சேவைகள் |
CATEGORIES | |||||||
|
கணினி |
கவிதைகள் |
பெண்கள் உலகம் |
சிறுவர் பூங்கா |
உடல்நலம் |
தமிழ் சினிமா |
ஆன்மீகம் |
நகைச்சுவை(ங்க...)! | ||||||
|
Email Subscribe |
Serch |
|
Statistics |
Online Users |
|
Site Friend |
|
இணைப்பு கொடுக்க |
Code : |
Vote Plz.. |
|
Main » Articles » கவிதைகள் » காதல் கவிதைகள் | [ Add new entry ] |
காதலின்றி வேறில்லை
பட்டாம்பூச்சியின் வண்ணச்சிறகில் கைகள் கோர்த்து அமர்ந்திருக்கிறோம் நாம். வானமெங்கும் சுற்றித்திரிந்த பட்டாம்பூச்சி பூவொன்றின் இதழ்களில் உன்னை இறக்கிவிடுகிறது. பூவுக்குள் ஓடி மறைகிறாய் நீ. பூக்களின் பெயர்க்காரணத்தை உலகிற்கு அறிவிக்கிறேன் நான்! *** ஓடிவந்து என் கழுத்தைக் கட்டிக்கொண்டு உன் கன்னம் உரச நீ பேசும்பொழுதெல்லாம் விதவித வண்ணங்களாய் என்னுள் பெய்கிறது மழை. *** உனக்கு பிடித்த மண்வாசத்தில் நீயும் எனக்கு பிடித்த உன்வாசத்தில் நானும் ஒற்றை குடைக்குள் விரல்கள் கோர்த்து மெளனித்து நடக்கிறோம். விரல்களின் ஸ்பரிசத்தில் வலுக்கிறது காதல்மழை. *** சிப்பிக்குள் ஒளிந்திருக்கும் முத்தைப்போல் உன் கன்னக்குழிக்குள் ஒளிந்திருக்கிறது எனக்கான காதல்புன்னகை! Source: http://www.nilaraseeganonline.com/2009/03/blog-post_20.html | |
Views: 3007 | |
Total comments: 0 | |