Main »
2009 » பங்குனி » 26 » நவீன புகைப்படக் கருவிகளில் தகவல் இழப்பைத் தவிர்ப்பது எப்படி?
1:24 PM நவீன புகைப்படக் கருவிகளில் தகவல் இழப்பைத் தவிர்ப்பது எப்படி? |
வலையுலக நண்பர்களான நாமக்கல் சிபி , விழியன்
போன்றோர் அடிக்கடி தனது புகைப்படக் கருவியைத் தோளில் போட்டுக் கொண்டு
வெளியே கிளம்பிவிடுவர். எங்கேயாவது பட்சி சிக்குமா? புதிய கோணத்தில்
படங்கள் எடுப்போமே என துடிதுடித்து ஒரு புத்துணர்ச்சியுடன் இருப்பர்.
அவர்களது
கைவண்ணத்தை தனது கேமராவின் கோணத்தில் காண்பித்து புதிய பரிணாமத்தைக்
காட்சிப் படுத்துவர். அவரைப் போன்றோர்களுக்காகவே இந்தப் பதிவு.
ஏதோ
ஒரு காரணத்தால் கேமராவின் நினைவகம் எனப்படும் ஒரு சிறிய சிப் ஆனது
பாதிக்கப்பட்டு அதிலுள்ள தகவல்கள், புகைப்படங்கள், காணொளிகள் அழிந்துபோக
நேரிடலாம்.
அதனால் கடின உழைப்பால் எடுக்கப்பட்ட புகைப்படங்களை
இழக்க நேரிடும் அபாயம் உள்ளது. இந்த நேரத்தில் டிஜிடல் கேமராவின்
நினைவகத்தில் இருந்து தகவல்களை மீட்பதற்கு ஆர்ட்ப்ளஸ் எனப்படும் ஒரு மென்பொருள் உள்ளது.
இந்த
மென்பொருளைப் பயன்படுத்தி தகவல்களை மீட்டு எடுக்கலாம். மேலும் நீங்கள்
ஏற்கனவே ஃபார்மட் செய்திருந்த சிப்பில் இருந்தும் மீட்டெடுக்கலாம்.
1) எல்லாவிதமான நினைவகச் சிப்புகளையும் இந்த மென்பொருளால் கையாளலாம்.
2) ஃபார்மட் செய்யப்பட்ட சிப்பிலிருந்தும் தகவல்களை மீட்டெடுக்கலாம்.
3) விண்டோஸ் இயங்குதளத்தால் உணரப்படாத கார்டுகளில் இருந்தும் தகவல்களை இந்த மென்பொருளால் பார்வையிட இயலும்
4) JPG, TIF, RAW வகையைச் சேர்ந்த கோப்புகளையும், இன்னும் பல கோப்பு வகைகளையும் மீட்டு எடுக்கும் வசதி கொண்டது.
5) அனைத்து விண்டோஸ் இயங்குதளங்களுடனும் ஏற்புடையது
தரவிறக்கச் சுட்டி : http://www.artplus.hr/adapps/eng/dpr.htm
குறிப்பு : CNET Download தளத்தால் சோதிக்கப்பட்டு எந்தக் கெடுதியும் விளைவிக்காத மென்பொருள் எனச் சான்றிதழ் பெறப்பட்டது.
கலைச்சொற்கள்: புகைப்படக் கருவி - digital camera நினைவகம் - memory chip, memory card தகவல்கள் - data காணொளிகள் - videos தகவல் இழப்பு - data loss due to corruption மீட்பு - recovery ஃபார்மட் - Format கோப்பு வகைகள் - File types இயங்குதளம் - Operating System |
Views: 685 |
Added by: m_linoj
| Rating: 0.0/0 |