடைவீர்கள். ஒரு சொத்தை விற்று மற்றொரு சொத்து வாங்கும் அமைப்பு உண்டாகும். பழைய கடனில் ஒரு பகுதியை பைசல் செய்ய வழி பிறக்கும். செவ்வாய் 3-ல் அமர்ந்திருப்பதால் புதிய முயற்சிகள் வெற்றியடையும். வி. ஐ. பிகள் அறிமுகமாவார்கள். மனோ தைரியம் கூடும். மூத்த சகோதர வகையில் ஒத்துழைப்பு அதிகரிக்கும். அரசியல்வாதிகளின் நட்பு கிடைக்கும். புதுத் தொழில் தொடங்குவதற்கு சிலர் உதவுவார்கள். 12-ந் தேதி வரை உங்களுடைய ராசிக்கு 12-ல் யோகாதிபதி குரு நிற்பதால் பயணங்கள் அதிகமாகிக் கொண்டேப் போகும். தவிர்க்க முடியாத செலவுகளால் திணறுவீர்கள். 13-ந் தேதி முதல் உங்கள் ராசிக்குள் குரு நுழைந்து ஜென்ம குருவாக அமர்வதால் ஆரோக்யத்தில் கூடுதல் கவனம் செலுத்தப்பாருங்கள். வெளி உணவுகள், கார, அசைவ உணவுகளை தவிர்ப்பத நல்லது. கணவன்-மனைவிக்குள் வீண் சந்தேகங்கள், குழப்பங்களை சிலர் ஏற்படுத்த முயற்சி செய்வார்கள். அதையெல்லாம் நம்பாமல் இருப்பது நல்லது. அர்த்தாஷ்டமச் சனி நடைபெறுவதால் இனந்தெரியாத மனக்கவலைகள் வந்து நீங்கும். தாயாரின் ஆரோக்யத்தில் அக்கறை காட்டுங்கள். அவர் ஏதேனும் கோபமாகப் பேசினால் அதை பெரிதாக எடுத்துக் கொள்ளாதீர்கள். வாகனம் அவ்வப்போது செலவு வைக்கும். வீட்டிலும் கழிவு நீர் குழாய், குடி நீர் குழாய் அடைப்பு, மின் கசிவு வந்து நீங்கும். மின்னணு, மின்சார சாதனங்களை கவனமாக கையாளுவது நல்லது. கன்னிப் பெண்களே! அடி வயிற்றிலிருந்த வலி குறையும். பழைய நண்பர்கள் உங்களுக்கு பக்கபலமாக இருப்பார்கள். காதல் விவகாரத்தில் தள்ளியிருங்கள். எல்லோரையும் நம்பி ஏமாறாதீர்கள். தாயாரை பகைத்துக் கொள்ள வேண்டாம். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். புதிய வாடிக்கையாளர்கள் வருவார்கள். உத்தியோகத்தில் வேலைச்சுமை ஒருபக்கம் இருந்தாலும் மற்றொரு பக்கம் செல்வாக்கு அதிகரிக்கும். கலைத்துறையினரே! தள்ளிப் போன பட வாய்ப்புகள் வரும். பழைய கலைஞர்கள் உங்களை பாராட்டுவார்கள். எதிர்பார்த்தவைகளில் சில நிறைவேறும் மாதமிது. பரிகாரம்: ஸ்ரீமகாலஷ்மியை வணங்குங்கள். வெள்ளிக் கிழமைகளில் வஸ்திர தானம் செய்யுங்கள்.

 

சிம்மம்
யாருக்காகவும் கொள்கையை மாற்றிக் கொள்ளாதவர்களே! 12-ந் தேதி வரை உங்கள் ராசிக்கு லாப ஸ்தானத்திலேயே குரு நிற்பதால் எதிர்பார்த்து ஏமாந்த தொகை கைக்கு வரும். வெளிவட்டாரத்தில் செல்வாக்குக் கூடும். மூத்த சகோதரங்கள் உங்களுக்கு பக்கபலமாக இருப்பார்கள். சமூகத்தில் பெரிய பதவியில் இருப்பவர்கள் ஆதரவாக இருப்பார்கள். 13-ந் தேதி முதல் குரு 12-ம் வீட்டில் மறைவதால் பயணங்கள் அதிகமாகும். தூக்கம் குறையும். செவ்வாய் 2-ம் வீட்டில் நிற்பதால் திடீர் செலவுகள் அதிகமாகும். நீங்கள் யதார்த்தமாகப் பேசினாலும் சிலர் தவறாகப் புரிந்துக் கொண்டு பிரச்னைகளை ஏற்படுத்துவார்கள். சகோதர வகையில் மனவருத்தங்கள் வரும். மற்றவர்களை நம்பி பெரிய முடிவுகள் எடுக்க வேண்டாம். உங்கள் ராசிநாதன் சூரியன் இந்த மாதம் முழுக்க வலுவாக நிற்பதால் குடும்பத்தில் உங்கள் கை ஓங்கும். சவாலான காரியங்களைக் கூட எளிதாக முடிப்பீர்கள். உங்களுடைய ஆளுமைத் திறன் அதிகரிக்கும். ராஜதந்திரங்களை கற்றுக் கொள்வீர்கள். சுற்றியிருப்பவர்களின் சுயரூபத்தையும் அறிந்துக் கொள்வீர்கள். வீடு உங்கள் ரசனைக் கேற்ப அமையும். புது வேலைக் கிடைக்கும். கல்யாண முயற்சிகளும் தாமதமின்றி முடியும். அரசு காரியங்களும் சாதகமாக முடியும். புதன் சாதகமாக இருப்பதால் பழைய நண்பர்கள் தேடி வருவார்கள். உறவினர்களால் இருந்து வந்த அன்புத் தொந்தரவும் குறையும். சுக்ரன் உங்களுடைய ராசிக்கு சாதகமான வீடுகளில் செல்வதால் தன்னிச்சையாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். ஹிந்தி, மலையாளம் பேசுபவர்கள் உதவிகரமாக இருப்பார்கள். கன்னிப் பெண்களே! உங்கள் ரசனைக் கேற்ப நல்ல வாழ்க்கை துணை அமையும். திருமணம் கூடி வரும். பெற்றோரின் உங்களின் புது முயற்சிகளை ஆதரிப்பார்கள். வேலைக் கிடைக்கும். வீடு வாங்கும் அமைப்பு உண்டாகும். வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூலாகும். வாடகை இடத்திலிருந்து சொந்த இடத்திற்கு சிலர் கடையை மாற்றுவீர்கள். வேலையாட்கள் உங்களுடைய அருமையை தெரிந்துக் கொள்வார்கள். உத்தியோகத்தில் நீண்ட நாட்களாக எதிர்பார்த்த பதவி உயர்வு, சம்பள உயர்வுயெல்லாம் இப்போது கிடைக்க வாய்ப்பிருக்கிறது. மூத்த அதிகாரி உங்களுக்கு முக்கியத்துவம் தருவார். கலைத்துறையினரே! மூத்த கலைஞர்கள் ஒத்தாசையாக இருப்பார்கள். உங்களின் படைப்புகள் வெற்றிகரமாக பேசப்படும். வித்தியாசமான அணுகுமுறையால் வெற்றி பெறும் மாதமிது.

 

கன்னி
கலகலப்பாக பேசி சாதிப்பவர்களே! உங்கள் ராசியிலேயே செவ்வாய் அமர்ந்திருப்பதால் வேலைச்சுமை கூடிக் கொண்டேப் போகும். ஓய்வெடுக்க முடியாத நிலை உருவாகும். அவ்வப்போது தூக்கம் குறையும். அடுத்தடுத்தப் பயணங்களால் சோர்வு, களைப்படைவீர்கள். உறவினர், நண்பர்களுக்கு ஓடி ஓடி உழைத்தும், நல்லது செய்தும் உங்களை யாரும் சரியாக மதிக்கவில்லையென்று நினைப்பீர்கள். இரத்தத்தில் ஹீமோகுளோபின் குறையும். ஏழரைச் சனியில் பாதச் சனி நடைபெறுவதால் எந்த வேலையை தொடங்கினாலும் தடைப்பட்டு தடைப்பட்டு தான் முடியும். அதிர்ஷ்டமே இல்லையென்று சில நேரங்களில் அலுத்துக் கொள்வீர்கள். மறதி உண்டாகும். குடும்பத்துடன் வெளியூர் பயணங்கள் செல்வதாக இருந்தால் தக்க பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து விட்டு செல்வது நல்லது. ஏனெனில் களவு போக வாய்ப்பிருக்கிறது. குதிக்காலில் வலி வந்துப் போகும். மூச்சுத் திணறல், வாயுக் கோளாறால் நெஞ்சு வலி வந்துப் போகும். சுக்ரன் சாதகமான வீடுகளில் செல்வதால் பணவரவு அதிகரிக்கும். கேட்டிருந்த இடத்தில் பணம் கிடைக்கும். கடன் பிரச்னையை நினைத்து அவ்வப்போது கலங்குவீர்கள். புது ஆடை, ஆபரணங்கள் சேரும். உறவினர்கள் வீட்டு திருமணம், கிரகப் பிரவேசத்தை முன்னின்று நடத்துவீர்கள். மகளுக்கு நல்ல வரன் அமையும். மகனின் எதிர்காலத்தை நினைத்து வருந்துவீர்கள். ராசிநாதன் புதன் இந்த மாதம் முழுக்க 9-ம் வீட்டில் நிற்பதால் பிரச்னைகளை சமாளிக்கும் சக்தி கிடைக்கும். போலியானவர்கள் விலகுவார்கள். உண்மையானவர்களின் நட்பு கிடைக்கும். 12-ந் தேதி வரை குரு 10-ல் நிற்பதால் சின்ன சின்ன பிரச்னைகள், அவமானங்கள் வந்துப் போகும். 13-ந் தேதி முதல் குருபகவான் லாப வீட்டிற்குள் நுழைவதால் புத்திசாலித் தனமான முடிவுகள் எடுப்பீர்கள். இழந்த செல்வாக்கை மீண்டும் பெறுவீர்கள். நட்பு வட்டம் விரிவடையும். அவமானங்களெல்லாம் நீங்கும். ஷேர் மூலமாகவும் பணம் வரும். கன்னிப் பெண்களே! முகப்பரு, அலர்ஜி நீங்கும். அழகு கூடும். உயர்கல்வியில் ஆர்வம் பிறக்கும். வியாபாரம் ஓரளவு சூடுபிடிக்கும். பற்று வரவும் உயரும். வேலையாட்களை நினைத்து வருத்தப்படுவீர்கள். 13-ந் தேதி முதல் குரு 11-ல் அமர்வதால் உத்தியோகத்தில் வேலைச்சுமை குறையும். அவமானம், வீண் பழியிலிருந்து விடுபடுவீர்கள். கலைத்துறையினரே! யதார்த்தமான படைப்புகளை தரப்பாருங்கள். பழைய கலைஞர்கள் உதவுவார்கள்.

துலாம்
நினைத்ததை மறைக்காமல் பேசுபவர்களே! சுக்ரன் சாதகமான வீடுகளில் செல்வதால் தடைப்பட்ட காரியங்கள் நல்ல விதத்தில் முடியும். கணவன்-மனைவிக்குள் இருந்த கருத்து வேறுபாடுகள் கொஞ்சம் கொஞ்சமாக விலகும். என்றாலும் சுக்ரன் 17-ந் தேதி வரை கேதுவுடன் சேர்ந்து சனியின் பார்வையை பெறுவதாலும் குடும்பத்தில் சலசலப்பு அவ்வப்போது இருக்கத்தான் செய்யும். ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்துப் போவது நல்லது. கூடாப்பழக்க வழக்கங்களை தவிர்ப்பது நல்லது. மனைவிக்கு சந்தேகம் வரும் வகையில் மற்றவர்களிடம் பழக வேண்டாம். உங்களுடைய ராசிக்கு 12-ல் செவ்வாய் தொடர்வதால் பிள்ளையார் பிடிக்க குரங்கான கதையாக நீங்கள் ஒன்று நினைக்க சில விஷயங்கள் வேறுவிதமாகப் போய் முடியும். நீங்கள் சாதாரணமாகப் பேசுவதைக் கூட சிலர் வேறு விதமாகப் புரிந்துக் கொள்வார்கள். சகோதரங்களுடன் மனக்கசப்பு வந்து நீங்கும். ராசிக்குள்ளேயே சனியும், ராகுவும் நிற்பதால் பெரிய நோய்கள் இருப்பதைப் போல் சில அறிகுறிகள் எல்லாம் தெரியும் பயந்துவிடாதீர்கள். இந்த மாதம் வரை குரு உங்கள் ராசியை பார்த்துக் கொண்டிருப்பதால் பெரிய பாதிப்புகள் எதுவும் இல்லாமல் போகும். உங்களுடைய ராசிக்கு 8-ம் வீட்டில் புதன் மறைந்திருப்பதால் நண்பர்கள், உறவினர்களால் செலவினங்கள் இருக்கும். வெளிநாடு செல்ல விசா கிடைக்கும். அயல்நாட்டிலிருப்பவர்களும் உதவுவார்கள். கன்னிப் பெண்களே! உயர்கல்வியில் வெற்றி உண்டு. நேர்முகத் தேர்வில் வெற்றி பெற்று புது வேலையில் அமரும் அமைப்பு உண்டாகும். கல்யாணப் பேச்சு வார்த்தை சாதகமாகும். வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும். பழைய பாக்கிகளும் வசூலாகும். பங்குதாரர்களுடன் இருந்து வந்த பிணக்குகள் நீங்கும். வேலையாட்கள் நிலைமையைப் புரிந்துக் கொண்டு உங்களுக்கு ஒத்துழைப்பு தருவார்கள். உத்தியோகத்தில் அதிகாரிகளுடன் கருத்து மோதல்கள் வந்து நீங்கும். சக ஊழியர்களால் மறைமுக எதிர்ப்புகள் வந்து நீங்கும். கலைத்துறையினரே! உங்களின் படைப்புத் திறன் வளரும். பழைய நிறுவனத்திலிருந்து புது வாய்ப்புகள் வரும். ஈகோவாலும், உணர்ச்சிகரமான முடிவுகளாலும் சில வாய்ப்புகளை இழக்கும் மாதமிது. பரிகாரம்: ராமர் பட்டாபிஷேக ஸ்ரீபக்த ஆஞ்சநேயரை வணங்குங்கள். தயிர் சாதம் தானமாக கொடுங்கள்.

விருச்சிகம்
பாகுபாடு பார்க்காமல் பழகுபவர்களே! 20-ந் தேதி வரை உங்களுடைய ராசிக்கு 6-ம் வீட்டிலேயே கேது நிற்பதால் மனக்கவலைகளெல்லாம் நீங்கும். புதிய முயற்சிகளெல்லாம் பலிதமாகும். தொட்ட காரியங்கள் துலங்கும். எதிர்ப்புகளையும் தாண்டி முன்னேறுவீர்கள். வழக்குகள் சாதகமாகும். மற்றவர்களை நம்பாமல் நீங்களே நேரடியாக சில முக்கிய காரியங்களில் ஈடுபடுவீர்கள். தைரியம் பிறக்கும். ஆன்மிகத்தில் ஈடுபாடு அதிகரிக்கும். ஆன்மிகத்தில் பெரிய பதவியில் இருப்பவர்களின் அறிமுகம் கிடைக்கும். 17-ந் தேதி வரை சுக்ரன் 6-ம் வீட்டில் மறைந்திருப்பதால் மனைவிக்கு மருத்துவச் செலவுகள் அதிகரிக்கும். அவருடன் கருத்து மோதல்களும் வரும். சிறுசிறு வாகன விபத்துகள் வந்து நீங்கும். மின் சாதனங்கள், மின்னணு சாதனங்களையெல்லாம் கவனமாக கையாளுங்கள். அடிக்கடி பழுதாகும். போட்டித் தேர்வுகள், நேர்முகத் தேர்வுகளிலும் வெற்றி பெறுவீர்கள். உறவினர், நண்பர்கள் வீட்டு விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். உங்கள் ராசிநாதன் செவ்வாய் லாப வீட்டிலேயே அமர்ந்திருப்பதால் பிரச்னைகளை சமாளிக்கும் சக்தி கிடைக்கும். சகோதரங்கள் ஒத்தாசையாக இருப்பார்கள். சொத்துப் பிரச்னை தீரும். குழப்பமான மனநிலையிலிருந்து விடுபட்டு தெள்ளத் தெளிவாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். ஏழரைச் சனி தொடர்வதால் திடீரென்று அறிமுகமாகுபவர்களை வீட்டிற்கு அழைத்து வர வேண்டாம். புதியவர்களை நம்பி பெரிய முடிவுகள் எடுக்க வேண்டாம். புது முதலீடுகள் செய்வதற்கு முன்பாக யோசித்து முடிவெடுப்பது நல்லது. கன்னிப் பெண்களே! புதிய நண்பர்களால் உற்சாகமடைவீர்கள். உயர்கல்வியில் வெற்றி உண்டு. வேலைக் கிடைக்கும். கல்யாணப் பேச்சு வார்த்தை சுமூகமாக முடியும். வியாபாரத்தில் பிற்பகுதியில் லாபம் உண்டு. வேலையாட்களை தட்டிக் கொடுத்து வேலை வாங்குவீர்கள். உத்தியோகத்தில் இடமாற்றம் உண்டு. அயல்நாடு செல்ல விசா கிடைக்கும். சிலருக்கு அயல்நாடு தொடர்புடைய அலுவலகத்தில் வேலை கிடைக்கும். பழைய சம்பள பாக்கி கைக்கு வரும். கலைத்துறையினரே! தள்ளிப் போன வாய்ப்புகள் கூடி வரும். சகிப்புத் தன்மையும், விட்டுக் கொடுக்கும் மனப்பான்மையும் தேவைப்படும் மாதமிது. பரிகாரம் ஸ்ரீவெங்கடாஜலபதியை வணங்குங்கள். சுப்ரபாதம் பாடுங்கள். கண் பார்வை அற்றவர்களுக்கு உதவுங்கள்.

தனுசு
நெருக்கடி நேரத்திலும் தன்னிலை தவறாதவர்களே! சூரியன் 14-ந் தேதி வரை உங்கள் ராசிக்கு 6-ம் வீட்டில் அமர்ந்திருப்பதால் குடும்பத்தில் கலகலப்பான சூழல் உருவாகும். பிரிந்துச் சென்றவர்கள் ஒன்று சேருவீர்கள். பிள்ளைகளால் இருந்து வந்த பிரச்னைகள் தீரும். அவர்களுடனான மனவருத்தங்களும் நீங்கும். தடைப்பட்ட அரசு காரியங்கள் நல்ல விதத்தில் முடியும். வீடு கட்டுவதற்கு ஃப்ளான் அப்ரூவலாகி வரும். வங்கிக் கடன் உதவியும் கிடைக்கும். அரசியல்வாதிகள் உதவுவார்கள். ஆன்மிகத்தில் நாட்டம் அதிகரிக்கும். வேலைக்கு விண்ணப்பித்திருந்தவர்களுக்கு வேலைக் கிடைக்கும். போட்டித் தேர்வுகளில் கலந்துக் கொண்டு வெற்றி பெறுவீர்கள். குடும்ப பாகப்பிரிவினை பிரச்னைகள் முடிவுக்கு வரும். பூர்வீக சொத்து சம்பந்தப்பட்ட வழக்குகள் சாதகமாகும். சுக்ரன் சாதகமான வீடுகளில் செல்வதால் புதிய முயற்சிகள் பலிதமாகும். பழைய கடன் பிரச்னை கட்டுக்குள் வரும். வாகனத்தை சீர் செய்வீர்கள். சிலர் புது வண்டி வாங்குவீர்கள். உங்களுடைய பூர்வ புண்யாதிபதியான செவ்வாய் 10-ல் நிற்பதால் குழந்தை பாக்யம் கிடைக்கும். மகளுக்கு நல்ல வரன் அமையும். மகனின் பொறுப்பற்றப் போக்கு மாறும். நகரை ஒட்டி வீடு, மனை வாங்குவீர்கள். சகோதரங்கள் பக்கபலமாக இருப்பார்கள். கன்னிப் பெண்களே! பள்ளிக் கல்லூரி கால தோழியை சந்திப்பீர்கள். பெற்றோர் உங்களின் புதிய திட்டங்களை ஆதரிப்பார்கள். அயல்நாடு தொடர்புடைய நிறுவனத்தில் வேலைக் கிடைக்கும். சனி வக்ரம் பெற்றிருந்தாலும் உங்களுடைய ராசிநாதனின் சாரத்தில் செல்வதால் வியாபாரம் செழிக்கும். அதிரடி லாபம் உண்டு. வாடிக்கையாளர்களை கவர புது சலுகைகளை அறிவிப்பீர்கள். உத்தியோகத்தில் உயரதிகாரிகள் சில ரகசியப் பொறுப்புகளை ஒப்படைப்பார்கள். சக ஊழியர்கள் மத்தியில் உங்கள் கருத்திற்கு ஆதரவு கிடைக்கும். கலைத்துறையினரே! பொது நிகழ்ச்சிகளில் தலைமை தாங்கும் அளவிற்கு பிரபலமாவீர்கள். உங்களுடைய புதிய சிந்தனைகள் எல்லோராலும் பாராட்டப்படும். நினைத்ததை நிறைவேற்றிக் காட்டும் மாதமிது. பரிகாரம் மதுரை ஸ்ரீமீனாட்சியம்மனை வணங்குங்கள். அபிராமி அந்தாதி படியுங்கள். பசுவுக்கு பழம் கொடுங்கள்.

மகரம்
தன்மானம் தவறாதவர்களே! உங்கள் ராசிக்கு யோகாதிபதியான சுக்ரன் சாதகமான வீடுகளில் செல்வதால் நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்து வந்த வேலைகள் நல்ல விதத்தில் முடியும். குடும்ப வருமானம் உயரும். பதுங்கியிருந்தவர்கள் வெளியே வருவீர்கள். எதிர்ப்புகள் அடங்கும். வி. ஐ. பிகள் உங்களுக்கு ஆதரவாக இருந்து உங்களுடைய பழைய பிரச்னைகளை தீர்ப்பதற்கு உறுதுணையாக இருப்பார்கள். சிலர் பழைய வீட்டை விற்று விட்டு புது வீடு வாங்குவீர்கள். எதிர்பார்த்திருந்த தொகை கைக்கு வரும். கணவன்-மனைவிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும். நல்ல காற்றோட்டம், தண்ணீர் வசதியுள்ள வீட்டிற்கு மாறுவீர்கள். சொத்துக்களில் இருந்த வில்லங்கம் விலகும். கடந்த ஓராண்டு காலமாக உங்கள் ராசிக்கு 6-ம் வீட்டிலேயே அமர்ந்து உங்களை பாடாய்படுத்திக் கொண்டிருக்கும் குருபகவான் 13-ந் தேதி முதல் உங்கள் ராசிக்கு 7-ம் வீட்டில் அமர்வதால் நல்லதெல்லாம் நடக்கப்போகிறது. குடும்பத்தில் அமைதி திரும்பும். தடைப்பட்ட கல்யாணப் பேச்சு வார்த்தை சாதகமாக முடியும். புதனும் 5-ல் நிற்பதால் சாமர்த்தியமாக சமாளித்து முன்னேறுவீர்கள். உங்கள் ராசிக்கு 9-ம் வீட்டில் செவ்வாய் நிற்பதால் தந்தையாருடன் மனத்தாங்கல் வரும். எவ்வோ சம்பாதித்தும் எதுவும் கையில் மீளவில்லையே என்ற ஒரு ஆதங்கமும் உள்மனதில் இருந்துக் கொண்டேயிருக்கும். உங்கள் ராசிநாதன் சனிபகாவன் வக்ரமாகி நிற்பதால் வேலைச்சுமை அதிகரிக்கும். மனதில் இனந்தெரியாத கவலையும், ஒருவித பயமும் இருக்கும். அவ்வப்போது தூக்கமும் குறையும். மற்றவர்களை நம்பி ஏமாறாதீர்கள். கன்னிப் பெண்களே! உற்சாகமாக காணப்படுவீர்கள். நல்லவர்களின் நட்பு கிடைக்கும். கூடாப்பழக்க வழக்கமுள்ளவர்களை விட்டுப் பிரிவீர்கள். உங்கள் ரசனைக் கேற்ப வரன் அமையும். வியாபாரத்தில் இந்த மாதத்தில் கணிசமாக லாபம் கூடும். புதிய வாடிக்கையாளர்களை இழுக்க புது திட்டங்கள் தீட்டுவீர்கள். பழைய வாடிக்கையாளர்களால் உற்சாகமடைவீர்கள். உத்தியோகத்தில் உங்களிடம் ஆலோசனைக் கேட்டு விட்டு அதை தாங்கள் யோசித்ததாக மூத்த அதிகாரிகளிடம் சிலர் நல்ல பெயர் வாங்கிக் கொள்வார்கள். உங்கள் திறமைகளை நேரடியாக மூத்த அதிகாரிகளிடம் சிலர் கொண்டு செல்ல மறுப்பார்கள். கலைத்துறையினரே! கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லையே என்று கலங்கி நிற்பீர்கள். இளைய கலைஞர்கள் மூலமாக ஆதாயமடைவீர்கள். தொலை நோக்குச் சிந்தனையால் சாதிக்கும் மாதமிது.

கும்பம்
மகிழ்வித்து மகிழ்பவர்களே! உங்களின் பூர்வ புண்யாதிபதியான புதன் 4-ம் வீட்டில் கேந்திர பலம் பெற்று வலுவாக காணப்படுவதால் மகிழ்ச்சி, பணவரவு உண்டு. தைரியமாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். உங்களின் புதிய திட்டத்திற்கு மனைவியின் ஆதரவு கிடைக்கும். மனைவிவழி உறவினர்களும் ஒத்தாசையாக இருப்பார்கள். 12-ந் தேதி வரை குரு 5-ம் வீட்டில் தொடர்வதால் வீடு, மனை வாங்கும் யோகம் உண்டாகும். பூர்வீக சொத்துப் பிரச்னையில் ஒருபகுதி தீர வாய்ப்பிருக்கிறது. வழக்குகளும் சாதகமாக முடியும். செவ்வாய் 8-ல் தொடர்வதால் மனஇறுக்கமும், எதிர்காலம் பற்றிய பயமும், எந்த காரியத்தை தொட்டாலும் தாமதமாக முடியும் போக்கும் உண்டாகும். சகோதரங்களால் அலைச்சல் இருக்கும். முழுமையாக யாரையுமே நம்ப முடியவில்லையே என்று ஆதங்கப்படுவீர்கள். கணவன்-மனைவிக்குள் ஈகோப் பிரச்னையால் சண்டைகள் வந்து நீங்கும். பிரபல யோகாதிபதியான சுக்ரன் சாதகமான வீடுகளில் இந்த மாதம் முழுக்க செல்வதால் விலை உயர்ந்த ஆடை, ஆபரணங்கள் வாங்குவீர்கள். கோபம் குறையும். பழுதாகிக் கிடந்த வாகனத்தை மாற்றி புதுசு வாங்குவீர்கள். பெற்றோருடனான மனத்தாங்கல் விலகும். அக்கம்-பக்கம் வீட்டாருடன் இருந்து வந்த சண்டை, சச்சரவு குறையும். கன்னிப் பெண்களே! தோலில் இருந்த நமைச்சல், அலர்ஜி நீங்கும். அழகுக் கூடும். உயர்கல்வியிலும் வெற்றி பெறுவீர்கள். தோழிகளுடன் இருந்த மோதல்கள் விலகும். வியாபாரத்தில் அதிரடியான திட்டங்கள் தீட்டுவீர்கள். சந்தை நிலவரத்தை அறிந்து அதற்கேற்ப புது முதலீடுகள் செய்வீர்கள். வேலையாட்களின் ஆதரவுக் கிட்டும். 8-ல் செவ்வாய் நிற்பதால் பங்குதாரர்களில் ஒருவர் உங்களை ஆதரித்தாலும், மற்றொருவர் உங்களுக்கு எதிராக செயல்படுவார். உத்தியோகத்தில் இந்த நேரம் என்னாகுமோ, வேலையில் நீடிப்போமோ, நீடிக்க மாட்டோமோ என்ற ஒரு அச்சம் இருக்கும். தேவைப்பட்டால் உங்களுடைய முழு புத்திசாலித்தனத்தை பயன்படுத்துங்கள். இல்லாவிட்டால் அடக்கமாக, அமைதியாக இருந்துவிடுங்கள். சில நேரங்களில் மௌனமாக இருப்பது நல்லது. கலைத்துறையினரே! காலத் தாமதமாக இருந்து வந்த விஷயங்களெல்லாம் நல்ல விதத்தில் முடியும். சம்பள பாக்கி கைக்கு வரும். உங்கள் திறமைக்கு அங்கீகாரம் கிட்டும் மாதமிது. பரிகாரம்: நவக்கிரத்தில் ஸ்ரீசனிபகவானுக்கு பகவானுக்கு எள் தீபம் ஏற்றுங்கள். திருவருட்பா படியுங்கள். வேப்ப மரக்கன்று நடுங்கள்.

மீனம்
தொட்ட காரியத்தை ஓய்வெடுக்காமல் முடிப்பவர்களே! 12-ந் தேதி வரை உங்கள் ராசிநாதன் குரு இந்த மாதம் வரை 4-ம் வீட்டில் அமர்ந்திருப்பதால் அலைச்சல், செலவுகள் இருக்கும். எந்த வேலையை தொட்டாலும் இழுபறியாகி முடியும். நட்பு வட்டத்தில் விரிசல்கள் உண்டாகும். 13-ந் தேதி முதல் 5-ம் வீட்டில் குரு நுழைவதால் பிள்ளைகளால் இருந்த பிரச்னைகள் விலகும். அவர்களுடனான மோதல் போக்கு மாறும். மழலை பாக்யம் கிடைக்கும். கூடாப்பழக்க வழக்களிலிருந்து விடுபடுவார். உங்களுடைய ஆலோசனைகளை பிள்ளைகள் ஏற்று நடப்பார்கள். அஷ்டமத்துச் சனி நடைபெறுவதால் மற்றவர்களுக்கு நல்லது செய்தாலும் அது தீங்காக போய் முடியும். நீங்கள் யதார்த்தமாகப் பேசுவதைக் கூட சிலர் தவறாகப் புரிந்துக் கொள்வார்கள். எப்படிப் பேசுவதென்றே தெரியவில்லையே என்று சில நேரங்களில் புலம்புவீர்கள். சூரியன் சாதகமான வீடுகளில் செல்வதால் தந்தையாருடன் இருந்த மனவருத்தங்கள் நீங்கும். அவரின் உடல் நிலையும் சீராகும். யதார்த்தமாகவும், இங்கிதமாகவும் பேசி சில முக்கிய காரியங்களை முடிப்பீர்கள். அரசு காரியங்கள் சாதகமாக முடியும். உள்மனதில் இருந்து வந்த குழப்பமும், பயமும் விலகும். குடும்ப வருமானத்தை உயர்த்த வழி கிடைக்கும். அதிக வட்டிக் கடனை குறைந்த வட்டிக் கடனால் சரி செய்ய வாய்ப்பிருக்கிறது. சுக்ரன் உங்கள் ராசிக்கு சாதகமாக இருப்பதால் சமூகத்தில் பெரிய பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். அவர்களால் ஆதாயம் உண்டு. கணவன்-மனைவிக்குள் இருக்கும் கருத்து மோதல்கள் குறையும். ஒருவருக்கொருவர் மனம் விட்டு பேசி நல்ல முடிவுகள் எடுப்பீர்கள். வெளிநாடு செல்ல விசா கிடைக்கும். திருமணம் தள்ளிப் போனவர்களுக்கு நல்ல வரன் அமையும். கன்னிப் பெண்களே! உங்களுக்கிருந்த தாழ்வுமனப்பான்மை குறையும். பெற்றோரின் அனுபவ வார்த்தைகள் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்றுத் தீரும். கடையை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டிய நிர்பந்தத்திற்கு ஆளாவீர்கள். உத்தியோகத்தில் உயரதிகாரிகள் பாரபட்சமாக நடந்துக் கொள்வார்கள். கூடுதல் நேரம் ஒதுக்கி நீங்கள் உழைத்தப் போதும் அதற்கு எவ்வித பாராட்டும் இல்லாமல் போகும். புது வேலைக் கிடைக்கும். கலைத்துறையினரே! தள்ளிப் போன வாய்ப்புகள் இப்போது மீண்டும் தொடங்கும். போராட்டத்தில் வெற்றி பெறும் மாதமிது. பரிகாரம்: ஸ்ரீகால பைரவரை வணங்குங்கள். திருவாசகம் படியுங்கள்.

 

Category: மாத ராசிபலன் | Added by: m_linoj (2014-06-14)
Views: 728 | Rating: 0.0/0
Total comments: 0
Only registered users can add comments.
[ Sign Up | Login ]