சேவைகள் |
CATEGORIES | |||||||
|
கணினி |
கவிதைகள் |
பெண்கள் உலகம் |
சிறுவர் பூங்கா |
உடல்நலம் |
தமிழ் சினிமா |
ஆன்மீகம் |
நகைச்சுவை(ங்க...)! | ||||||
|
Email Subscribe |
Serch |
|
Statistics |
Online Users |
|
Site Friend |
|
இணைப்பு கொடுக்க |
Code : |
Vote Plz.. |
|
Main » Articles » கவிதைகள் » காதல் வலி கவிதைகள் | [ Add new entry ] |
காதலெனும் நோயில்..!
மாமன் உந்தன்நெஞ்சி லெந்தன் மனமுறங்காதோ சோலையிலே கிளியுறங்கும் சொல்லுங் குயில் தானுறங்கும் சுந்தரமென் கூந்தல் மணம் கண்டு றங்காயோ ஓலையிலே காற்றுவந்து ஓசையிடப் பாட்டிசைக்கும் ஊமையிவள் பாடுங்குரல் உனையழைக்காதோ காலையிலே பூமலரும் காற்றில்மணி யோசைவரும் கற்பனையில் நீயிருப்பாய் கண்முன் எழாயோ நீலவிழி மையெழுதி நினவிலுந்தன் மயலெழுதி நீந்துகிறேன் கனவில் என்றும் நேரில்வாராயோ வேலெறியும் விழியிலிவள் வேதனைதான் மீந்ததென்று விரகமிடும் பனிவிலக வெம்மை தாராயோ கோலமுகம் விண்ணுலவும் குளிர்நிலவின் விம்பமென்றார் கூடுமொரு வான்முகிலாய் குலவ வாராயோ பாலமுதம் போலவெனப் பனிமலரும் நீயெனவே பார்த்துஒரு சேதிசொல்லப் பக்கம் வாராயோ ஆடிவரும்தென்றலெனில் ஆக்கும்துயர் கொஞ்சமல்ல அத்தனையும் நீக்கியுளம் அன்புகொள்ளாதோ கூடிவரும் பூவின்மணம் கொல்லுதய்யா உன்நினைவில் கொண்டதுவோர் துன்பந்தனைக் கிள்ள வாராயோ கோடியெனத் தன்னருகில் கொள்ளியெழிற் தாரகைகள் கொட்டிகிடந்தென்ன மதி கூடிவிடாதே ஓடிஒரு சோடியினை உள்ளமதிற் காணும்வரை ஒவ்வொருநாள் தேய்ந்துமது ஒய்ந்துவிடாதே பூவில்மது உண்ணுவண்டு போய்விடவே துன்பம்வரும் போதிலொரு சோலைமலர் வாடிடுமாமே ஆவியிலே நீகலந்து ஆகிவிட்டோம் ஒன்றெனவே ஆ உயிரே நீஇலையேல் அழிந்திடுவேனே கோவிலிலே பார்த்த சிலை குறுநடையில் போகுதடா குமரியிவள் பேரழகு என்றதும் ஊரே ஆவியிலே பேய்கலந்து ஆனதுவோ கோலமென்ன ஆகஇவள் நோய்பிடித்தாள் என்றது மின்றே! நூல்திரிந்து போனதென நெய்விழியாள் ஆனதென்ன நீயிருந்து ஆடைநெய்ய நேர்ந்திடும் வாழ்வே கால் இருந்து உச்சிவரை காதலெண்ணி நோயெடுத்தேன் கன்னியென்னைக் காத்துவிட கைதொடுநீயே வேல்விழியில் நீரெடுத்து விழிகலங்கி பார்வைகெட்டு வேதனையில் கூவுகிறேன் விடிவு தாராயோ வால்முளைத்த வெள்ளியொன்று வானிறங்கக் கனவுகண்டேன் வாழ்வில் இவள் முடியமுன்னே வந்துவிடாயோ | |
Views: 1583 | |
Total comments: 0 | |