உந்தன் ஓர் வார்த்தையால்
நீ சொன்ன ஒரு வார்தையே உன்னிடம் இருந்து என்னை பிரித்து விட்டது உன்னை மறக்கின்றேன் என்று சொல்லி உன்னை விட்டு பிரிந்தேன் எல்லாம் உந்தன் ஓர் வார்தையால் உன்னோடு பேச இனி என்னிடம் வார்த்தை இல்லை என்று சொல்லி உன் தொடர்பை துண்டித்தேன் உந்தன் ஓர் வார்த்தையால் உன்னை மறந்து விட்டேன் என்று சொல்லி உந்தன் நினைவுகளுடன் தினம் தினம் மரணிக்கின்றேன் உந்தன் ஓர் வார்த்தையால் உனக்காய் உன்னை விட்டு நான் பிரிந்தாலும் என்னால் உன்னை விட்டு பிரிந்து போக முடியவில்லை உன் இன்பத்துக்காக உன்னை விட்டு போகின்றேன் உன்னோடு நட்போடு என்றும் இருப்பேன்...
Source: http://linoj.do.am |
Category: காதல் வலி கவிதைகள் | Added by: MohamedSafeek (2011-06-29)
| Author: Mohamed Safeek E W
|
Views: 1889
| Rating: 5.0/1 |