நாம் கணினியில் இருக்கும் தகவல்கள், படங்கள், பாடல்கள் ஆகியவற்றைப்
பாதுகாப்பதற்காக அவற்றை குறுந்தகடுகளான சிடி/டிவிடி ஆகியவற்றில் பதிந்து
வைக்கும் பழக்கத்தை உடையவர்கள்.
சாதாரணமாக CD/ DVD களில் தகவல்களை ஏற்றும் செயலை burning என்போம்.
Blue Ray என அழைக்கப்படும் வட்டுகள் வழமையான CD / DVD யைப் போலவே
தோற்றத்தில் இருப்பினும் அவை அதிக அளவிலான நினைவகத்தைக் கொண்டுள்ளன. 25 GB
முதல் 50 GB வரையிலான கொள்ளளவைக் கொண்டுள்ளன.
இந்த நீலக்கதிர் வட்டுகளில் (Blue Ray Disc) தகவல்களை ஏற்றிட 5 இலவச மென்பொருட்களை இங்கே காண்போம்.
DVD Burner
இந்த மென்பொருள் பயன்பாடுகளின் மூலம் Windows boot Disk ஐ உருவாக்கிக்கொள்ளலாம்.
ஒரு முறை தகவலை ஏற்றிவிட்டு, மீண்டும் அதே டிஸ்க்கில் தொடர்ந்து பதிவும் வசதி உண்டு (multi session)
ஒலி வட்டுகள் - MP3 ஆகியவற்றை உருவாக்கிடலாம்.
வேகமான இயக்கத்தை உடையவை.
Windows NT/2000/XP/Vista (32 and 64 Bit)ஆகியவற்றுடன் ஒத்திசைவு கொண்டவை.
ISO எனப்படும் இமேஜ் கோப்புகளை உருவாக்கிடலாம்.
BIN / NRG கோப்பு வகைகளில் இருந்து ISO வகைக்கு மாற்றிட உதவும்.
சுட்டிகள் : http://burnaware.com/index.html
http://cdburnerxp.se/
http://www.binarymagic.com/free.html
http://imgburn.com/
http://www.ashampoo.com/ |