Main »
2009 » பங்குனி » 26 » ரிச் காப்பி - கோப்புகளை அதி வேகமாகக் காப்பி செய்வதற்கு
1:26 PM ரிச் காப்பி - கோப்புகளை அதி வேகமாகக் காப்பி செய்வதற்கு |
விண்டோஸ்
நிறுவப்பட்ட கணினிகளில் கோப்புகளைக் காப்பி (copy) செய்யும்போதும்,
வேறிடத்துக்கு நகர்த்தும்போதும் (move) மிகுதியான வேகம் கொண்ட
இயங்குதிறனைப் பெறுவதற்காக ஒரு மென்பொருளை மைக்ரோசாப்ட் வெளியிட்டுள்ளது.
இதன் பெயர் ரிச்காப்பி (Rich Copy)
முதன் முதலில் ரிச்காப்பி வெளியிடப்பட்ட ஆண்டு 1996.
நெட்வொர்க்கின்
வளங்களை (network resources) மிகக் குறைந்த அளவு மட்டும் பயன்படுத்தி
கோப்புகளைக் காப்பி செய்வதால் இதன் வேகம் மிக அதிகமாக இருக்கிறது.
பொதுமக்களின் பயன்பாட்டுக்காக இந்தக் கருவி இப்போதுதான் வெளியிடப்பட்டுள்ளது.
இவ்வளவு நாட்களாக மைக்ரோசாப்ட் (Microsoft) நிறுவனத்தில் பணிபுரிவோர்கள் மட்டுமே இதைப் பற்றி அறிவர்.
இது
இன்றுமுதல் மார்ச்,24,2009 அனைவரது பயன்பாட்டுக்காகவும் என விதிமுறைகள்
தகர்த்தப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது. விண்டோஸ் பயனர்கள் யாவரும் இதை
இணையிறக்கம் செய்து பயன்படுத்தலாம்.
இதன் தற்போதைய நவீன வெர்சன் ரிச்காப்பி 4.0. வேறு எந்த காப்பி செய்யும் பயன்பாடுகளைக் காட்டிலும் இதுதான் வேகம் அதிகமானது.
ஒன்றுக்கு மேற்பட்ட இடங்களில் இருக்கும் கோப்புகளைத் தேர்வு செய்து ஒரே ஒரு குறிப்பிட்ட இடத்தில் காப்பி செய்யும் வசதி இதில் உண்டு.
(Copy from Multiple Source location) வழக்கமாக இந்த அம்சமானது CD / DVD burning செய்யும் பயன்பாடுகளில் மட்டுமே உண்டு.
இதனை GUI வடிவிலான கருவியாக மட்டும் அல்லாது, CUI எனப்படும் கட்டளை கொடுத்தும் இயக்கலாம்.
சாதாரணமாக நாம் கோப்புகளைக் காப்பி செய்யும்போது அதில் resume support (விட்டு விட்டு காப்பி செய்தல்) என்கிற வசதி இருக்காது.
ஒரே நேரத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட கோப்புகளைக் காப்பி செய்யலாம்.
XCOPY என்னும் ஏற்கனவே உள்ள கட்டளையைப் போன்று 8 மடங்கு அதிகமான வேகத்தில் இயங்க வல்லது.
ஆனால் ரிச்காப்பி என்னும் இந்தப் பயன்பாட்டில் காப்பி செய்யும் நடவடிக்கையை தற்காலிகமாக நிறுத்திப் பிறகு தொடரும் வசதி இருக்கிறது.
தரவிறக்கச் சுட்டி : http://blogs.technet.com/keithcombs/archive/2009/03/22/richcopy-bulk-file-copy-tool-released-get-it-here.aspx |
Views: 652 |
Added by: m_linoj
| Rating: 0.0/0 |