Main » 
2009 » பங்குனி » 20 » எளிய தமிழில் PHP - 07
| 3:47 PM  எளிய தமிழில் PHP - 07 | 
| 
				
			 
 
PHP எண்கணித வினைக்குறி
PHP எண்கணித வினைக்குறி (Arithmetic Operators)
 இந்த பதிவில் எண்கணித வினைக்குறி பற்றி பார்ப்போம் அதாவது (Arithmetic Operators)
 
 எண்கணித வினைக்குறி
 
 
 | வினைக்குறி | விவரிப்பு | எடுத்துக்காட்டு 
 | முடிவு 
 | 
|---|
  | + | கூட்டல் 
 | x=2 x+2
 | 4 |   | - | கழித்தல் 
 | x=2 5-x
 | 3 |   | * | பெருக்கல் 
 | x=4 x*5
 | 20 |   | / | வகுத்தல் 
 | 15/5 5/2
 | 3 2.5
 |   | % | Modulus (வகுத்தல் மீதி) 
 | 5%2 10%8
 10%2
 | 1 2
 0
 |   | ++ | அதிகரித்தல் 
 | x=5 x++
 | x=6 |   | -- | குறைத்தல் 
 | x=5 x--
 | x=4 | 
 மேலே உள்ள வினைக்குறிகளுக்கு இன்று எடுத்துக்காட்டுகள் பார்ப்போம் .
 
 அதிகரித்தல் மற்றும் கூட்டல்
 
 $X++ இதன் பொருள் X=X+1 அதே போல் $Y+2 இதன் பொருள் y=y+2
 
 
 எடு .கா
 
 
 
 $x=1;
 $x++;
 
 $y=2;
 $y=$y+1;
 
 echo "Addition : x:".$x;
 echo'
 ';
 echo "Addition : Y:".$y;
 echo'
 ';
 ?>
 
 
 
 இதன் வெளியீடு X : 2 Y :3
 
 
 குறைத்தல் மற்றும் கழித்தல்
 
 $X-- இதன் பொருள் X=X-1 அதே போல் $Y-2 இதன் பொருள் Y=Y-2
 
 எடு .கா
 
 
 
 $x=3;
 $x--;
 
 $y=3;
 $y=$y-1;
 
 echo "Subtraction : x:".$x;
 echo'
 ';
 echo "Subtraction : Y:".$y;
 echo'
 ';
 ?>
 
 
 
 இதன் வெளியீடு X : 2 Y: 2 
 பெருக்கல்
 
 $X*5 இதன் பொருள் x=x*5 சாதரணமாக $x=$x*$y என்று கொடுப்போம் ஆனால் இங்கே ஒரே ஒரு மாறியில் பெருக்கலை செய்கிறோம் .
 
 எடு கா :
 
 
 $x=4;
 $x*5;
 
 echo "Multiplication : x:".$x;
 
 ?>
 
 
 
 இதன் வெளியீடு X: 20  
 வகுத்தல்
 
 இதில் அதிகம் விளக்க டேத்வை இல்லை என்று நினைக்குறேன்.
 எடு .கா
 
 
 $x=10;
 $x/2;
 
 echo "Divison : x:".$x;
 
 ?>
 
 இதன் வெளியீடு X: 5
 
 
 Modulus (வகுத்தல் மீதி)
 
 இந்த வினைக்குறி நீங்கள் வகுத்தல் செய்யும் போது அதன் மீத தொகையை(Reminder) கொடுக்கும் .
 
 எடு கா.
 
 
 $x=10;
 $x/8;
 
 echo "Modulus : x:".$x;
 
 ?>
 | 
| Views: 767 | 
Added by: m_linoj
 | Rating: 0.0/0 |