Main »
2009 » சித்திரை » 3 » கணினியின் தேவையற்ற காலி ஃபோல்டர்களை அழிப்பதற்கு
11:09 AM கணினியின் தேவையற்ற காலி ஃபோல்டர்களை அழிப்பதற்கு |
நம் கணினியில் இயங்குதளத்துடன் (Operating System) வேறு ஏதேனும்
மென்பொருட்களை (Software applications) நிறுவும்போது, சில ஃபோல்டர்கள்
உருவாகும். பின் வேறு ஒரு காரணத்துக்காக அந்தப் பயன்பாட்டினை
கணினியிலிருந்து அழிப்பதற்காக Uninstall செய்வோம். ஆனால் அது குறிப்பிட்ட
சில ஃபோல்டர்களை (folders) அழிக்காமலேயே விட்டுவிடும்.
இது போல கணினியில் தேவையில்லாத காலி ஃபோல்டர்கள் (empty folders)
நிறைய உருவாகி இருக்கும்.தவறுதலாக நாமே New Folder உருவாக்கி
இருப்போம்.ஆனால் அழிக்க மறந்திருப்போம்.
இப்படி நம் கணினியின் வன் வட்டு என்றழைக்கப்படும் hard disk ல் ஏற்கனவே
உருவாகி இருக்கக்கூடிய அனைத்து empty folders ஐயும் கண்டுபிடித்து
அழிப்பதற்காக ஒரு மென்பொருள் உள்ளது. அதன் பெயர் Fast Empty Folder Finder.
இதன் மூலம் தேவையற்ற காலி ஃபோல்டர்களை கண்டறிவதுடன் அவற்றை ஒரேயடியாக
அழித்துவிடவும் செய்யலாம். இப்படிச் செய்த பிறகு கணினியின் hard diskன்
செயல்பாட்டின் வேகம் அதிகரிக்கும். நல்ல இயங்குதிறன் நமக்குக் கிடைக்கும்.
தரவிறக்கச் சுட்டி : உங்களுக்கு இந்தப் பயன்பாட்டினைப் பிடித்திருந்தால் இங்கே சொடுக்கி தரவிறக்கம் செய்யலாம். |
Views: 743 |
Added by: m_linoj
| Rating: 0.0/0 |