இறுதியாக கேட்டுச் செல்!
வேண்டும் என்று
எமை விரட்டி வரும்
வேண்டாத வேதனைகள்!
ம்…!
பிரிவுகள் என்பது
உனக்குள்ளும் எனக்குள்ளும்
இறுதிவரை இல்லை
என்றுதானே இருவரும்
இறுமாப்புக் கொண்டிருந்தோம்…?
இதற்குள் எப்படி
இருவரையும் மீறி
இப்படி ஒரு பிரிவு…?
ஓ…!
என் மனதை
புரிந்து கொள்ளாமல்…
பூ மீது
ஆணி அடிக்கும்
வலியை தந்து
பிரிந்து செல்கிறேன் என்கிறாய்!
ம்… சரி
பிரியப் போகும் இவ்வேளையில்
ஒன்று சொல்கிறேன்
இதையும்
இறுதியாக கேட்டுச் செல்!
பிரிவு என்பது
எனக்கும் உனக்கும் மட்டும்தான்
நம் காதலுக்கு அல்ல
Source: http://sathiya.wordpress.com/ |
Category: காதல் வலி கவிதைகள் | Added by: m_linoj (2009-07-10)
|
Views: 2909
| Rating: 4.0/2 |